Kerala: Phone romance goes sour as 'boyfriend' turns out to be a 70-year-old | மொபைல் போன் மூலம் காதல்: 70 வயது காதலனை கண்டு காதலி அதிர்ச்சி | Dinamalar
Advertisement
மொபைல் போன் மூலம் காதல்: 70 வயது காதலனை கண்டு காதலி அதிர்ச்சி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

கண்ணூர்: மொபைல்போன் மூலமாக ஒருவரை, ஓராண்டு காலமாக, காதலித்து வந்த, 23 வயது இளம் பெண், முதல் முதலாக, காதலனை கண்டதும் அதிர்ச்சி அடைந்து, மயங்கி விழுந்தார். அவரது அதிர்ச்சிக்கு காரணம், காதலனின் வயது, 70, என்பதே.

கேரளா, திருவனந்தபுரம் போத்தன்காடு பகுதியைச் சேர்ந்த, 23 வயது இளம் பெண்ணுக்கு, ஓரு ஆண்டுக்கு முன், கண்ணூர் பகுதியைச் சேர்ந்த, அம்சா என்பவர், மொபைல் போன் மூலம் அறிமுகமானார். எம்.டெக்., பட்டதாரியான, அந்த இளம் பெண்ணும், அம்சாவும், அடிக்கடி மொபைலில் பேசினர்.இதில், இருவரும் காதல் வயப்பட்டனர். ஓராண்டாக, இருவரும் நேருக்கு நேர் பார்க்காமலேயே, மொபைல் பேச்சிலேயே தங்கள் காதலை வளர்த்தனர்.இந்நிலையில், காதலனை பார்த்து விடவேண்டும் என்ற ஆவல், அந்த இளம் பெண்ணுக்கு ஏற்பட்டது. அதற்காக, இம்மாதம், 9ம் தேதி இரவு, திருவனந்தபுரத்திலிருந்து பஸ்சில் புறப்பட்டு, அதிகாலை, 5:00 மணிக்கு, கண்ணூர் கூத்துப்பரம்பு பஸ் நிலையம் சென்றடைந்தார்.

அங்கிருந்தபடி, பலமுறை காதலனை தொடர்பு கொள்ள முயற்சித்தும், முடியவில்லை. இதனால், நீண்ட நேரம் பஸ் நிலையத்தில் சுற்றித் திரிந்தார். அதைக்கண்ட சிலர், போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், இளம்பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.விசாரணையில், அவர் தன் காதலன் அம்சாவை தேடி வந்ததாக கூறி, அவரது மொபைல்போன் எண்ணை போலீசாரிடம் கொடுத்தார். போலீசார் அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, இப்ராகிம் என்பவர், போனை எடுத்தார்.


அவர் உடனடியாக, போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். "இளம் காதலன் வருவார்' என, ஆவலோடு காத்திருந்த இளம்பெண்ணுக்கு, இப்ராகிமை கண்டதும் கலக்கம் ஏற்பட்டது. ஏனெனில், அவருக்கு வயது, 70, என்பதுதே காரணம்.அவர் தான், இதுவரை தன்னுடன் மொபைலில் பேசி வந்த காதலன் என, தெரிந்ததும், அதிர்ச்சி அடைந்து, அப்பெண் மயக்கமடைந்தார். அவர் மயக்கம் தெளிய, போலீசார் உதவினர். மயக்கம் தெளிந்து எழுந்த அப்பெண், "இளம் வயதுடையவர், அம்சா தன் பெயர்' என, இப்ராகிம் தன்னிடம் பொய் சொல்லி, ஏமாற்றி விட்டதாக, போலீசில் புகார் செய்தார்.


போலீசார் நடத்திய விசாரணையில், இதுவரை ஒரு முறை கூட, இப்ராகிம் அப்பெண்ணை அழைத்து பேசியதில்லை என்றும், இளம்பெண்ணுக்கு சொந்தமாக, மொபைல்போன் இல்லை என்றும், அவரது உறவினர்களின் மொபைல் போன் மற்றும் தரைவழி தொலைபேசி மூலம், இப்ராகிமை, அவரே தொடர்பு கொண்டு காதலை வளர்த்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.இதையடுத்து, அந்த இளம் பெண்ணின் உறவினர்களை போலீசார் வரவழைத்து, அவர்களிடம், அப்பெண்ணை ஒப்படைத்தனர்.


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (49)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dinachellam - chennai,இந்தியா
17-நவ-201214:31:18 IST Report Abuse
dinachellam ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம் பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப் போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம் நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம் ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம் பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ravi - erode,இந்தியா
15-நவ-201222:18:13 IST Report Abuse
ravi இது எல்லாம் சுத்த பொய் , 70 வயசு ஆம்பள பேசினா 23 வயசு பொண்ணுக்கு அடையலாம் தெரியாதா.... சும்மா கதை விடாதிங்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
குட்டிப்பிசாசு - San Francisco,யூ.எஸ்.ஏ
15-நவ-201200:36:53 IST Report Abuse
குட்டிப்பிசாசு வயசில சின்னப்பொண்ணு அரைவேக்காட்டுத் தனமா உளறினா பொறுப்புள்ள வயதில் உள்ள தாத்தா என்ன செய்திருக்க வேண்டும்? இதற்கு பதில் எல்லோருக்கும் புரியும் தெரியும். அந்தாளை யாரும் திட்டியதாகத் தெரியவில்லை. மற்ற நேரங்களில் அந்தப் பெண் கூப்பிட்ட பொழுது பேசிய ஆள், அவள் ஊருக்கே வந்து கூப்பிட்டவுடன் கம்மென்று இருந்திருக்கிறார். அவள் உங்கள் ஊரில் இருக்கிறேன் என்றுசொன்னவுடன் அவளிடம் இருந்து வந்த ஃபோனை எடுக்க வில்லை. போலீஸ் நம்பர் என்றதும் பேச முடிந்த அந்த ஆளுக்கு அதற்கு முன் ஃபோனில் ஏன் பேச முடியவில்லை? கள்ள உள்ளம்தானே. அது அவளுடைய ஃ போன் இல்லை என்றால் அவள் யாருடைய ஃபோனையோ தூக்கிக் கொண்டு ஊர் சுற்றுகிறாளா? கடைசியில் பேசாமல் தவிர்த்ததை போல முன்பே அந்த பெண் கூப்பிட்ட பொழுது தவிர்த்திருக்கலாம் அல்லவா அந்தக் கிழவன்? இது போன்ற ஆட்கள் தப்பி விடுவார்கள். அந்தப் பெண்ணையும் வளர்த்த பெற்றோரையும் வாய் கூசாமல் தூற்றும் உலகம் இது. என்ன ஒரு தார்மீக அடிப்படையோ புரியவில்லை.
Rate this:
0 members
1 members
10 members
Share this comment
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
15-நவ-201217:38:32 IST Report Abuse
dori dori domakku doriபேருக்கு ஏத்தாபோல சமூகத்துக்கு நல்ல அரை உட்டீங்க, ஆன்னா நீங்க குட்டி பிசாசா, அதனால சமூகத்துக்கு "durrrrrrra" கிளப்புல , அதனால பெரிய பிசாச கூட்டிவாக ,இல்லேனா நீங்க வளர்ற வரைக்கும் வெயிட் பண்ணுக , சமூகம் எங்கயும் ஓடிபோகாது ....
Rate this:
1 members
0 members
4 members
Share this comment
Cancel
Nellai Tamilan - Nellai,இந்தியா
15-நவ-201200:29:14 IST Report Abuse
Nellai Tamilan ஐயோ ஐயோ , ஏய் மலையாள பெண்ணே, உன்ன பார்த்தா சிரிப்பு சிரிப்பா வருது
Rate this:
0 members
0 members
22 members
Share this comment
Cancel
suresh - chennai,இந்தியா
14-நவ-201217:38:18 IST Report Abuse
suresh வெலங்கும்..இந்த பொண்ணு நெஜமாவே M Tech படிச்சதா? நல்லா லவ் பண்றீங்க? எனக்கு ஒரு சந்தேகம் ஒரு வருசமா கண்டு பிடிக்க முடியலையா? குரல் வளம் கூடவா தெரியாது?
Rate this:
2 members
3 members
8 members
Share this comment
Cancel
தமிழன் - Melanikuzhi(Ariyalur-DT),இந்தியா
14-நவ-201215:43:44 IST Report Abuse
தமிழன் முறையாக ஆண் (21 வயது ) பெண் (18 வயது ) என அந்தந்த வயதில் பெற்றோர்கள் திருமணத்தை நடத்தினால் 99 % பாலியல் குற்றங்களை தடுக்க முடியும் ........... பெற்றோர்கள் இந்த நல காரியத்தை செய்வார்களா ?
Rate this:
3 members
2 members
37 members
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-நவ-201221:03:26 IST Report Abuse
தமிழ்வேல் உங்களுக்கு வயசு இருபத்தொன்றா ?...
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
Ramesh Kannan - Singapore,சிங்கப்பூர்
14-நவ-201215:28:20 IST Report Abuse
Ramesh Kannan ஹையோ .எனக்கு அடுத்ததாக எழுத ஒரு நல்ல கதைமூலம் கிடைத்திருகிறது .
Rate this:
2 members
2 members
3 members
Share this comment
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
14-நவ-201219:44:45 IST Report Abuse
dori dori domakku doriMr ரமேஷ் கண்ணன் , இந்த தகவல் சாக்கிலே , சைக்கிள் கேப் ல கிடா வெட்டிடேலே ...
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
14-நவ-201219:53:53 IST Report Abuse
dori dori domakku doriபேஸ் புக்ல எத்தனை சின்ன பசங்கவ- 70 -20 (gents ,லேடீஸ் ) 20 70 (Gents ,லேடீஸ் ) - communicationai வால் ல upload செய்து கல்லாய்சு yechaarikiranga . இந்த பொண்ணு என்ன லூசா?????...
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
14-நவ-201221:27:09 IST Report Abuse
villupuram jeevithanசினிமா எடுக்க என்று சொல்லுங்கள்?...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
14-நவ-201214:56:48 IST Report Abuse
p.manimaran தயவு செய்து இதை காதல் என்று காதலை கொச்சை படுத்தா தீர்.
Rate this:
2 members
1 members
17 members
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
14-நவ-201221:27:51 IST Report Abuse
villupuram jeevithanஇதை போய் காதல் என்கிறீரா?...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Thayumanaswamy Selvamani - Chelles,பிரான்ஸ்
14-நவ-201214:42:31 IST Report Abuse
Thayumanaswamy Selvamani ஒரு அரசியல் தலைவர் சொன்னது உண்மைதான் என்று நிரூபனமாகிவிட்டது. மாதர் சங்கங்கள் என்ன செய்கின்றார்கள். முகத்தில் கரியை பூசிகொள்ளட்டும்.
Rate this:
2 members
0 members
8 members
Share this comment
Cancel
Raj Pu - mumbai,இந்தியா
14-நவ-201214:18:15 IST Report Abuse
Raj Pu //இப்ராகிம் அப்பெண்ணை அழைத்து பேசியதில்லை என்றும், இளம்பெண்ணுக்கு சொந்தமாக, மொபைல்போன் இல்லை என்றும், அவரது உறவினர்களின் மொபைல் போன் மற்றும் தரைவழி தொலைபேசி மூலம், இப்ராகிமை, அவரே தொடர்பு கொண்டு // யார் யாருக்கு செய்தார்கள், யாரிடம் உள்ளது யாரிடம் இல்லை, இந்த செய்தியாளரும் குழப்பிவிட்டார்.
Rate this:
1 members
1 members
12 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்