Modi confident of victory in Guj Assembly polls | டிச.20 தேதி குஜராத்திற்கு மீண்டும் தீபாவளி : முதல்வர் நரேந்திர மோடி | Dinamalar
Advertisement
டிச.20 தேதி குஜராத்திற்கு மீண்டும் தீபாவளி : முதல்வர் நரேந்திர மோடி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

காந்திநகர் : குஜராத் மாநில சட்டசபை தேர்தலில், தனது தலைமையிலான அரசு மாபெரும் வெற்றி பெறும் என்றும், முடிவுகள் வெளிவரும் நாளான டிசம்பர் 20ம் தேதி தான் குஜராத்திற்கு மற்றொரு தீபாவளி என்று குஜராத் முதல்வர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி கூறியுள்ளார்.

தீபாவளித் திருநாளுக்கு மறுநாள், குஜராத் மாநில புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, மக்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், முதல்வர் மோடி குறிப்பிட்டுள்ளதாவது, குஜராத் மக்கள், மாநிலத்தை இருளின் பாதைக்கு கொண்டு செல்ல ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். வளர்ச்சிப் பாதையில், கடந்த 11 ஆண்டுகாலமாக கொண்டு சென்றுள்ள தனது பணியை, மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அவர்கள் தீர்மானித்துள்ளனர். விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

தீபஒளித் திருநாளான தீபாவளியை தற்போது கோலாகலமாக கொண்டாடி முடித்துள்ள குஜராத் மாநில மக்கள், டிசம்பர் மாதம் 20ம் தேதி, மீண்டும் பிரமாண்ட தீபாவளியை கொண்டாட உள்ளனர். அது, ஜனநாயக தேர்தலின் வெற்றிக்கான திருவிழா ஆகும் என்று முதல்வர் மோடி அதில் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தில், வரும் டிசம்பர் மாதம் 13 மற்றும் 17ம் தேதிகளில் 2 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான ஓட்டுகள், டிசம்பர் 20ம் தேதி எண்ணப்பட உள்ளது.

சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, மாநில மக்களே, இந்தாண்டு தங்களுக்கு இரண்டு தீபாவளியை கொண்டாடப் போகிறீர்கள் என்று முதல்வர் மோடி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எல்லோரும் ஒன்றுபடுவோம் ; எல்லோரும் வளர்ச்சி பெறுவோம் மற்றும் நமது வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் பெருகட்டும் என்று அவர் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (33)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VIVASAYI - Salem,இந்தியா
16-நவ-201201:57:14 IST Report Abuse
VIVASAYI டிசம்பர் 21 ல உலகம் அழ்ஞ்சிடும்னு சொல்லுதாக. இவரு இருபதாம் தேதி தீபாவளி கொண்டாடப் போறேன்னு சொல்லுதாரு. காரியத்தை கன கச்சிதமா செய்துகிட்டு வராரு..இவருக்கு எதுக்கு இந்த உதார் பேச்செல்லாம்...அதெல்லாம் இல்லாமலே ஜெயிக்கத்தான் போறே செல்லம்...எதுக்கு சொல்லுதன்னா..இங்க தமிழ்ப் புத்தாண்டை மாத்தி வைத்தவர்களை அடுத்தப் புத்தாண்டன்னைக்கு தேடுனா காணோம்..நமக்கு எதுக்கு இரண்டாம் தீபாவளி அது இதுன்னெல்லாம்..
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
Ramesh Kumar - coimbatore,இந்தியா
15-நவ-201219:04:04 IST Report Abuse
Ramesh Kumar தற்போதைய சூழலில் யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மோடி திரும்பவும் ஆட்சியை பிடிப்பது தவிர்க்க இயலாதது. நான் மோடி ஆதரவாளன் இல்லை . ஆனால் நிதர்சனம் இதுதான்.
Rate this:
0 members
1 members
0 members
Share this comment
Cancel
baha - dindigul  ( Posted via: Dinamalar Android App )
15-நவ-201218:47:36 IST Report Abuse
baha மச்சீ ஒரு குவாட்டரு சொல்லே
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Aboobacker Siddeeq - Singapore,சிங்கப்பூர்
15-நவ-201216:57:22 IST Report Abuse
Aboobacker Siddeeq ஜெயிப்பது என்னவோ உறுதி... இது அனைவருக்கும் தெரிந்ததே... தீபாவளியை மக்கள் சந்தோஷமாக கொண்டாடி முடித்தாகி விட்டது... விரைவில் வர இருப்பது கிறிஸ்துமஸ் தினமும் ஆங்கில புத்தாண்டும்... சிறுபான்மையினரை இவர் ஆதரிப்பதாக இருந்தால் இவருடைய வாழ்த்து வேறு விதமாக அல்லவா இருந்திருக்க வேண்டும்...?.. இதில் இருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள்?
Rate this:
6 members
0 members
19 members
Share this comment
Cancel
15-நவ-201214:57:00 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் யாருக்கும் தெரியாத விஷயம் . இந்தியாவிலேயே அதிக முஸ்லிம் போலீஸ்காரர்கள் அதிகாரிகளை தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்தியுள்ளது மோடியின் குஜராத் அரசு தான். அவர்கள் மக்கள்தொகை வீதத்தை விட பல மடங்கு இந்த 5100 இப்படிப்பட்ட மோடியை சிறுபான்மையினர் விரோதியாக சித்தரிப்பவர்கள் மூடர்களே.
Rate this:
20 members
2 members
22 members
Share this comment
Cancel
Saravanan - Chennai  ( Posted via: Dinamalar Android App )
15-நவ-201213:47:58 IST Report Abuse
Saravanan குண்டு சட்டியில் குதி்ரை ஓட்டுவோர் ஒரு முறை குஜராத் சென்று பார்த்து வரவும். ஊழல், இலவசம், கற்பழிப்பு, கரண்ட் கட் போன்ற எதுவும் அங்கே காண முடியாது.
Rate this:
8 members
2 members
22 members
Share this comment
Cancel
Dkodeeswaran Kodees - ADIRAMPATTINAM,இந்தியா
15-நவ-201212:26:29 IST Report Abuse
Dkodeeswaran Kodees இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் நீங்கள் தான். உங்கள் வெற்றி உறுதி, ஜெய் ஹிந்த்.
Rate this:
13 members
0 members
16 members
Share this comment
Cancel
G.Krishnan - chennai,இந்தியா
15-நவ-201212:25:07 IST Report Abuse
G.Krishnan தீபாவளி என்பது மக்கள் சந்தோசபடுவது . . . . அந்த சந்தோசத்தை மறுபடியும் அளிப்பர் திரு மோடி அவர்கள் . . . .என்று பொருள் கொள்ள வேண்டும் . . . . வாழ்த்துக்கள்
Rate this:
22 members
1 members
11 members
Share this comment
Cancel
Peria Samy - chennai,இந்தியா
15-நவ-201212:22:22 IST Report Abuse
Peria Samy தீபாவளி என்பது நரகாசுரனை வதம் செய்த நாள். மோடியை விமர்சித்து நடத்தப்படும் பொய் பிரசாரம் என்னும் அரக்கனை வதம் செய்யப் போகும் நாள் டிசம்பர் 20 ஆம் நாள்..அந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருப்போம். மோடி அவர்களே, உங்கள் பணி குஜராத்துடன் நின்றுவிடக்கூடாது. அகண்ட பாரதம் உங்களுக்காக காத்திருக்கிறது.
Rate this:
13 members
1 members
14 members
Share this comment
Cancel
jayam shiva - pollachi  ( Posted via: Dinamalar Android App )
15-நவ-201212:18:25 IST Report Abuse
jayam shiva jai modi g
Rate this:
4 members
0 members
8 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்