நாள்தோறும்
நிலவும், 16 மணி நேர மின்வெட்டால், மின் சாரத்தை நம்பி தொழில் செய்யும்,
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், வேலை இழந்துள்ளனர். தற்போது, 6,500 மெகாவாட்
மட்டுமே மின் உற்பத்தி உள்ளதால், வரும் நாட்களில் மின்வெட்டு நேரம், மேலும்
அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தமிழகத்தில், சென்னையில் இரண்டு மணி நேரமும்,
மற்ற மாவட்டங்களில், 16 முதல், 18 மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது.
நான்கு ஆண்டுகளாக தொடரும், மின்வெட்டு பிரச்னையால், மக்கள் நிம்மதி இழந்து
விட்டனர்; சிறு, குறுந்தொழில்கள் பாதிக்கப்பட்டு, தொழிலாளர்கள் பலர் வேலை
இழந்து தவிக் கின்றனர்.
"வரும், 2013 இறுதிக்குள், மின்வெட்டே இல்லாத தமிழகம் உருவாகும்' என, முதல்வர் ஜெயலலிதா, நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மொத்தம்,
12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை என்ற நிலையில், வெறும், 6,500 மெகாவாட்
மட்டுமே உற்பத்தி கிடைக்கிறது; அதில், சென்னைக்கு பாதி போய் விடுகிறது.
"தீபாவளி'
காரணமாக, வணிக நிறுவனங்களில் மின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், மின்
உற்பத்தி தொடர்ந்து குறைந்து வருவதால், வரும் நாளில், மின் வெட்டு நேரம்,
மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வல்லூரில் இருந்து, 350 மெகாவாட்டும், மேட்டூரில் இருந்து, 600 மெகாவாட்டும் கிடைத்தால் மட்டுமே, ஓரளவு நிலையை சமாளிக்கலாம்.
இருண்ட தீபாவளி
தொழிலதிபர்கள் கூறியதாவது:
கடந்த
நான்கு மாதத்தில், வெள்ளி தொழில், ஜவுளி ஏற்றுமதி , விசைத்தறி என,
எல்லாமே, மின்வெட்டால் மிகவும் மோசமான நிலைக்கு சென்று விட்டன. 20 ஆயிரம்
கோடி ரூபாய்க்கு மேல், நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஒரு நாள் கூலியை கூட
முழுமையாக பெற முடியாமல், தொழிலாளர்கள் தவிக்கின்றனர். "ஆர்டர்'
வாங்கியவர்களிடம், குறிப்பிட்ட நாளில் உற்பத்தி செய்தவற்றை கொடுக்க
முடியாமல் திணறுகிறோம்.
இதற்கு, மாற்று வழி என்ன என்பதை அரசு கண்டறிய
வேண்டும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி,
எங்களுக்கும், "இருண்ட தீபாவளி' தான்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில்,
காற்றாலை மின் உற்பத்தி முற்றிலுமாக இல்லாமல் போய் விட்டது.
வெளிமாநிலத்தில் இருந்து, 500 மெகாவாட் மின்சாரம் வாங்க, அரசு, "டெண்டர்'
கோரியுள்ளது. அந்த, 500 மெகாவாட் கிடைத் தால், ஒரு மணி நேர மின்வெட்டு
குறைக்கப்படும்.
தற்போது காலையில், நான்கு மணி நேரம், இரவில், நான்கு
மணி நேரம் மின் சப்ளை கொடுக்கிறோம். வல்லூரில், 350 மெகாவாட், மேட்டூரில்,
600 மெகாவாட் உற்பத்தி கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம்.
தீபாவளி
பண்டிகைக்கு எப்படி சமாளிக்கப் போகிறோம் என, தெரியவில்லை. சிறு, குறு
தொழில் நிறுவனங்கள், ஒரு மணி நேரத்துக்கு, ஒரு முறை மின்வெட்டு என்பதை
மாற்றி, தொடர்ந்து மின்சாரம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி,
காலையில், நான்கு மணி நேரம் தொடர்ச்சியாக மின்சப்ளை வழங்குவது குறித்து,
ஆலோசித்து வருகிறோம்.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.