புதுடில்லி:""குஜராத் முதல்வர், நரேந்திர மோடியை, "குரங்கு' என, பேசியுள்ள, அந்த மாநில காங்கிரஸ் தலைவர், அர்ஜுன் மொத்வாடியா மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, பாரதிய ஜனதா செய்தித் தொடர்பாளர், பிரகாஷ் ஜாவேத்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் நேற்று, பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:குஜராத்தில் சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அந்த மாநில முதல்வர், நரேந்திர மோடியை, குறிவைத்து காங்கிரஸ் தாக்குதல் நடத்தி வருகிறது. தன் அப்பழுக்கற்ற நிர்வாகத்தால், மாநிலத்தை முன்னேற்ற பாதையில் இட்டுச் சென்றுள்ள முதல்வர், நரேந்திர மோடியை, குரங்கு என்றும், மனிதர்களை தின்பவர் என்றும், மரண வியாபாரி என்றும் காங்கிரஸ் குறிப்பிடுகிறது.குறிப்பாக, மாநில காங்கிரஸ் தலைவர், அர்ஜுன் மொத்வாடியா, ஒருபடி மேலே போய், திரும்பத் திரும்ப, மோடியை, குரங்கு என பேசி வருகிறார். இது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இத்தகைய கீழ்தரமான பேச்சை, காங்கிரஸ் தலைவர் சோனியா, ஆதரிக்கிறாரா? இது, நாகரிகமாக அரசியல் தானா என்பதையும் அவர் தான் சொல்ல வேண்டும். மொத்வாடியா மீது, காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமபிரானை, "மோசமான கணவர்' என, வர்ணித்துள்ள, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான, ராம்ஜேத்மலானி கருத்திலிருந்து, நாங்கள் வேறுபடுகிறோம்.இவ்வாறு, பிரகாஷ் ஜாவேத்கர் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தன்னைப் பற்றி ஒருவரின் பார்வை எப்படி இருக்குமோ அதேபோல்தான் மற்றவரையும் அவர் நினைப்பார். உதாரணத்திற்கு பெரியவர்கள் ஒரு கதையை சொல்வார்கள், பகவான் கிருஷ்ணர் தருமனிடமும், துரியோதனிடமும், உலகத்தை சுற்றிவர சொன்னான் அப்படி சுற்றி வரும் போது எத்தனை நல்லவர்கள் உங்கள் கண்ணில் படுகிறார்கள் என்று கூறும்படி கூறினான், இருவரும் பூமியை வலம் வந்தனர், முடிவில் கண்ணணிடம் வந்த துரியோதனன் ‘தான் பார்த்த எல்லாரும் கெட்டவர்களாகத்தான் இருந்தார்கள்‘ என்று கூறினான். ‘தான் பார்த்த எல்லாரும் நல்லவர்களாகத்தான் இருந்தார்கள்’ என்று தருமன் கூறினார். இந்த இரண்டு பேரின் கருத்தை கேட்டு மற்றவர்கள் குழம்பினர். அதற்கு கிருஷ்ணன் சொன்னால் கெட்டவன் கண்னுக்கு பார்ப்பவர்கள் எல்லாரும் கெட்டவர்களாகத் தெரிந்தனர், நல்வன் கண்னுக்கு பார்ப்பவர்கள் எல்லாரும் நல்லவர்களாக தெரிந்தார்கள் என்று கூறினான். அதுபோலத்தான் காங்கிரஸ்காரனுங்க எல்லாரும் ஊழல் குரங்குங்களா இருக்கானுங்க. அதனாலத்தான் அவர்கள் பார்க்கும் அனைவரும் குரங்காகத் தெரிகிறது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.