மதுரை:மதுரையில் மீண்டும் 18 மணி நேர மின் வெட்டு அமலில் உள்ளது. இரவு மின்சாரம் எப்போது வரும், போகும் என தெரியாத நிலையில், கொசுக்கடியால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் இரண்டாவது வாரம் முதல் நவ., முதல் வாரம் வரை காற்றாலை மின் உற்பத்தி நடக்கிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 2,500 முதல் 4,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இந்தாண்டு காற்றின் வேகம் குறைந்ததால் மின் உற்பத்தி முடங்கியது. தற்போது சீசன் முடிந்துள்ளதால் காற்றாலை மின் உற்பத்திக்கும் வழியில்லை. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் ÷தவை. ஆனால், 3,000 முதல் 4,000 வரை பற்றாக்குறை உள்ளது. உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொண்டு செல்வதில் ஏற்படும் நஷ்டம், மின் நிலையங்களில், அவ்வப்போது ஏற்படும் இயந்திர
கோளாறு, மராமத்து காலங்களில் தடைபடும் மின் உற்பத்தி போன்ற காரணங்களால் மின் உற்பத்தி அளவு மின் உற்பத்தி திறனை விட குறைந்துள்ளது. இதனால் மதுரை மற்றும் மாவட்டத்தில் 18 மணி நேர மின்தடை நிலவுகிறது. இரவு நிலவும் கொசுக்கடியால் மக்கள் தூக்கமின்றி தவிக்கின்றனர். சமையல் வேலையை சரியாக செய்ய முடியவில்லை என பெண்கள் புலம்புகின்றன
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.