கற்பழிப்பு வழக்கிலிருந்துபாலிவுட் இயக்குனர் தப்பினார் | கற்பழிப்பு வழக்கிலிருந்துபாலிவுட் இயக்குனர் தப்பினார் | Dinamalar

கற்பழிப்பு வழக்கிலிருந்துபாலிவுட் இயக்குனர் தப்பினார்

Added : நவ 06, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி: பாலிவுட்டின் பிரபல இயக்குனர் மதுர் பண்டார்கருக்கு எதிரான, கற்பழிப்பு வழக்கு குறித்த விசாரணையை, சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது.பாலிவுட்டின் பிரபல இயக்குனர், மதுர் பண்டார்கர். இவருக்கு, எதிராக, பாலிவுட் நடிகை, ப்ரீத்தி ஜெயின், 2004ல், போலீசில் புகார் கொடுத்திருந்தார். அவரது புகார்:இயக்குனர் மதுர் பண்டார்கர், என்னை திருமணம் செய்வதாக உறுதி அளித்திருந்தார். அவர் எடுக்கும் படங்களில், எனக்கு வாய்ப்பு அளிப்பதாகவும் கூறினார். இதனால், அவருடன் நெருக்கமாக இருந்தேன். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, என்னை, 16 முறை கற்பழித்தார்.ஆனால், என்னை திருமணம் செய்ய மறுத்து விட்டார். அதுபோல், படத்தில் நடிக்கவும் வாய்ப்பு அளிக்கவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டிருந்தது.தன் மீதான விசாரணையை ரத்து செய்யும்படி, மதுர் பண்டார்கர் தாக்கல் செய்த மனுவை, மும்பை ஐகோர்ட், தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், அவர் மனு செய்திருந்தார். இந்த மனு, நீதிபதிகள், எச்.எல். டாட்டூ, சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மதுர் பண்டர்கருக்கு எதிரான வழக்கை தொடர, ப்ரீத்தி ஜெயினுக்கு விருப்பம் இல்லை என, தெரியவந்துள்ளது. இந்த வழக்கில், மதுர் பண்டார்கர் மீது, எந்த தவறும் இல்லை என,மும்பை போலீசார் ஏற்கனவே அறிக்கை அளித்துள்ளனர். இந்த இரண்டு விஷயங்களின் அடிப்படையில், மதுர் பண்டார்கருக்கு எதிரான விசாரணையை, இந்த கோர்ட், தள்ளுபடி செய்கிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை