Youth comes in a special police force, vinara? Top doubt | சிறப்பு காவல் இளைஞர் படையில் அ.தி.மு.க.,வினரா?கருணாநிதி சந்தேகம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிறப்பு காவல் இளைஞர் படையில் அ.தி.மு.க.,வினரா?கருணாநிதி சந்தேகம்

Updated : நவ 09, 2012 | Added : நவ 08, 2012 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சிறப்பு காவல் இளைஞர் படையில் அ.தி.மு.க.,வினரா?கருணாநிதி சந்தேகம்

சென்னை:"அ.தி.மு.க.,வினரை போலீஸ் துறையில் நுழைப்பதற்காக, சிறப்பு காவல் இளைஞர் படை உருவாக்கப்பட்டுள்ளதா?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு,போனஸ் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயம் எனும்போது, அதை தாமதப்படுத்தாமல், முன் கூட்டியே அர” வழங்கியிருக்கலாம்.
"முதல்வர் வருவதாகக் கூறி, செலவுக்கு பணம் கேட்டு, நீலகிரியில் வசூல் வேட்டை கொடி கட்டிப் பறக்குதுபா...' என்று, "தினமலர்' டீக்கடை பெஞ்சில் செய்தி வந்துள்ளது.

அது உண்மையா, பொய்யா என்றெல்லாம், நமக்குத் தெரியாது. பொய்யாக இருந்தால், அ.தி.மு.க., அரசு, அந்தப் பத்திரிகை மீது, அவதூறு வழக்கு தொடுக்கும்; உண்மையா இருந்தால், வாயை மூடிக் கொண்டிருக்கும்.செங்கல்பட்டில் அரசு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும், திறக்கப்படாமல் உள்ளது. அது இன்னும் திறக்கப்படாமல் இருக்க, தி.மு.க., ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்ற ஒரு காரணம் போதாதா?போலீஸ் துறைக்கு துணையாக, சிறப்புக் காவல் இளைஞர் படை ஒன்றை அமைக்கப் போவதாக, முதல்வர் அறிவித்துள்ளார். கட்சிக்காரர்களுக்குப் பணி வழங்க வேண்டும், அவர்களை போலீஸ் துறையில் நுழைக்க வேண்டும்.

முறைப்படி அவர்களை, சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தேர்ந்தெடுத்தால், தாங்கள் நினைத்தவர்களை எல்லாம், பணியிலே சேர்க்க முடியாது என்பதற்காக, இந்த முயற்சி செய்யப்பட்டுள்ளதா? அ.தி.மு.க., அரசு அறிவித்துள்ள, மற்றொரு தவறான திட்டம் இது.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravi ramanujam r - rajapalayam,இந்தியா
22-டிச-201213:59:47 IST Report Abuse
ravi ramanujam r ஏன் தனது குடும்பத்தினருக்கும் ஏதேனும் பதவி எதிர் பார்கிரறா? முத்தமிழை வித்தவருக்கு அனுபவம் போலிருக்கிறது? காசு எதில் சம்பாதிப்பது என்ற கலையை தமிழகத்தில் ஆரம்பித்தவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
09-நவ-201216:58:10 IST Report Abuse
villupuram jeevithan தன்னை மாதிரியே அனைவரும் இருப்பர் என்று எண்ணுவதில் தப்பில்லை. இது அவரது குணம். ஒவ்வொரு முறையும் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வரும்போதெல்லாம் இப்படி சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்பதை கவனித்தீர்களா?
Rate this:
Share this comment
Cancel
selvam - karur ,இந்தியா
09-நவ-201215:31:05 IST Report Abuse
selvam அ.தி.மு.க.,வினரை போலீஸ் துறையில் நுழைப்பதற்காக, சிறப்பு காவல் இளைஞர் படை உருவாக்கப்பட்டுள்ளதா? என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். என்ன தாத்தா அனுபவம் பேசுதா ? அப்படியென்றால் , இவரது ஆட்சியில் மக்கள் நலப் பணியாளர்கள் என்று உதாவத நியமனங்கள் அனைத்தும் தி மு க வினர் தான் பெற்றனர் என்று ஒப்புக் கொள்கிறாரா ?
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
09-நவ-201210:57:48 IST Report Abuse
villupuram jeevithan நடத்தாத, அதாவது விழுப்புரத்தில் நடத்தாத டெசோ கூட்டத்திற்கு விழுப்புரத்தில் அமோக அறுவடை நடந்ததே. அந்த கேள்விக்கு என்ன பதில் சொல்லுவீர்கள்?
Rate this:
Share this comment
Cancel
Divaharan - Tirunelveli,இந்தியா
09-நவ-201210:25:14 IST Report Abuse
Divaharan சாலை பணியாளர்கள் தி மு க . அது போல் இதுவும் . இந்த இரண்டு காட்சிகளுக்காக தான் தமிழ் நாடு இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
09-நவ-201206:50:37 IST Report Abuse
ஆரூர் ரங முன்பு அரசு செலவில் திமுக ஆட்களைக் ( ரவுடிகளைக் ? ) கொண்டு சீரணிப் படை என ஒன்று அமைத்த அனுபவத்தில் மற்றவர்களும் தன்னைப்போல்தான் என நினைக்கிறார். தன்னைப் போல பிறரை நினை என்பது தாத்தாவின் புது மொழி
Rate this:
Share this comment
Cancel
shanmugam suresh - Singapore,சிங்கப்பூர்
09-நவ-201205:40:10 IST Report Abuse
shanmugam suresh அப்ப இதுக்கு முன்னால உங்க ஆட்சிய திமுக வினருக்கு தான் வேலை கொடுத்திங்களா தாத்தா? ஸ்டாலினிக்கு பாராட்டுவிழா 11 ம தேதியாம்ல, இலங்கை பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டதா?
Rate this:
Share this comment
Cancel
nimmi - Dindigul,இந்தியா
09-நவ-201205:00:59 IST Report Abuse
nimmi இந்த விசயத்தில் பெரியவர் சந்தேகப்படுவது அரசியல் காரணங்களுக்காக என்று ஒதுக்கி தள்ளிவிட்டாலும், சில நடைமுறை கோளாறுகளும் இந்த திட்டத்திற்கு தேர்ந்தேடுக்கப்படுபவர்களால் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் நிறையவே உள்ளன. இவ்வாறு துணைப்படையில் சேர்க்கப்படக்கூடியவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பணியினை தவறாக பயன்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என்பதற்கு கடந்த காலத்தில் - எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் நல்லெண்ணத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட்ட S P O [ஸ்பெஷல் போலீஸ் ஆபீசர்] என்று அழைக்கப்பட்ட முன்னாள் ராணுவத்தினர் குற்றப்பிரிவு போலீசாருடன் சென்னை நகரத்தில் இரவு ரோந்து அனுப்பப்பட்டனர். பலவித முறைகேடான செயல்களில் போலீஸ் போர்வையில் அவர்கள் ஈடுபட்டதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் வந்தது FOP [ பிரண்ட்ஸ் ஆப போலீஸ் ] போலீஸ் நண்பர்கள் என்ற அமைப்பு. இவர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபாட்ட செய்திகள் ஊடகங்களில் நிறைய வந்தன. தற்போது அந்த அமைப்பும் காணாமல் போனது. காவல்துறைக்கு உதவ கொண்டு வந்த திட்டங்களிலேயே சிறப்பு வாய்ந்து செயல்பட்டுவரும் ஒரே அமைப்பு ஊர்க்காவல் படைதான். காவல்துரையில கூட புதிகாத பணிக்கு வருபவர்களில் ஒரு சிலர்தான் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள Sannad என்ற அதிகார அட்டையைக்கொண்டு துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.[ பஸ் -ரயில் ஒசிப்பயனங்கள் உட்பட ]. எனவே அரசியல் காரணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சமூக கண்ணோட்டத்துடன் இந்த பிரச்சினையை பாருங்கள்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - salem,இந்தியா
09-நவ-201204:15:23 IST Report Abuse
K.Sugavanam நீங்க நியமிக்காத "பணியாளர்களா" சும்மா வயித்தெரிச்சல் படாதீங்க..வயசாச்சு..
Rate this:
Share this comment
Cancel
மோனிஷா - நாகர்கோயில்,இந்தியா
09-நவ-201201:26:56 IST Report Abuse
மோனிஷா தலைவன் எவ்வழியோ தலைவியும் அவ்வழியே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை