Advertisement
நெல்லையில் அண்ணாதுரை பிறந்த நாள் போட்டி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

திருநெல்வேலி:நெல்லை மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி சார்பில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நெல்லை ஜங்ஷனில் நடந்தது.நெல்லை மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி சார்பில் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 3ம் தேதி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நெல்லை ஜங்ஷனில் நடந்தது. இதில் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

பேச்சுப்போட்டியில் கிறிஸ்துராஜா பள்ளி மாணவர் இசக்கிராஜ், கவிதை ஒப்புவித்தல் போட்டியில் ஜெயராஜேஷ் பள்ளி மாணவி கீர்த்தனா, கட்டுரைப் போட்டியில் வி.கே.புரம் அமலி மகளிர் பள்ளி மாணவி பிலோமின் ஏஞ்சல் ஆகியோர் முதலிடத்தை பிடித்தனர். இதுதவிர மூன்று பிரிவுகளிலும் 2 மற்றும் 3 பரிசுக்கான மாணவர்களும், ஆறுதல் பரிசுக்காக தலா 10 மாணவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.போட்டிகளில் வெற்றி பெற்ற 39 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நெல்லை ஜங்ஷனில் நடந்தது. விழாவில் தி.மு.க., மாநில இளைஞரணி துணை செயலாளர் சம்பத், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
விழாவில் மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன், இளைஞரணி அமைப்பாளர் ஜார்ஜ்கோசல், மாநகர பொறுப்பாளர் அப்துல் வகாப், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் சுரேஷ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராபர்ட் செல்லையா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண்குமார், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் நடராஜன் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.