பொள்ளாச்சி:பொள்ளாச்சி
மற்றும் சுற்றுப்பகுதிகளில், மீண்டும் பல மணி நேரம் மின்வெட்டு அமலுக்கு
வந்தது. பண்டிகை நேரத்தில் மின்வெட்டு அதிகரிப்பதால் மக்கள் அதிருப்தி
அடைந்துள்ளனர்.
கடந்த ஒருவாரமாக மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களை தவிர
மற்ற இடங்களில் மழை பொழிவு இல்லை. பகல் நேரத்தில், கடும் வெயில்
சுட்டெரிப்பதால், மின்சாதன பொருட்களின் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது.
மின்பயன்பாடு அதிகரித்துள்ளதால், மூன்று நாட்களாக பொள்ளாச்சி பகுதியில்
மின்வெட்டு நேரம் அதிகரித்துள்ளது.பகலில், எட்டு மணி நேரமும், மாலை முதல்
நள்ளிரவு வரை எட்டு மணி நேரம் என மொத்தம் 16 மணி நேரம் மின்வெட்டு
ஏற்படுகிறது. மின்வெட்டு ஏற்படும் நேரம் குறித்து சரிவர அறிவிப்பு
இல்லாததால், மக்கள், தொழில் அமைப்பினர் உட்பட அனைவரும்
தவிப்புக்குள்ளாகியுள்ளனர். பள்ளிகளில், பருவ தேர்வு நடக்கும் நிலையில்,
இரவு நேரத்தில் மின்தடை ஏற்படுவதால் மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கும்
நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில்
மின்வெட்டால், பண்டிகை களையிழந்துள்ளதுடன், மின்வெட்டால் மக்கள் அதிருப்தி
அடைந்துள்ளனர்.
மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:மின்வெட்டு செய்யும்
நேரத்துக்கு அரைமணி நேரம் முன்னதாக ஈரோட்டில் இருந்து தகவல்
தெரிவிக்கப்படும். மீண்டும் தகவல் வரும் வரை மின்வெட்டு நீடிக்கும்.
எங்களுக்கும் இது குறித்து முறையான அறிவிப்பு இல்லை. மின்தடை ஏற்படாத
நேரத்தில், மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும்.
தேவையற்ற
நேரத்தில், விளக்குகளை எரிய விடாமல் அணைத்தால் மின்வெட்டு பாதியாக
குறையும் வாய்ப்புள்ளது. இது குறித்து மின்வாரியம் மூலம் விழிப்புணர்வு
ஏற்படுத்தப்படுகிறது. இருப்பினும், மக்கள் இதை பின்பற்றாததால், தவிப்பு
ஏற்படுகிறது. இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.