எம்.ஜி.ஆர்., துவங்கிய தமிழ் பல்கலைக்கு புத்துயிரூட்ட முதல்வர் ஜெ., நடவடிக்கை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

தஞ்சாவூர்: தஞ்சையில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., துவங்கிய தமிழ் பல்கலைக்கு புத்துயிரூட்டும் வகையில், கனடாவில் படிப்பு மையம், 25 துறைகளில் புதிய ஆய்வு திட்டத்துக்கு, ஒரு கோடி, 35 லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்து, முதல்வர் ஜெ., தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.தமிழ் பல்கலையை, 1981ம் ஆண்டு செப்., 15ம் தேதி, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., துவக்கி வைத்தார். அடுத்த, நான்கு நாட்களில் பல்கலையின் முதல் துணைவேந்தராக வ.அய்.சுப்பிரமணியம் பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து, தமிழ் பல்கலை நிதிப்பற்றாக்குறையிலும், அலுவலர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமலும் தத்தளித்து கொண்டிருந்த நேரத்தில், 11வது துணைவேந்தராக திருமலை கடந்த பிப்., 10ம் தேதி பொறுப்பேற்று, பணியாற்றி வருகிறார்.தமிழ் பல்கலையில், 89 பேராசிரியர்கள், 222 அலுவல்நிலை பணியாளர்கள் என, 311 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, 2006ம் ஆண்டு, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி உயர்த்தப்பட்ட சம்பளம் உள்ளிட்ட செலவுக்காக மாதம்தோறும், ஒரு கோடியே, 12 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.இதுதவிர பென்ஷனர்கள், 30 பேருக்கு பல்வேறு ஓய்வூதிய பலன்கள், மூன்று கோடியே, 77 லட்சம் ரூபாய் பல்கலை தரவேண்டியது நிலுவையில் உள்ளது. இதுதவிர தமிழ் பல்கலையில் இலக்கிய துறை, நாடகத்துறை, சித்தமருத்துவத்துறை என, 25 துறைகள் இருந்தும், நிதியின்மையால் ஆய்வு பணிகளும் முடங்கின.இதையடுத்து நிதிப்பற்றாக்குறையை தீர்க்க, தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் ராசாராம் சிறப்பு கவனம் செலுத்தி, முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றது முதல், பல்வேறு நிதி ஒதுக்கீடு, நிதி ஆதார வழிவகையை தமிழ் பல்கலைக்கு, அடுக்கடுக்காக தற்போது ஒதுக்கி வருகிறது.இதன்மூலம் நிதிப்பற்றாக்குறையில் தவித்த எம்.ஜி.ஆர்., துவக்கிய தஞ்சை தமிழ் பல்கலைக்கு, முதல்வர் ஜெ., தலைமையிலான அரசு புத்துயிரையும், புதிய வெளிச்சத்தையும் பாய்ச்சியுள்ளது. இத்தகவல் தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து துணைவேந்தர் திருமலை கூறியதாவது:தமிழ் பல்கலையில் மாதம்தோறும் பணியாளர் சம்பளத்துக்கே, ஒரு கோடி ரூபாய் நிதி தேவைப்பட்டது. துறைதோறும் புதிய, புதிய ஆய்வுத்திட்டங்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதையடுத்து, நிதி பிரச்னையை தீர்க்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு, தமிழக அரசுத்துறை செயலாளர் ராசாராம் மூலம் நிதிநிலைமை சீரடைந்து வருகிறது.விரைவில் முழுமையாக நிதி சிக்கலிலிருந்து பல்கலை விடுபட்டு விடும். இதை தீர்க்க தமிழ்வளர்ச்சி இயக்ககம் மூலம் செயலாளர், இயக்குனரை உள்ளடக்கிய சீரமைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவும் உரிய பரிந்துரையை அரசுக்கு வழங்கி, பல்கலைக்கு வலு சேர்க்கும்.மேலும், தற்போது யு.ஜி.சி.,(பல்கலை., நிதி நல்கை குழு) தணிக்கை தடைகள் பலவும் நீக்கப்பட்டதன் மூலம், மேலும் அரசின் நிதி கிடைக்கும். ஓய்வூதிய பலன்கள் அளிக்க இரண்டரை கோடி ரூபாய் நிதி அனுமதி கிடைத்தால், 75 சதவீத சுமை குறைந்து விடும். 25 துறைகளிலும் புதிய ஆய்வு திட்டங்களை முடுக்கி விட, ஒரு கோடியே, 35 லட்சத்து, 87 ஆயிரம் ரூபாய் நிதிக்கான நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.இதன்மூலம் ஆசிரியர்கள் புதிய, புதிய ஆய்வுகளை தடையின்றி மேற்கொள்ள முடியும். கம்ப்யூட்டர் வழி தமிழ் ஆய்வுக்கு, 15 லட்சம் நிதியை தமிழக அரசு வழங்கியுள்ளது.இதுதவிர அரசின் ஊக்குவிப்பால், அடுத்தாண்டு கனடாவில் பல்கலையின் தொலைநிலைக்கல்வித்துறையின் கீழ் படிப்பு மையம் அமைக்கப்படும். அங்குள்ள கொலோன் பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, இரு நாட்டு மாணவர்கள் ஆய்வுப்பணி விரிவுபடுத்தப்படும். விரைவில், தொலைநிலைக்கல்வி மூலம் நூலக அறிவியல், அர்ச்சகர் பயிற்சி, அஃக்கு பஞ்சர், சுற்றுச்சூழல் அறிவியல், இதழியல் என புதிய படிப்புகள் துவங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.மாஜி துணைவேந்தர்கள் "மந்தம்'தஞ்சை தமிழ் பல்கலையில் நிதிப்பற்றாக்குறைக்கு காரணம், அரசிடமிருந்து போதிய நிதி ஒதுக்கப்படாததும், தணிக்கைத்துறை மூலம் பல்வேறு காரணங்களை காட்டி புதிய நிதி ஒதுக்கீட்டுக்கு தடைகள் போடப்பட்டதும் தான் என கூறப்படுகிறது. இதற்கு முந்தைய துணைவேந்தர்கள் குறிப்பாக, கடந்த, ஐந்தாண்டு தி.மு.க., ஆட்சிக்காலத்தில் பொறுப்பு வகித்தவர்கள், இத்தடைகளை நீக்க எவ்வித சிறு முயற்சியும் எடுக்கவில்லை.இக்கட்டான சூழலில் துணைவேந்தராக பொறுப்பேற்ற துணைவேந்தர் திருமலை, புதிய நிதிகளை பெறவும், அலுவலர்கள் மாத சம்பளத்துக்கு உரிய நிதி ஒதுக்கீடு பெறவும், தணிக்கை தடைகளை நீக்கவும் சுறுசுறுப்பாக நடவடிக்கை மேற்கொண்டார். இதனால், தமிழ் பல்கலை மூடப்படும் அபாயத்திலிருந்து மீண்டு, மீண்டும் கம்பீரமாக பணியை தொடரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.