district news | கோத்தகிரி தாலுகா ஆபீசில் தீ விபத்து; பொருட்கள் சேதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோத்தகிரி தாலுகா ஆபீசில் தீ விபத்து; பொருட்கள் சேதம்

Added : நவ 10, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோத்தகிரி:கோத்தகிரி தாலுகா அலுவலகத்தில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில், கம்ப்யூட்டர் அறையில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
கோத்தகிரி தாலுகா அலுவலக கம்ப்யூட்டர் அறையில், உயர் மின் அழுத்தம் காரணமாக நேற்று அதிகாலை திடீரென தீ பிடித்தது. மின்சார ஒயர்கள் கருகியதால், அலுவலகம் முழுவதும் புகை சூழ்ந்தது. தீயில், ஆறு கம்ப்யூட்டர்கள் சேதமடைந்தன. இரும்பு மேஜை என்பதால், சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்தில் அலுவலக ஆவணங்கள் தப்பின.இரவு பணியில் இருந்த ஊழியர்கள் ரவி, சிவலிங்கம் அலுவலகத்தில் இருந்து வெளியேறி தாசில்தார் சுப்ரமணிக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தாசில்தார் தலைமையில், அலுவலக ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நேற்று தாலுகா அலுவலக பணிகள் தடைப்பட்டன. இச்சம்பவத்தால், கோத்தகிரியில் பரபரப்பு நிலவியது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை