solar auto | சூரியஒளி, காற்று, மின் ஆற்றலால் இயங்கும் ஆட்டோ உருவாக்கல்| Dinamalar

சூரியஒளி, காற்று, மின் ஆற்றலால் இயங்கும் ஆட்டோ உருவாக்கல்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
சூரியஒளி, காற்று, மின் ஆற்றலால்  இயங்கும் ஆட்டோ உருவாக்கல்

திண்டுக்கல்: சூரிய ஒளி, காற்று, மின் ஆற்றல்களை கொண்டு இயங்க கூடிய வகையில் ஆட்டோ ஒன்றை திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லூரி பேராசிரியர் மோசேதயான், மின்னணுவியல் துறை மாணவர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.
இந்த ஆட்டோ இயங்கும் போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது. ஆட்டோவை ஒரு முறை முழு அளவில் சார்ஜ் செய்தால், 96 கி.மீ., தூரத்திற்கு தற்போதைய ஆட்டோக்கள் இயங்கும் வேகத்தில் இயக்க முடியும்
என்கின்றனர். நமது நாட்டில், ஆண்டுக்கு 300 நாட்கள் சூரிய ஒளி கிடைக்கும். காற்றலை சக்தியும் கிடைக்கும். சோலார் மின்தகடுகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட காற்றாலைகள் மற்றும் மின்சக்சதியின் மூலம் சேகரிக்கப்படும். இச்சக்தி, ஆட்டோவில் இணைக்கப்பட்டுள்ள மின்கலத்தில் சேமிக்கப்படும். ""எஸ்ஆர்எம்'' மோட்டார் மூலம் ஆட்டோ இயங்குகிறது. இந்த ஆட்டோவில் ஆற்றல் குறைந்து விட்டால் பெட்ரோல் மூலமாகவும் இயக்க முடியும்.பேராசிரியர், மாணவர்கள் கூறியதாவது: எதிர்காலத்தில் மேலைநாடுகளை போல நம் நாட்டிலும் மின் சார்ஜர் நிலையங்கள் உருவாகிவிடும். இதை சிறு திட்டமாக துவங்கினோம். நாட்டுக்கு பயன்படும் வகையில் உருவாக்கி முடித்துள்ளதில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆரம்ப நிலையில் வடிவமைத்து இருக்கிறோம். மேலும் சில மாற்றங்கள் செய்து வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்யும்போது, அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள், என்றனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (22)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohamed rafi - Pondicherry,இந்தியா
15-நவ-201209:29:02 IST Report Abuse
Mohamed rafi கேக்கவே ரொம்ப நல்லா இருக்குங்க... ஆனா சார்ஜ் போட கரன்ட்டுக்கு எங்க போறது...?
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-நவ-201222:41:46 IST Report Abuse
Pugazh V ஒரு ஆட்டோ மேல் சோலார் செல் பிக்ஸ் செய்ய சுமார் எண்பதாயிரம் ஆகும் என்ற தகவலைப் போட்டிருக்க வேண்டும். ஏன் போடவில்லை. சென்ட்ரல் போக ஆட்டோ பிடித்தால் சைதாப்பேட்டை வரும் போதே, வெய்யில் போச்சுன்னா அம்பேல் தான். இந்த ஆட்டோ ஆறு மணிக்கு மேல ஓடாது. ஏன் இப்படி போகாத ஊருக்கு வழி தேடுகிறார்கள்? இது லாபகரமானதெனில் எப்போதோ செய்திருக்க மாட்டார்களா? அப்போ, பஸ் இன்னும் பெருசாச்சே, அது மேல சோலார் செல் பிக்ஸ் பண்ணுவீங்களா? லட்சக் கணக்கில் ஆகும் அதான் இது செயல் படுத்தப் படவில்லை. அப்படியே செய்தாலும், ஸ்டார்ட் பண்ண பெட்ரோல் அல்லது டீசல் தான் வேண்டும். சோலார் பனால் சக்தியில் ஆட்டோ பஸ் எதுவும் ஸ்டார்ட் ஆகாது.ஜப்பானில் சோலார் செல் பிக்ஸ் செய்த கார்கள் கூட விலை போகவில்லை என்பது பழைய செய்தி. கலைக்கதிர் என்று ஒரு அறிவியல் புத்தகம் வருகிறது. அதில் சோலார் கார் பற்றிப் பல வருடம் முன்பே வெளி வந்து விட்டது.
Rate this:
Share this comment
Mr y - thamizhnadu,இந்தியா
15-நவ-201209:51:29 IST Report Abuse
Mr yபுகழ் தங்களின் விமர்சனம் தங்கலுக்கு புகழ் சேர்பதாக இல்லை. உங்கள் கருத்து வெறும் வெத்து வேட்டு. நீங்கள் சொல்லியுள்ள குறைகள் அனைத்துக்கும் நிச்சயம் மாற்று ஏற்பாடுகள் செய்ய முடியும். பெட்ரோல் விலைய ஏற்றிக்கொன்டே போய் ஒரு நாள் பெட்ரோல் சுத்தமாக கிடைக்காத போது உங்களுக்கு முதலில் இந்த சித்திதான் நினைவுக்கு வரும்...
Rate this:
Share this comment
Jegan - chennai,இந்தியா
15-நவ-201219:24:24 IST Report Abuse
Jeganஒரு செய்தியை பற்றி கருத்து எழுதும்போது முழுக்க படித்துவிட்டு எழுதணும் திருவாளர் புகழ் அவர்களே. தற்போது ஆட்டோ இயங்கும் அதே வேகத்தில் 96 கி மி செல்லலாம் ஒருமுறை சார்ஜ் செய்தால் என்கிறார். மேலும் பாட்டரியை ஆட்டோவின் தலையில் வைத்து மட்டுமே சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஒரு சார்ஜ் செய்யப்பட பாட்டரியில் ஓடும் போடு இன்னொரு பாட்டரியை சார்ஜ் செய்ய கூடாது என்று ஒரு சட்டமும் இல்லை. மேலும் சார்ஜ்ட் பாட்டரி இருந்தால் பகலிலும் ஓட்டலாம் இரவிலும் ஓட்டலாம். மின்மொட்டார்கள் ஸ்டார்ட் செய்ய பெட்ரோலும் டீசலும் வேண்டும் என எந்த மடையன் சொன்னான்? எலக்ட்ரிக் ட்ரெயின் தண்ணீர் இறைக்கும் பம்ப் இவற்றை எல்லாம் எப்படி ஸ்டார்ட் செய்கிறார்களோ அப்படி இந்த ஆடோவையும் ஸ்டார்ட் செய்யலாம். ஜப்பானில் ஒரு வருடத்திற்கு எத்தனை நாள் வெயில் அடிக்கிறது. நிலநடுக்கோட்டிற்கு அருகே நாம் இருப்பதால் வருடத்தில் 50 நாட்களுக்கும் குறைவாக தான் நமக்கு வெயில் இருக்காது. ஜப்பான் வடக்கே தள்ளி இருப்பதால் சூரிய ஒளி அங்கே குறைவு. அதனால் சூரிய ஒளி சாதனங்கள் அந்த நாடுகளில் வெற்றி பெற வில்லை. நம் நாட்டில் அரசியல் தடைகள் அதிகம். அதை தாண்டி சந்தைபடுத்த முடிந்தால் மிகப்பெரிய வெற்றி பெறும். மேலும் சோலார் சாதனைகளுக்கு மத்திய அரசு பல சலுகைகளையும் மானியங்களையும் தருகிறது. எனவே சோலார் பானல் ஒன்றும் பெரிய அளவு செலவு வைக்காது பெட்ரோலுக்கு செலவிடும் பணத்துடன் ஒப்பிட்டால்....
Rate this:
Share this comment
Cancel
Jegan - chennai,இந்தியா
14-நவ-201221:46:18 IST Report Abuse
Jegan சோலார் பாட்டரி சார்ஜர் + பாட்டரியில் இயங்கும் வாகனம் என தனித்தனியே மேம்பட்ட திறனுடன் கண்டு பிடித்தால் வர்த்தக ரீதியாக வெற்றி பெறலாம்.
Rate this:
Share this comment
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
14-நவ-201218:26:12 IST Report Abuse
K.Balasubramanian இந்த முயற்சி எவ்வளவில் பலன் கொடுக்கும் என சரியான தகவல் இல்லை .சூரிய தகடும் பாட்டரியும் சரி. காற் று எங்கே பயன் படுத்த படுகிறது -தெரிய வில்லை தவிர எரி பொருள் மாற்று ஏற்பாடு உண்டு என்கிறார்கள் ஏன்?விளக்கங்கள் தவிர VRDE Pune போன்ற அமைப்புகள் அனுமதி தேவை .
Rate this:
Share this comment
Jegan - chennai,இந்தியா
14-நவ-201223:28:06 IST Report Abuse
JeganMr. K.Balasubramanian <<< //சோலார் மின்தகடுகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட காற்றாலைகள் மற்றும் மின்சக்சதியின் மூலம் சேகரிக்கப்படும்.// இதில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட காற்றாலைகள் என்ற வரிகளை நீங்கள் படிக்க வில்லையா?...
Rate this:
Share this comment
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
17-நவ-201208:05:42 IST Report Abuse
K.Balasubramanianநண்பர் ஜெகனுக்கு பதில் <<
Rate this:
Share this comment
Cancel
Arul - Chennai,இந்தியா
14-நவ-201218:14:09 IST Report Abuse
Arul வாழ்த்துகள். நீங்கள் எடுத்த முயற்சிக்கு நன்றி.
Rate this:
Share this comment
Cancel
manivannan - riyadh,சவுதி அரேபியா
14-நவ-201217:51:28 IST Report Abuse
manivannan உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள், நம்ம தமிழ்நாட்டிற்கு மிக மிக அவசியம், தரணி எங்கும் தமிழன் புகழ் பரவட்டும்.
Rate this:
Share this comment
Cancel
S.Sudhahar - Melur,இந்தியா
14-நவ-201216:18:18 IST Report Abuse
S.Sudhahar சூரிய சக்தியும் ஒரு மாற்று எரிபொருள் தான் அதைவைத்து வாகனம் மின்சாரம் தயாரிக்கலாம். இதை வைத்துகொண்டு ஆட்டோ ஓட்டுவது பெரிய கலை அல்ல. இது ஒரு ப்ராஜெக்ட் அவ்வளவு தான்
Rate this:
Share this comment
Vignesh - Coimbatore,இந்தியா
15-நவ-201218:59:28 IST Report Abuse
Vigneshஅவர்களும் அதை தான் சொல்கிறார்கள்......
Rate this:
Share this comment
S.Sudhahar - Melur,இந்தியா
17-நவ-201214:21:45 IST Report Abuse
S.Sudhaharநானும் அதைத்தான் சொல்கிறேன் நண்பரே...
Rate this:
Share this comment
Cancel
தமிழன் - Melanikuzhi(Ariyalur-DT),இந்தியா
14-நவ-201215:22:44 IST Report Abuse
தமிழன் மின்வெட்டு தான் நம் தமிழ் நாட்டை ஆட்சி செய்கிறது ............................................
Rate this:
Share this comment
AnanKumar - Chennai,இந்தியா
15-நவ-201200:34:53 IST Report Abuse
AnanKumarஅப்படி என்றால் அடுத்த ஆட்சி...............................
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
14-நவ-201215:15:32 IST Report Abuse
g.s,rajan இங்கே சென்னையிலே பெட்ரோல் விலை அதிகம்,டீஸல் விலை ஏறி போச்சு,விலை வாசி அதிகம் அப்படின்னு சொல்லி பொது மக்கள் தலையை மொட்டை போட்டு விட்டு பர்சை காலி பண்ணிட்டுத்தான் அனுப்புறாங்க ,அதை மொதல்லே சென்னையில அறிமுகப்படுத்தி பயணிகளை அடாவடி மீட்டர் போடாத ஆட்டோக்காரங்களிடம் இருந்து காப்பாத்துங்க ,உங்களுக்கு கோடி புண்ணியம் .
Rate this:
Share this comment
Cancel
ungalil oruvan - Chennai,இந்தியா
14-நவ-201214:02:22 IST Report Abuse
ungalil oruvan வாழ்த்துக்கள் இது வெறும் PROTOTYPE அளவில் நின்று விடாமல் இது போன்ற முயற்சிகளை எதவாது ஒரு அரசியல் கட்சியோ, பெரும் தொழில் அதிபர்களோ sponsor எடுத்து முழுமைபடுத்தி COMMERCIAL பொருளாக கொண்டு வரவேண்டும். மாற்று எரிபொருள் இன்றைக்கு தேவைப்படாமல் இருக்கலாம், ஆனால் பெட்ரோலும் டீசலும் அடுத்த தலைமுறைகளுக்கு கண்டிப்பாக கிடைக்காது. இதுபோன்ற நிகழ்வுகள் ஒரே நாளில் நிகழாது. அதற்கான முயற்சிகளை இப்போதே தொடங்கினால்தான் சாத்தியமாகும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.