கெங்கவல்லி:கெங்கவல்லி யூனியனில், எம்.எல்.ஏ., தொகுதி நிதியில் மேற்கொள்ள இருந்த பணிகளுக்கு, அ.தி.மு.க.,வினர் டெண்டர் கோரியதால், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., சுபா, அந்த டெண்டரை, ரத்து செய்யும்படி கேட்டுக் கெண்டார்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி தொகுதியில், கெங்கவல்லி யூனியனுக்கு உட்பட்ட, மூன்று பஞ்சாயத்துகளில், கான்கிரீட் சாலை, தலா, 2 லட்சம் ரூபாயிலும், மற்ற இரு ஊர்களில் கான்கிரீட் சாலை மற்றும் ஒரு ஊரில், கழிவுநீர் வாய்க்கால் தலா, 1.50 லட்சம் ரூபாயிலும் செய்ய, டெண்டர் விடுவதாக அறிவிக்கப்பட்டது.கடந்த, 6ம் தேதி, டெண்டர் விடுவதாக அறிவிக்கப்பட்டு, 5ம் தேதி, 2.5 சதவீதம், டிபாசிட் தொகைகளை, ஒப்பந்ததாரர்கள் கட்டியுள்ளனர்.இதில், ஏழு பணிகளுக்கு, அ.தி.மு.க., - தி.மு.க.,வை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் உட்பட, 21 பேர், டெண்டர் கோரியதால், அவர்களது முன்னிலையில், யூனியன், பி.டி.ஓ., ராஜேந்திரன் டெண்டரை பிரித்துள்ளார்.அப்பணியை, அ.தி.மு.க., நிர்வாகியும், ஒப்பந்ததாரருமான ஒருவர், 5 சதவீதம் குறைத்து ஒப்பந்தம் கோரியுள்ளதாக கூறப்படுகிறது. குறைத்து ஒப்பந்தம் கோரியவருக்கு, பணி ஒதுக்க, யூனியன் நிர்வாகம் முடிவு செய்தது.தகவலறிந்த, கெங்கவல்லி தொகுதி, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., சுபா, ""என் தொகுதி நிதி ஒதுக்கீட்டில் செய்யப்படும் பணிகளுக்கு, அ.தி.மு.க.,வினர் எப்படி டெண்டர் போடலாம்?'' என, யூனியன் பி.டி.ஓ.,விடம் வாக்குவாதம் செய்தார்.அதையடுத்து, "யூனியனுக்கு ஒதுக்கீடு செய்த வேலைகள், பணி வரன்முறைகள் சரியில்லை, அந்த பணிகளை ரத்து வேண்டும்' என, எம்.எல்.ஏ., சுபா, யூனியன் பி.டி.ஓ., ராஜேந்திரனிடம் மனு கொடுத்துள்ளார்.அதனால், எம்.எல்.ஏ., நிதியில் செய்யப்படவிருந்த பணிகளை, ரத்து செய்வது குறித்து, மாவட்ட கலெக்டர், மாவட்ட திட்ட இயக்குனருக்கு, பி.டி.ஓ., பரிந்துரை செய்தார். தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., சுபாவிடம் கேட்டபோது, ""தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களை விரோதிகள் போல் பார்க்கும், அ.தி.மு.க.,வினர், என் தொகுதி
மேம்பாட்டு நிதியில் ஒதுக்கும் பணிகளுக்கு, டெண்டர் எடுக்க போட்டி போடுகின்றனர். பணிகள் வரன்முறை செய்யாததால், டெண்டரை ரத்து செய்யும்படி, மனு கொடுத்தேன்,'' என்றார்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அன்பான நோக்கத்துடன் யாவரும்.? மக்களுக்கு நல்லது செய்ய முன் வந்தால் அவர்களுக்கு ஏகப்பட்ட தொந்தரவும் சோகமும் வரக்கூடும்,அதுபோல தமிழகத்தில் நல்ல முறையில் வளர்ந்து வரும் கட்சி தே.மு.தி.க. தலைவர் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு பிரச்சனை வரமால் இருக்குமா.?மக்கள் மத்தில் நீங்கா இடம் பிடிக்க வேண்டும் தே.மு.தி.க. அதுக்காக தே.மு.தி.க. தொண்டர்கள் தலைவர் திரு.விஜயகாந்த் வார்த்தைக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.