திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டத்தில் 13 மணி நேரம் மின்வெட்டு நிலவுவதால் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதில் பொதுமக்கள், வர்த்தகர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
திருத்துறைப்பூண்டியில் நாள்தோறும் காலை, ஆறு மணி முதல், எட்டு மணி வரையிலும், பத்து மணி முதல், இரண்டு மணி வரையிலும், மாலை, ஆறு மணி முதல், ஏழு மணி வரையிலும், இரவு, எட்டு முதல், பத்து வரையிலும், நள்ளிரவு, ஒரு முதல், இரண்டு மணி வரையிலும் விடியற்காலை, நான்கு மணி முதல், ஐந்து மணி வரையிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது.
இதனால் சிறு தொழில் செய்பவர்கள், மாவு மில் வைத்து நடத்துபவர்கள் மிகுந்த சிரமத்து ஆளாகியுள்ளனர். தீபாவளி பண்டிகையை கொண்டாட நெல் அரைப்பதுக்கும், மற்ற தானியங்கள் அரைப்பதுக்கும் பெரும் சிரமம் ஏற்படுகிறது. வர்த்தக நிறுவனங்களில் மக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் கிடைப்பதிலும், மின்வெட்டினால் போதிய அளவிற்கு வரத்து இல்லாததால் சிரமம் ஏற்பட்டுள்ளது.
வழங்கப்படும் மின்சாரத்தை தொடர்ந்து, ஆறு மணி நேரத்துக்கு குறையாமல் வழங்கினால் சிறு தொழில்கள் பாதிக்கப்படாமல் இருப்பதோடு, மக்களின் சிரமமும், ஓரளவுக்கு குறையும். மின்வெட்டால் வரும் தீபாவளி பண்டிகையை குதுகலமாக கொண்டாட முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆமாகியுள்ளனர். மேலும், அரிசி விலை ஒவ்வொரு நாளும் ஏறி வருவதால் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுயுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.