karunanithi slams narayanasa my | மத்திய அமைச்சர் மீது கருணாநிதி பாய்ச்சல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மத்திய அமைச்சர் மீது கருணாநிதி பாய்ச்சல்

Added : நவ 08, 2012 | கருத்துகள் (116)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 மத்திய அமைச்சர் மீது கருணாநிதி பாய்ச்சல்சென்னை:""கூடங்குளத்தில் போராட்டம் நடத்தியவர்ளை எல்லாம், தலைமைச் செயலகத்திலேயே சந்தித்து, அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டியவர் முதல்வர் ஜெ., என்பது நாராயணசாமிக்கு தெரியாமலே போய் விட்டதா?'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னையில் அவரது பேட்டி:

கூடங்குளம் அணுமின் நிலையத்தை, தி.மு.க., எதிர்ப்பதைப் போலவும், முதல்வர் ஜெ., ஆதரிப்பதைப் போலவும், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி பேட்டி கொடுத்திருக்கிறார்.கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை எல்லாம் ஒத்தி வைத்துவிட்டு, அந்தப் பகுதி மக்களுக்கெல்லாம் தெளிவு படுத்திய பின் தான், பணிகளைத் தொடர வேண்டும் என, தமிழக அரசு சார்பில், அமைச்சரவைக் கூட்டி, தீர்மானம் நிறைவேற்றி, பிரதமருக்கு அனுப்பி வைத்தவர் முதல்வர் ஜெ.,

கூடங்குளத்தில் போராட்டம் நடத்தியவர்ளை எல்லாம், தலைமைச் செயலகத்தில் சந்தித்து, அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டியவர் முதல்வர் ஜெ., என்பதும் நாராயணசாமிக்கு தெரியாமல் போய் விட்டதா?கூடங்குளம் போன்ற தொழில் வளர்ச்சி சாதனங்களுக்கு, நாங்கள் என்றும் எதிரிகள் அல்ல. நாட்டு மக்களுக்காக, நாட்டின் முன்னேற்றத்திற்காக, விஞ்ஞான ரீதியாக, தமிழகத்தில் தொழில் வளர வேண்டும் என்று நாங்கள் ஆசைப் படுகிறோம். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (116)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
10-நவ-201201:44:58 IST Report Abuse
Matt P நாராயணஸ்வாமியை சந்திக்கவும் விரும்பவில்லை..அவர் பேசுவதும் இவருக்கு பிடிக்கவில்லை. ...நாராயணசுவாமி ......சிதம்பரம் கருணாநிதி அளவுக்கு எத்தி பிழைக்க தெரிந்த திறமைசாலி இல்லையோ ...நாராயனஸ்வம்யை சந்தித்தபோது எதற்கோ அவர் உடன்படவில்லையோ சுற்றுப்புற மக்களுக்கு ஆபத்து இன்மையை தெளிவுபடுத்திய பிறகே...............என்பதில் குற்றம் என்ன கண்டீர் ....?....
Rate this:
Share this comment
Cancel
c.nagarajan - chennai,இந்தியா
10-நவ-201200:44:39 IST Report Abuse
c.nagarajan தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போதே மத்திய அரசிடம் இருந்த செல்வாக்கை பயன்படுத்தி தமிழகத்திற் ஒளி கொடுத்திருந்தால் இந்நேரம் புதிய ஆட்சியை அமைத்திருக்கலாம் இல்லையா அதை விட்டுவிட்டு ஆட்சியில இருக்கும் போது, பேரன், மகன், மகளுக்கு பதவி வாங்க மட்டும் மத்திய அரசை பயன்படுத்தி மக்களை மறந்து இப்போ சும்மா இருக்கும் உங்களுக்கா சப்போர்ட் பண்ண முடியும். இப்ப ஆட்சியில இருக்கறவங்களுக்குத்தான், அவர்களின் தயவு தேவைப்படுவதால்தான் அ.தி.மு.க.விற்கு நாராயணசாமி சப்போர்ட் பண்ணி பேசுறார்.
Rate this:
Share this comment
Cancel
Balaji Gopalan - Nouakchott,மொரிட்டானியா
09-நவ-201222:17:28 IST Report Abuse
Balaji Gopalan நானும் இந்த நாட்டுல அரசியல் பண்ணுறேன் என்று அவர் ஏதோ பாவம் கூவுறார் ,,, வயசாகி போச்சு விட்டுடுங்க நண்பர்களே
Rate this:
Share this comment
Cancel
Vignesh - chennai,இந்தியா
09-நவ-201221:14:11 IST Report Abuse
Vignesh அட போங்கயா .. மின்சாரம் தர மாட்டங்களாம் .. காவிரி தண்ணீர் தர முடியாது என்று உறுதியாக சொல்பவர்களை தட்டி கேக்க மாட்டாங்களாம். ஆனா நம்ம வோட்டு மட்டும் வேணுமாம். என்னையா இது அவலம் ? ச ..
Rate this:
Share this comment
Cancel
Vignesh - chennai,இந்தியா
09-நவ-201221:09:16 IST Report Abuse
Vignesh வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணி வைக்குமே ஆனால், தமிழகத்திற்கு எந்த பயனும் ஏற்பட போவதில்லை என்பதை முதலில் அறிவீர். காங்கிரஸ் 2014 லில் படு தோல்வி அடைய கூடும்.
Rate this:
Share this comment
Cancel
Ganesh Ponrajan - Chennai,இந்தியா
09-நவ-201220:44:29 IST Report Abuse
Ganesh Ponrajan திருட்டு முனேற்ற கழகம் தலைவர் ஏன் இப்பொழுது இப்படி பேச வேண்டும் .1 ) காங்கிரஸ்க்கு தமிழ்நாட்டில் aadarau இல்லை .காங்கிரஸ் அதிமுக கூட கூட்டணி வைக்க இவரே திட்டம் போடுகிறார் . இவரும் விஜயகாந்தும் கூட்டணி பூத்து ஜெய்த்து பிறகு காங்கிரஸில் மீண்டும் சேர்ந்து மினிஸ்டர் போஸ்ட் வாங்கி. சோனியாவும் இவரும் போடும் திட்டம். பலே பலே.கில்லாடி .இது முதல் step so .cm மேடம் ஜாக்கிறதையா இருங்க . இவரு brain இஸ் working குட் கண்டிஷன்.
Rate this:
Share this comment
Cancel
mangai - Chennai,இந்தியா
09-நவ-201220:14:52 IST Report Abuse
mangai என்னது பாய்ச்சலா? புலி பாயும் _____ பாயுமா?
Rate this:
Share this comment
Cancel
RAJA - chennai,இந்தியா
09-நவ-201217:08:24 IST Report Abuse
RAJA அட விடுங்க பாஸ், அவர் எதோ வாரம் ஒரு முறை வந்து அடுத்த வாரத்திற்குள் அணுஉலையில் மின்சாரம் வந்து விடும் என்று சொன்னதையே சொல்லி கொண்டு திரிகிறார். அவரை போய் வம்புக்கு இழுகுரீர்களே...
Rate this:
Share this comment
Cancel
robinson - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
09-நவ-201214:52:02 IST Report Abuse
robinson திமுக ஆதரவு தேவை இல்லை ,அதிமுக ஆதரவே போதும்னு சொன்னதும் எப்டி பல்டி அடிகிரார்யா இவரு,
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-நவ-201213:46:42 IST Report Abuse
Pugazh V மத்திய அரசைத் திட்டும் ௮ தி மு க அனுதாபிகளுக்கு, உங்கள் தலைவி அடுத்த தேர்தலில் சோனியாவுடன் கை குலுக்கினால் என்ன செய்வீர்கள்? கருத்து சொல்வதை நிறுத்தி விடுவீர்களா? நா. சாமி மெதுவா தி மு க வை குறை சொல்ல ஆரம்பிப்பதையும், சட்ட மன்ற வாடகைக் கட்டிட வைர விழாவிற்கு பழைய காங்கிரஸ் தலைவர் ப்ரனாபின் வருகையையும் நினைவில் கொள்ளவும். கூடங்குளம் மின் நிலையத்தை எதிர்த்து சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, உடனே பல்டி அடித்த தலைவியின் இரட்டை நிலை இன்னும் குழப்பமாகவே இருக்கிறது. Koodangulam is a good example of poor, in experienced, immatured way of handling things by this TN State Govt.
Rate this:
Share this comment
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
09-நவ-201221:13:42 IST Report Abuse
Sundeli Siththarஎதிர்ப்போம்... எதிர்த்து கருத்து சொல்வோம்... காங்கிரஸ் எந்த கூட்டணியில் உள்ளதோ அந்த கூட்டணிக்கும், திமுக எந்த கூட்டணியில் உள்ளதோ அந்த கூட்டணிக்கும் வாக்க்களிக்க மாட்டோம்......
Rate this:
Share this comment
SUDHAKAR N - vellore,இந்தியா
09-நவ-201223:39:09 IST Report Abuse
SUDHAKAR Nமத்திய அரசில் இருக்கும் தி மு க இன்று வரை தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. காவேரி முதல் மின்சாரம் வரை போராடி பெற வேண்டி இருக்கு, ஜெயலலிதா இல்லை என்றால் தமிழ் நாட்டின் நிலைமை....? தவறாகவே பேசி பழகியவர்களுக்கு, தவறான யோசனை தான் வரும். முதல்வருக்கு துணை நிற்போம்.அவர் நமக்காக நிச்சியம் நல்லது செய்வார்....
Rate this:
Share this comment
SUDHAKAR N - vellore,இந்தியா
10-நவ-201200:35:44 IST Report Abuse
SUDHAKAR Nதமிழகம் முன்னேற முதல்வர் எடுக்கும் எந்த முடிவுக்கும் துணை நிற்போம்.... முதல்வர் மீது நம்பிக்கை எங்களுக்கு இருக்கு.ஜி.கே. மூப்பனார் பிரதமராவதை தடுத்தவர்கள் யாரோ... நினைத்து பார்க்கவும். தமிழனை, தமிழனே அழித்து கொண்டிருக்கிறான். தி மு க தினம் ஒரு நாடகம் நடத்தி கொண்டு இருக்கிறது. கடைசியாக டெசோ தீர்மானம்.... தேவையா இது? யார் கேட்டார்கள்? இலங்கை யில் போர் நடக்கும் போது யார் ஆட்சி..? இப்போதும் மத்தியில் இருக்கிறீர்கள். உங்களால் தமிழகத்திற்கு என்ன பயன்? தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல நினைக்கும் முதல்வரை குறை சொல்வதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கு என்று யோசிக்கவும்? தி மு க மாபெரும் தலைவர் "அண்ணா" வால் ஆரம்பித்து "வடிவேலு", குஷ்பு போன்றவர்களால் முடிந்து போன ஒரு இயக்கம். இனி ஜெயலலிதா தான் முதல்வர், அடுத்து பிரதமர் ஆக கூடிய தகுதியும் உள்ளவர். முடிந்தால் துணை நில்லுங்கள். தமிழகம் முன்னேற உதவி செயுங்கள். தவறான முடிவால் நமக்கு, நாமே ஆப்பு வைத்து கொள்ள வேண்டாம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை