கலாசார சீரழிவு, சமுதாய கட்டமைப்பு இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், திருப்பூரில், அதிர்ச்சி தரும் கொலைகள், தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.
பனியன் தொழில் வளர்ச்சி காரணமாக, உலக அளவில் தனி இடத்தை பெற்றுள்ள திருப்பூர், பல்வேறு மாவட்ட மற்றும் மாநில மக்களுக்கு வேலை வாய்ப்பு தரும் நகரமாக உள்ளது. படித்தவர், படிக்காதவர் என பாரபட்சம் இல்லாமல், வாழ்வாதாரத்தை தரும் திருப்பூரில், சமூக கட்டமைப்பு இல்லாதது, கலாசார சீரழிவு, பணிச்சுமை, மன உளைச்சல், போதைக்கு அடிமையாதல் என பல்வேறு காரணங்களால் வாழ்வை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.தேசிய குற்றப்பதிவேடுகள் துறையின் அறிக்கைப் படி, இந்திய அளவில் தற்கொலைகள் அதிகரிப்பில், மேற்குவங்கத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது.
தமிழக அளவில், திருப்பூர் மாவட்டம், தற்கொலைகள் அதிகரிக்கும் மாவட்டமாக உள்ளது. அதேபோல், குடும்பங்கள் சீரழிவு காரணமாகவே 80 சதவீத தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன. திருப்பூர் மாவட்டத்தில், கடந்த 2009ல் 871 பேரும்; 2010ல், 940 பேரும்; 2011ல், 859 பேரும், 2012ல், கடந்த அக்., வரை, 511 பேரும் தற்கொலை செய்துள்ளனர். தினமும் சராசரியாக மூன்று பேர் தற்கொலை செய்து கொள்வதும்; 60 பேர் வரை தற்கொலைக்கு முயற்சிப்பதும் சாதாரணமாக நடந்து வருகிறது.
திருப்பூரில் பல்வேறு மாவட்ட, மாநில மக்கள் வசிப்பதால், பல்வேறு கலாசாரம், பழக்க வழக்கங்களும் கலந்துள்ளன.ஒவ்வொரு பகுதியில் இருந்து வந்த மக்களும், சமூக கட்டுப்பாடுகளை மறந்து, அதிக பணப்புழக்கம் பல்வேறு தீய வழிகளுக்கு கொண்டு செல்கிறது. சமூக கட்டுப்பாடு இல்லாத நிலை, கலாசார சீரழிவு, போதைக்கு அடிமை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் தற்கொலைகள், கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களுக்கு வழி வகுத்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்:
* பனியன் கம்பெனி தொழிலாளி வாசுகி, கணவனை பிரிந்து, திருப்பூர் சாமுண்டிபுரத்தில் வாழ்ந்து வந்தார். அண்ணாதுரை என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அண்ணாதுரைக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. வீட்டுக்கு தந்தை வராததால் ஆத்திரத்தில் இருந்த மகன் தாமோதரன், தந்தையின் கள்ளக்காதலி வாசுகியை, துண்டால் கழுத்தை நெரித்து கொன்றார்.
* வீரபாண்டி கிருஷ்ணா நகரை சேர்ந்த குமார் மனைவி மீனா 18; இளம் வயதில் திருமணம் நடந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட தகராறில், பிரிந்து சென்று, பொல்லிகாளிபாளையத்திலுள்ள தந்தை வீட்டில் வசித்து வந்தார். இருவரின் மண வாழ்க்கைக்கு சாட்சியாக இரண்டரை வயது பெண் குழந்தை மகாலட்சுமி இருந்துள்ளது. மீனாவுக்கு, சூர்யா என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. காதலனுடன் திருமணம் செய்வதற்கு தடையாகவும், பழைய மண வாழ்க்கையை நினைவுபடுத்தும் வகையில் உள்ள குழந்தையை கயிற்றால் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.
* குண்டடம் இடையன் கிணறு பகுதியில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடந்தது. அதுகுறித்த விசாரணையில், கோவை டிராவல்ஸ் மேலாளர் சீனிவாசன் என்பது தெரியவந்தது. அவரது மனைவி சாந்தி, கள்ளக்காதலன் கணேசன் ஆகியோர் சேர்ந்து, கழுத்தறுத்து கொன்று, சூட்கேசில் பிணத்தை கொண்டு வந்து, பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரியவந்தது. அதேபோல், பல்லடத்தில் ராஜேஸ்வரி என்பவரை, குடும்ப தகராறு காரணமாக அவரது கணவர் கருப்புசாமி எரித்துக் கொன்றுள்ளார்.கள்ளத்தொடர்பு, திருமணமாகாமல் உடல் உறவு கொண்டு, குழந்தைகள் பிறப்பதும், கரு வளர்வதற்கு முன், "அபார்ஷன்' செய்து, குப்பை தொட்டியில் வீசிச் செல்லும் சம்பவங்கள் அதிகளவு நடந்து வருகின்றன.
போலீசாரை பொருத்தவரை, கள்ளத்தொடர்பு, தவறான பழக்க வழக்கங்கள், பெண்களால் ஏற்படும் சண்டை என கலாசாரத்தை சீரழிக்கும் செயல்கள் அதிகளவு நடந்து வருவதாலேயே, கொலை, கொள்ளை, வழிப்பறி, தற்கொலைகள் அதிகம் நடந்து வருவதாக கூறுகின்றனர். பெரும்பாலான தற்கொலைகளுக்கு உண்மை காரணம் வெளியே வராவிட்டாலும், காரணத்தின் மூலத்தை ஆய்வு செய்தால், தகாத உறவுகளே காரணமாக இருக்கும் என கூறுகின்றனர்.
செயல்படாத குழு:
ஆய்வு தேவை:
அதேபோல், மது அடிமைகளை மீட்பது; பொழுதுபோக்கு அம்சங்களை அதிகரிப்பது; தொழிலாளர்களின் வேலைப்பளுவை குறைப்பது; நகரில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து குடும்ப சூழ்நிலைகளை மகிழ்ச்சிகரமாக ஆக்குவது உள்ளிட்டவைகளை மேம்படுத்த வேண்டும்.நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு மன இறுக்கத்தை குறைக்கும் வகையில் தேவையான பொழுதுபோக்கு அம்சங்களை இடம் பெறச்செய்வது; மதுவுக்கு அடிமையாக உள்ளவர்களை மீட்கவும், இளைய சமுதாயம் மதுவுக்கு அடிமையாகாமல் இருக்கும் வகையிலான நடவடிக்கையும் தேவை.அரசு சார்பில் தேவையான அளவு பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்த வேண்டும். பூங்கா, பொருட்காட்சி ஆகியவை குடியிருப்புகளுக்கு அருகிலேயே அமைக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களை இணைக்கும் பாலமாக அரசுநடவடிக்கை இருக்க வேண்டும்.கம்பெனிகளில், கவுன்சிலிங் சென்டர், மன இறுக்கத்தை போக்கும் வகையில் யோகா, விளையாட்டு என கட்டமைப்புகளை மேம்படுத்துவது, தொழிலாளர்களுக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் கல்வி அறிவு பெறும் வகையில் குறிப்பிட்ட நேரம் ஒதுக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் ஓரளவு தீர்வு காண முடியும்.
எஸ்.பி., அமித்குமார் சிங்கிடம் கேட்ட போது, ""தற்கொலை உள்ளிட்ட சமூக பிரச்னைகள்,குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களில் "கவுன்சிலிங்' கொடுக்கப்படுகிறது. இதுபோன்ற சமூக சீர்கேடு காரணமாக அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்து, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
காரணங்கள் என்ன?
"இளம் வயதினரை மீட்கலாம்' :
மன நல டாக்டர் மோனி கூறியதாவது:திருப்பூர் போன்ற நகரங்களில் வேலை தேடி வருபவர்கள் தனிமையில் வசிப்பதால், ஏதாவது ஒரு கஷ்டம் வரும்போது உதவ ஆள் இல்லையே என தவறான கருத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர். தனிமையில் வசிப்பதாலேயே கள்ளத்தொடர்பு ஏற்படுகிறது. வேலைவாய்ப்பு குறைவு, இளைஞர்கள், வளர் இளம்பெண்கள் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு, பிரச்னைகளை எப்படி தீர்ப்பது என தெரியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். எளிதில் காதல் வயப்படுவதும், தோல்வி, குடும்பத்தை கவனிக்காமல் துரோகம், மனைவிக்கு, கணவருக்கு துரோகம், செக்ஸ் ஏமாற்றம் போன்ற குற்ற உணர்வுகளாலும் தற்கொலைக்கு முயல்கின்றனர்.
திருப்பூரில் மது விற்பனை அதிகம், கஞ்சா, ஒயிட்னர், போதை பாக்குகள் என இளைய சமுதாயம் அதிகளவு சீரழிந்து, தற்கொலை, கொலை உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு உள்ளாகின்றனர். சமூக, கலாசார சீரழிவுகளும் அதிகரிக்கிறது. எளிதில் உணர்ச்சிவசப்படும் "பார்டர் லைன் பர்சனாலிட்டி' நபர்களான ஆண்கள், பெண்கள், வாய்விட்டு பிரச்னைகளை வெளியே சொல்ல முடியாமல் தவறான பாதைகளுக்கு செல்கின்றனர். தற்கொலை எண்ணம் உருவாகும் நபர்களுக்கு, மூளையிலுள்ள வேதிப்பொருளான "செரட்போனின்' குறைகிறது.
குடும்ப உறவுகளில் மனம்விட்டு பேசினாலே தற்கொலை உள்ளிட்டவற்றை குறைக்கலாம். சமூக பிரச்னைகள், அடக்க முடியாத பிரச்னைகள், மனைவியின் நடத்தையில் சந்தேகம், விவாகரத்து, மனமுறிவு, மதுவுக்கு அடிமை, வறுமை, போதிய கல்வி அறிவு இல்லாதது ஆகியவற்றால், தாழ்வு மனப்பான்மை அதிகரிக்கிறது. சமூகம் சார்ந்த பிரச்னையாக அணுகினால், திருப்பூரில், தற்கொலை, கலாசார சீரழிவு காரணமாக தடம் மாறும் இளம் வயதினரை மீட்கலாம்.இவ்வாறு, டாக்டர் மோனி கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இதை எப்படிக் காதலாக சொல்லலாம். காசு செலவில்லாத திருட்டு மாங்காய் தேடும் நபர்கள் பெருகியதே காரணம். பெண்களை படிக்க விட்டார்களா? இல்லை பிழைக்கத்தான் விட்டார்களா? கணவன் இறந்த பின் கருணை அடிப்படையில் வேலை கிடைக்கும் முன்னே அவளுக்கு உதவுவதாய் சுற்றி வளைத்துப் போட்டு விடுகிறார்களே. ஆம் செலவில்லாத வைப்பு.. செமத்தியாய் குடிக்க பணம் பறிக்கலாம் இரண்டு பேதைகளிடம்
இங்கு கருத்து சொல்வதுபோல் கட்டுபாடுகள் விதித்தால் எல்லாம் சரியாகி விடாது...நன்கு உற்று நோக்கினால் தெரியும்..இதற்கெல்லாம் சமுதாய ஏற்ற தாழ்வுகள் தாம். ஆம் எங்கெல்லாம் ஏழை பணக்கார வித்தியாசம் அதிகரிக்கிறதோ அங்கெல்லாம் இதுபோன்ற சமுதாய சீரழிவுகளை தடுக்க முடியாது..அதனால்தான் நம்நாட்டில் தற்கொலைகள் நிறைய நடக்கின்றன..
திருப்பூரில் வேலை செய்யும் பெண்கள் என்றாலே ஒருவித தவறான கண்ணோட்டத்தில் தான் பலரும் பார்க்கிறார்கள். பனியன் மற்றும் அது சார்ந்த தொழிலகங்களில் வேலை பார்க்கும் அதிகம் படிப்பறிவில்லாத இளம் பெண்கள் சீக்கிரம் பாதை மாறி விடுகிறார்கள் அல்லது பாதை மாற்றப்பட்டு விடுகிறார்கள். இந்திய அளவில் தற்கொலை அதிகம் நிகழும் பகுதிகளுள் ஒன்று திருப்பூர். திருப்பூர் கம்பனிகள் பலவும் பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளன. அவர்களுக்கு தம் தொழிலாளர்களை பற்றி அக்கறை கொள்ள நேரமில்லை. அரசும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இந்நிலை மாற முயற்சி செய்ய வேண்டும்.
பெரும்பாலான நிறுவனங்கள் சமூக பொறுப்புடன் செயல் படுவதில்லை அதை கண்காணிக்கும் பொறுப்பில் இருக்கும் அரசாங்கமோ அந்நிய செலாவணியில் மட்டுமே குறியாக உள்ளது, தனிமை தான் மனிதனின் மிகப்பெரிய எதிரி, வேலை நேரத்திலும் வெளியிலும் தொழிலாளர் அனுபவிக்கும் தனிமை உணர்வு தான் அவர்களை இந்த நிலைக்கு இட்டு சென்றுள்ளது என நினைக்கிறேன்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.