புதுடில்லி:குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு, பிரதமர் பதவி ஆசை உள்ளது. பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை, கட்சிக்குள் வலுப்பதற்கு அவரே காரணம்,'' என, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மூத்த தலைவர், எம்.ஜி.வைத்யா கூறியுள்ளார்.பா.ஜ., தலைவர் நிதின் கட்காரிக்கு எதிராக, சமூக சேவகரும், புதிதாக அரசியல் கட்சி துவக்கியிருப்பவருமான, அரவிந்த் கெஜ்ரிவால், ஊழல் புகார் கூறியிருந்தார். இந்த புகார் தொடர்பாக, விசாரணை நடத்திய, வருமான வரித் துறையும், "நிதின் கட்காரிக்கு சொந்தமான நிறுவனத்தில், போலி பெயரில், பல நிறுவனங்கள் பெருமளவு முதலீடு செய்துள்ளன' என, தெரிவித்தது.இதனால், "நிதின் கட்காரி பதவி விலக வேண்டும்' என, பா.ஜ., ராஜ்யசபா எம்.பி.,யும், மூத்த வழக்கறிஞருமான, ராம் ஜெத்மலானி, அவரது மகன், மகேஷ் ஜெத்மலானி, பா.ஜ., மூத்த தலைவர்கள், ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்கா மற்றும் சத்ருகன் சின்கா ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான, எம்.ஜி.வைத்யா, இணையதளத்தில் உள்ள, தன் வலைப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:நிதின் கட்காரி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை, குஜராத் மாநிலத்திலிருந்து உருவாகியிருக்கலாம் என, நம்புகிறேன். ஏனெனில், கட்காரி பதவி விலக வேண்டும் என, முதலில் கோரிக்கை விடுத்த, ராம் ஜெத்மலானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என, வலியுறுத்தினார்.பா.ஜ., மூத்த தலைவர், அத்வானியும், நிதின் கட்காரியும், தாங்கள் பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை என, ஏற்கனவே அறிவித்து விட்டனர். ஆனால், மோடிக்கு பிரதமராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. பிரதமர் பதவி வேட்பாளர் தொடர்பாக, அவர் இதுவரை எதுவும் பேசவில்லை.பா.ஜ., தலைவர்கள், இப்போதைக்கு ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம். 2014ல் தான் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது; அதனால், இப்போதே பிரதமர் பதவி வேட்பாளர் பற்றி பேச வேண்டியதில்லை.நிதின் கட்காரிக்கு எதிரான, தன் அதிருப்தியை ராம் ஜெத்மலானி வெளிப்படையாக தெரிவித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பா.ஜ., உறுப்பினர்களோ அல்லது எம்.பி.,க்களோ, கட்காரி பதவி விலக வேண்டும் என, விரும்பினால், அந்த கோரிக்கைகயை அவர்கள், கட்சி கூட்டத்தில் எழுப்பலாம்.இவ்வாறு வைத்யா கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஆரோக்யமான பிள்ளையை தி்டகாத்தி்ரமாக மாற்றுவது சுலபம். ஆனால் அதை கூட இங்கு யாரும் செய்யவில்லை (உ .ம் மின்சாரத்துறை )செய்துகாட்டியவரை வரவேற்கலாமே. மீண்டும் காங் ஆட்சியை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. அவ்வளவு ஊழல். டைப் செய்ய முடியவில்லை.wikileaks ல் பார்க்கவும் எவ்வளவு கருப்பு பணம் காங் மற்றும் தி்முக நபர்களுடையது என்று.
பதவியில் அதுவும் பிரதமர் பதவியில் அமர எல்லா அரசியல் வாதிக்கும் ஆசைதான், மன்னிக்கவும் மாண்புமிகு மூப்பனாரைத்தவிர. பதவியில் கிடைக்கின்ற வசதி வாய்ப்புகளை வைத்து, தான் பதவியில் உள்ள காலத்தில் சிறப்பாக செயல் பட்டு நாட்டையும் மக்களையும் கடுகளவாவது முன்னேற்றி காண்பிக்க முடிபவர்தான் பிரதமராவதற்கு ஆசை படவேண்டும். இப்பொழுது உள்ள அரசியல் வாதிகளில் மோடி சிறப்பாக செயல் பட்டு இருக்கிறார் என்று பாரதமே ஒப்புக்கொண்டு விட்டதால் , அதை எல்லோரும் ஆமோதிக்கலாம்.
ஆரோக்கியமான பிள்ளையை திடகாதிரமானவனாக மாற்றுவது சுலபம் அதைத்தான் மோடி குஜராத்தில் செய்து வருகிறார். வளர்ச்சியுற்ற ஒரு மாநிலத்தை நிர்வகிப்பது சுலபம், அதே 130 கோடி மக்கள் தொகை 28 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசங்கள் உள்ள ஒரு நாட்டை ஆள்வது அவ்வளவு சுலபம் அல்ல. இது ஒன்றும் காசு கொடுத்து விளம்பரம் தேடுதல், ட்விட்டரில் கூட்டத்தை கூட்டி சதா சுயபுராணம் பாடும் மேட்டரில்லை, இன்னிக்கு மோடியை இந்தியாவில் ஒரு சாரர் தலையில் தூக்கி வைத்து ஆடுவதை பார்த்தல் அவர் என்ன சொன்னாலும் பிஜேபி தலைமை முதல்கொண்டு மறுப்பு சொல்லாம கேட்பைங்க.. அதுதான் உண்மை நிலவரம். அவர் பிஜேபிக்கும் மேல. அதுமட்டுமில்லாம மோடியை பகைசிகிட்ட அவர் என்ன வேணுன்னாலும் செய்வார். பிகார்ல நிதிச்குமார் படுகிற அவஸ்தை புரியலையா? அந்த அளவுக்கு மோடியிடம் பவர் உள்ளது. மோடி பிரதமர வந்தா ஹிந்துக்கள் தவிர மற்ற எல்லோருக்கும் ஆப்புதான், இரண்டாம்தர மக்களாய் தான் வாழனும். ஆபிஸ்ல சம்பளம் வாங்கிட்டு ஓசி கம்புட்டரில் கருத்து எழுதிட்ட மட்டும் மோடி ஜெயித்துவிட முடியாது, கம்புட்டரே பார்க்காத 80 % கிராமத்து மக்கள் மனசு வைக்கணும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.