அக்கறை காட்டுவோம் சர்க்கரை மீது: இன்று உலக நீரழிவு நோய் தினம்...
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

உடலில் இன்சுலின் உற்பத்தி மற்றும் அதன் செயல்பாடுகளில் குறை ஏற்படுவதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால், உணவிலிருந்து சக்தியை எடுக்க முடியாமல் ஏற்படுவதே நீரிழிவு நோய்.இதை குணப்படுத்தும் இன்சுலின் மருந்தை, சார்லஜ் ஹெர்பர்ட் பெஸ்ட் என்பவருடன் இணைந்து கண்டுபிடித்த கனடாவைச் சேர்ந்த மருத்துவ அறிஞர் "பிரெட்ரிக் பேண்டிங்கை' கவுரப்படுத்தும் விதமாக, அவரது பிறந்த நாளான நவ., 14, உலக நீரிழிவு நோய் தினமாக ஐ.நா., அறிவித்தது. 2009 - 2013 வரை, "டயபெட்ஸ் கல்வி மற்றும் தடுப்பது' என்பது மையக்கருத்தாக உள்ளது. 2 வகை: நீரிழிவு நோயில், இரண்டு வகைகள் உள்ளன. இன்சுலின் முற்றிலும் சுரக்காமல் நின்று விடுவது முதல் வகை. இது குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. இரண்டாவது வகை, இன்சுலின் போதிய அளவு சுரக்காமல் இருப்பது. இவ்வகை தான், 90 சதவீதம் பேருக்கு உள்ளது. 45 வயதுக்கும் மேற்பட்டோர், அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எங்கு அதிகம்: உலகம் முழுவதும், 34 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2030க்குள் இது இரு மடங்காக அதிகரிக்கும் என உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. நீரிழிவு நோயால் இறப்பவர்களில் 80 சதவீதம், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளை சேர்ந்தவர்கள். இந்தியாவில் மட்டும், ஐந்து கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில ஆண்டுகளில் இது, 7 கோடியாக உயரும் என அஞ்சப்படுகிறது.வாழ்நாள் முழுவதும் துரத்தும் இந்நோய், குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. இவ்வகை குழந்தைகளுக்கு பெற்றோரின் கண்காணிப்பு அவசியம். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதோ, குறைவதோ கூட ஆபத்தில் முடியலாம். மருத்துவ பராமரிப்பும், அலோசனையுடன் கூடிய உணவுக் கட்டுப்பாடு அவசியம். அதிக உணவு, குறைவான வேலை என்று இருக்கக்கூடாது.
உடற்பயிற்சி அவசியம்: உடல்
எடை அதிகரித்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி பசி, அதிக தாகம் போன்றவை அறிகுறிகள். துவக்கத்திலேயே சிகிச்சை எடுக்கத் தவறினால் கண், இருதயம், சிறுநீரகம், கால் ஆகியவற்றை பாதிப்படைய செய்யும். உணவு முறை, உடற்பயிற்சியால் இரண்டாவது வகை நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheenu Meenu - cheenai,இந்தியா
15-நவ-201201:05:12 IST Report Abuse
Cheenu Meenu இன்றைய குழந்தைகள் பிறக்கும்போதே கொழு கொழு வென்று பிறக்கின்றது. டாக்டர்கள் கருத்தரித்த பெண்களுக்கு தேவையோ இல்லையோ இயற்கையாக கிடைக்க வேண்டிய சத்துக்களை வைட்டமின் மாத்திரைகளாக கொடுத்து விடுகின்றனர். இன்றைய பெரும்பாலான பெண்களுக்கு உடல் உழைப்பே கிடையாது. பாமார ஜனங்களுக்கும் அரசு இலவச மிக்சி, கிரைண்டர், டிவி கொடுத்தது பெண்களை வேலை செய்ய விடாமல் சோம்பேறியாக ஆக்கிவிட்டது. மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் அவர்கள் கர்ப்ப காலத்திலேயே அவர்கள் பெற்றோர் மூலமாக வயிற்றில் குழந்தையாக வளரும் போதே ஏற்பட்டு விடுகிறது என்று ஆயுர் வேதமும், சித்த வைத்தியமும் சொல்கிறது. வயது ஆகஆக நோயின் அறிகுறிகள் தேறிய வருகின்றன. போதா குறைக்கு பிச்சா, பாஸ்ட் புட் வகையறாக்களும் சேர்ந்து சீக்கிரமாக இளம் வயதிலேயே நோய்வாய் படுகின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
OruTamilan - Mumbai,இந்தியா
14-நவ-201217:28:47 IST Report Abuse
OruTamilan இதற்க்கு முழு காரணம் நம் மோசமான அரசியல் மற்றும் கல்வி முறையே ஆகும். நாம் பள்ளியில் படிக்கும் பொது விளையாட்டு மற்றும் யோகா வகுப்பு என்று ஒன்று இருந்தது, இது நாளடைவில் யோகா வகுப்பு காணமல் போயிட்ட்ரு. பிறகு விளையடுவதருக்கு இடம் இல்லாத பள்ளிக்கு தகுதி சான்று தந்து நம் விளையாட்டையும் மறந்து மனித மிருகம் போல் மாறிக்கொண்டு இருக்கிறோம். சொந்தத்தில் திருமணம் செய்வைதை தவிர்த்து, கலப்பு மனதை ஆதரிக்க வேண்டும். வியாதி இல்லாத மக்கள் வேண்டும், அப்போதுதான் வளமான இந்தியாவை உருவாக்க முடியும்.
Rate this:
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
14-நவ-201205:46:23 IST Report Abuse
Skv நமது உணவு முறைகளும முக்கிய காரணம். நெறையே அரிசி சோர தின்கிறோம். நம் உணவுலே இனிப்பும் நெறைய சேர்க்கிறோம். அதிகம் நடப்பதில்லை. பூசணிக்காய் போல உக்காந்தே இருக்கோம்.
Rate this:
Share this comment
Mohanadas Murugaiyan - Ras al Khaima,ஐக்கிய அரபு நாடுகள்
14-நவ-201220:12:36 IST Report Abuse
Mohanadas Murugaiyanஅரிசி சோறு சாப்பிடிவது தவறில்லை. அத்துடன் நம் பாரம்பரிய உணவு வகைகளை ( துவையல்,அவியல்,மசியல் போன்று ...) முறையாக சேர்த்து சாப்பிடும் போது உணவே பெரும்பாலான வியாதிகளுக்கு மருந்தாக இருந்தது. இப்போது எல்லோரும் இட்லி,தோசை, சாம்பார் என்று நாகரிகம் கருதி களி, பழைய சோறு + வெங்காயம், துவையல் ....இதையெல்லாம் மறந்து விட்டோம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்