முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில்
இரவில் தொடர் மின்தடையால், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், வியாபாரம் செய்து
வருகின்றனர். முதுகுளத்தூரில், நேற்று முன்தினம் மதியம் 12-3:30, மாலை
4-5, 6-7, இரவு 8:30-9:30, 10- 11, 12-3, நேற்று அதிகாலை 4-5, காலை 6-10,
10.30 முதல் மதியம் 1 வரை. பரமக்குடியில் நேற்று முன்தினம் மாலை 6-7, 8-9,
இரவு 10-11, 12-1, 2-3, நேற்று அதிகாலை 4-5, காலை 6-9, 10 முதல் மதியம் 2
வரை மின்தடை செய்யப்பட்டது. கொசுக்கடியால் பொதுமக்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர். இன்வர்ட்டர் பேட்டரி "சார்ஜ்' ஆவதில்லை.
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், வியாபாரம் செய்கின்றனர். பலர் விரைவில்
கடைகளை அடைத்து விடுகின்றனர். பரமக்குடியில் ஜவுளிக்கடைகளில்
வாடிக்கையாளர்கள் நிறைந்திருக்கும் போது, திடீர் மின்தடையால், திருட்டு
பயமும் அதிகரித்துள்ளது. தீபாவளி வர்த்தகம் பெருமளவு பாதித்துள்ளதாக
வர்த்தகர்கள் தெரிவித்தனர்.திருவாடானை: திருவாடானையில் காலை 6-9, மதியம்
12-3.30, மாலை 6-7, 8-9, இரவு 10-12 நேரத்தை தவிர மற்ற நேரங்களில்
மின்வினியோகம் இல்லை.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.