வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
முதலில் சுப்ரீம் கோர்டில் கேஸ் போட்டது கிரிமினல் வேஸ்ட்... இதனால் மக்கள் பணம் தான் வீண் விரயம்... இதன் மூலம் அண்ணா திமுக அரசு தாங்கள் மின்பற்றாகுரைக்காக நடவடிக்கை மேற்கொண்டதாக கூறிக்கொள்ளலாமே தவிர வேறு எந்த பயனும் இல்லை... அருமை அன்னை போயஸ் தோட்டத்தில் இருந்து கொண்டு அதிகாரம் செய்தால் பயபடுவதர்க்கு மத்திய அரசு என்ன அண்ணா திமுக கவுன்சிலரா அல்லது எம் எல் எ வா... முதலில் தோட்டத்தை விட்டு டில்லி சென்று ஆக்கபூர்வமான பேச்சு வார்த்தையை மண் சின்கோடும் சோனியாவோடும் பேசிவிட்டு வரட்டும்... மின்தொகுப்பு கட்டமைப்பு பலவீனமாக இருபதென்றால்... மின்துறை அதிகாரிகளின் மேத்தனப்போக்கே அல்லவா...முந்தைய அரசு மிகவும் பலகீனமாகவும் அலட்சியமாகவும் செயல்பட்டுள்ளதும் காரணமல்லவா... மத்திய அரசு மின்வழிதடம் பலகீனமாக இருந்தது தெரிந்தும் சரிசெய்ய உதவாது தட்டிக்கழித்தது ஏன்... இவர்களின் அரசியல் காய் நகர்த்தலுக்கு அப்பாவி மக்களின் வாழ்க்கையை பணயம் வைக்கலாமா.... அம்மா தனது ஈகோ வையெல்லாம் ஓரம் கட்டிவைத்துவிட்டு மத்திய அரசிடம் தமிழ் மக்களுக்காக பேச்சுவார்த்தை நடத்தினால்தான் என்ன...
மின் வெட்டு பிரச்சனைக்கு நாற்பது வருடங்களாக ஆட்சி செய்த திராவிட கட்சிகளும், அவர்களது ஆட்சியை நடைமுறைப் படுத்திய, ஆட்சியை நடத்துவதில் உதவி செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும்தான் காரணம். நாட்டின் தொழில் வளர்ச்சி முன்னேறியுள்ளது . மக்களுடைய தனி நபர் வருமானம் அதிகரித்துள்ளது. விவசாயம் இயந்திரமயமாயுள்ளது. (கமலையில் தண்ணீர் இறைப்பதை பார்க்க முடியவில்லை). இவை எல்லாமே மின்சாரத்தின் உபயோகத்தை அதிகரித்துள்ளன. ஏன் ? தமிழ்நாட்டின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கையே கிட்டத்தட்ட 400 பேராக அதிகரித்துள்ளது. இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்தான் நாட்டின் வளர்ச்சிக்கு திட்டம் வகுத்துக் கொடுத்திருக்கவேண்டும். முறையான திட்டமிடாதலே இப்பொழுதுள்ள மின் தட்டுப்பாட்டுக்கு காரணம்.
தமிழக மக்களை தண்டித்தாவது ஜெயலலிதாவை பணிய வைக்கும் முயற்சி போல் தெரிகிறது. இதன் பின்னனணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது போகப் போகத் தெரிய வரும். தமிழ் நாட்டில் ஒரு பெண்மணி அரசியல் நடத்துவதற்கு எவ்வளவு கஷ்டம் என்பது தெரிகிறது. தமிழக மக்களைப் புறக்கணித்தால் தமிழகத்தில் இனிமேல் காங்கிரஸ் கட்சிக்கு இடமே இல்லாமல் இருப்பதற்கு, டெல்லி அடிகோலுகிறது.
இந்த வழக்கின்மூலம் தமிழக அரசு தனது கையாலாகாத் தனத்தை இந்தியா முழுமைக்கும் வெளிக்காட்டியிருக்கிறது. முதலில் மத்திய அரசுடன் இணக்கமான சூழ்நிலையைக் கையாண்டு மின்பாதையை சரிசெய்யவும், மத்திய மின்தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரம் பெறவும் வழிவகை செய்திருக்க வேண்டும். இதற்கு முதல்வர் அதிகாரிகள் குழுவுடன் நேரில் டெல்லி சென்று பிரதமர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்தி இருக்க வேண்டும். தமிழத்தின் தலையாய பிரச்சினையில், வெறும் கடிதம் மட்டுமே எழுதிவிட்டால் போதுமானது என்று நினைத்திருந்தது தவறு. அல்லது அனைத்துக் கட்சி கூட்டம் போட்டு அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து போராடியிருக்க வேண்டும். அதைவிடுத்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது தவறான அணுகுமுறையாகும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.