dmk will win on 2014- loksabha election | எம்.பி.தேர்தலில்தி.மு.க., வெற்றி :ஸ்டாலின் ஆரூடம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.பி.தேர்தலில்தி.மு.க., வெற்றி :ஸ்டாலின் ஆரூடம்

Updated : நவ 15, 2012 | Added : நவ 14, 2012 | கருத்துகள் (68)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எம்.பி.தேர்தலில்தி.மு.க., வெற்றி :ஸ்டாலின்  ஆரூடம்

திருச்சி: ""மின்வெட்டு, ஜாதிக் கலவரம் உள்ளிட்ட பிரச்னைகளால், வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., வெற்றிப் பெறும்,'' என, முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.செம்மண் குவாரி முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட, தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி, நிபந்தனை ஜாமினில் வெளிவந்து, திருச்சியில் தங்கியிருந்து, நீதிமன்றத்தில் காலை, மாலை ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.திருச்சி, எஸ்.ஆர்.எம்., ஹோட்டலில் தங்கியுள்ள பொன்முடியை, முன்னாள் துணை முதல்வரும், தி.மு.க., பொருளாளருமான ஸ்டாலின், நேற்று காலை சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன், மனைவி துர்காவும் வந்திருந்தார்.மூத்த, தி.மு.க., தலைவர் அன்பில் தர்மலிங்கம் மகனும், ஸ்டாலினின் நெருங்கிய நண்பராக இருந்த, அன்பில் பொய்யாமொழியின் சகோதரருமான ராஜேந்திரன் சமீபத்தில் இறந்தார். திருச்சி, கே.கே.நகர் அன்பழகன் நகரில் உள்ள, ராஜேந்திரன் வீட்டுக்கு ஸ்டாலின் சென்றார்.அவரது படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதன்பின், நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:ஜெயலலிதாவின் ஆட்சியில், ஜாதிக் கலவரங்கள் நடப்பது கதையாகி விட்டது. அரசின் செயல்பாடுகளும் மெத்தனமாக உள்ளது. வரும் லோக்சபா தேர்தலில், மக்கள் சரியான பாடம் புகட்டுவர். தி.மு.க., ஆட்சியில், முன்னறிவிப்பு செய்து, இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டது.அதற்கான பின்விளைவு என்ன என்பது எல்லாருக்கும் தெரியும். இந்நிலையில், தமிழகத்தில் தினமும், 18 மணி நேர மின்வெட்டு செய்யும், அ.தி.மு.க., ஆட்சிக்கு, வரும் லோக்சபா தேர்தலில், மக்கள் தக்க பதிலடி கொடுப்பர். வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., வெற்றிப் பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
22-டிச-201213:15:15 IST Report Abuse
GUNAVENDHAN ஊரிலுள்ள ஜாதி தலைவர்களையெல்லாம் கூப்பிட்டு, தன் கூட்டணியில் சேர்த்துக்கொண்டு தேர்தலை சந்தித்து, வெற்றிபெற்று ஆட்சியை பிடித்து விடலாம் என்று கனவு கண்டு முகத்தில் கறியை பூசி கொண்டவரின் பிள்ளையா இப்படி ஜாதியை பற்றி பேசுவது. ஸ்டாலின், உங்கப்பாவுக்கு ஜாதி தலைவர்களை தூண்டிவிட்டு, குளிர் காய்வது கை வந்த கலை ஆயிற்றே. உங்கப்பாவுடன் ஒட்டி உறவாடிகொண்டுள்ள ஜாதி தலைவர் தான், தென் தமிழகத்தில் நடக்கும் ஜாதி மோதல்களுக்கேல்லாம் காரணம் என்பது உனக்கு தெரியாமல் இருக்காது. பிள்ளையை கிள்ளி விட்டு, பின்பு தொட்டிலையும் ஆட்டுவதில் தான் உன் அப்பனும் நீயும் கில்லாடிகலாயிற்றே? அடுத்த பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் ஜெயிப்பீர்கள் என நம்புவதற்கு நீ சொல்லும் காரணத்தில் ஒன்று ஜாதி கலவரங்கள் என்பது. ஜாதி கலவரத்தை எவ்வளவு தான் தூண்டிவிட்டாலும், அதை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட ஜெயலலிதாவால் முடியும். எனவே அதை வைத்து பிழைப்பை ஓட்டிவிடலாம், அதாவது பாராளுமன்ற தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்று கனவு காண வேண்டாம். அடுத்ததாக நீ நம்பிக்கொண்டு சந்தோசப்பட்டு கொண்டுள்ள காரணம், மின் பற்றாக்குறை. 2001 முதல் 2006 வரை ஜெயலலிதா ஆட்சி செய்தபோது , எப்போதாவது இந்தடை இருந்ததா? அதன்பின் ஆட்சிக்கு வந்த உங்கப்பா கருணாநிதி ஒழுங்கு மரியாதையாக மக்கள் பிரச்சினைகளை தினமும் கவனித்து செயல்பட்டு இருந்தால் இந்த அளவுக்கு மின்தட்டுப்பாடு உண்டாகியிருக்குமா? உங்கப்பா என்ன செய்தார் , ராசா , கனி கைங்கர்யத்தில் கிடைத்ததை வைத்து , ஊழலில் பிறந்த கலைஞ்சர் டிவியை துவக்கி , தினசரி மானாட மயிலாட பார்த்துக்கொண்டும், மானாட மயிலாட நிகழ்ச்சியில் எப்படியெல்லாம் மாற்றம் செய்தால் இன்னமும் வாலிப பசங்களை சொக்கவைக்கலாம் என்று கணக்குபோட்டு கொண்டு இருந்தார். இடையிடையே நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீனுக்கு பொறி போட்டுகொண்டு , கட்சியில் உள்ள அமாம்சாமி அமைச்சர்களை பக்கத்தில் வைத்துகொண்டு , எவன் குடியை கெடுக்கலாம் என்று சதியாலோசனை செய்தே காலத்தை ஓட்டிவிட்டார். ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போது , ஒரு வருட காலத்தில் மின்தட்டுப்பாட்டை போக்கிவிடலாம் என்று முழுமையாக நம்பினார், கருணாநிதி போல உண்மை நிலவரத்தை அவர் முன்பே அறிய வாய்ப்பு இல்லை. முதல்வராக இருந்து மின் தட்டுப்பாட்டு நிலைமையை முழுவதுமாக அறிந்து இருந்த கருணாநிதியே ஒன்றும் செய்யாத நிலையில், என்ன நிலைமையில் மின்கழகம் உள்ளது என்பதே தெரியாத நிலையில் தான் அவர் பதவிக்கு வந்தார். முதல்வர் சீட்டில் உட்கார்ந்தபின் மின்துறை அதிகாரிகளை அழைத்து உண்மையான நிலவரம் தான் என்ன என்று கேட்டபோது தான், மின் துறை திவால் ஆகிற நிலைமைக்கு கருணாநிதியால் தள்ளப்பட்டுவிட்டதை உணர்ந்தார். மக்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான் என்றாலும், வேறுவழியே இல்லாமல் மின்கட்டணத்தை உயர்த்தினால் தான் மின்சார துறை பிழைக்கும் என்பதால், மின்கட்டணத்தை உயர்த்தினார். அதன்பின் தொடர்ச்சியாக அதிகாரிகளை அழைத்து , இயங்காத மின்திட்டங்களை உடனே இயக்கவும், புதிய திட்டங்களை தொடங்கவும் உத்தரவிட்டு , தேவையான கோடிக்கணக்கான ரூபாயையும் ஒதுக்கி வேலையை முடுக்கிவிட்டுள்ளார். உடனே முடியக்கூடிய விஷயமானால் , அதை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றுவதில் ஜெயலலிதாவுக்கு நிகர் வேறு ஒருவரை பார்க்கமுடியாது என்பதும் மக்களுக்கு தெரியும். ஜெயலலிதா தன்னுடைய முதல் பணியாக இதை எடுத்துகொண்டு செயல்பட்டுகொண்டுள்ளார் என்பதை மக்கள் தெரிந்தே உள்ளார்கள். எனவே ஸ்டாலின் நினைப்பது போல மின்தடையை வைத்து பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுவிடலாம் என மனப்பால் குடிக்கவேண்டாம். அதுமட்டுமல்லாது, பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே மின்தட்டுப்பாட்டை பெருமளவுக்கு, முடிந்தால் முழுவதுமாக நீக்கிட முனைந்துள்ளார். எனவே இந்த இரண்டு காரணங்களை வைத்து வெற்றி பெற்று, டெல்லியில் மீண்டும் கொள்ளையை துவக்கலாம் என்கிற கனவெல்லாம் வேண்டாம். இப்போதே உங்கள் கட்சி மந்திரிகளை பார்த்தாலே , ஏகத்தாலமாகத்தான் பார்கின்றார்களாம் டில்லியில் . அடுத்த ஆட்சியிலும் துண்டை போட்டு இடத்தை பிடிக்கலாம் என்கிற நினைப்பு வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
Zavid Hussain - Bangalore,இந்தியா
16-நவ-201202:11:18 IST Report Abuse
Zavid Hussain நாற்பதும் நமதே தலைவா...
Rate this:
Share this comment
Cancel
Giri Srinivasan - chennai ,இந்தியா
16-நவ-201200:28:04 IST Report Abuse
Giri Srinivasan நீங்க சொல்லவே வேண்டாம், மக்களே அதுக்குதானே காத்துகிட்டு இருக்காங்க.
Rate this:
Share this comment
Cancel
S.Govindarajan. - chennai ,இந்தியா
15-நவ-201222:17:52 IST Report Abuse
S.Govindarajan. எம் .பி தேர்தலில் வெற்றி பெற்றால், டெல்லி செல்லலாம் ,பேரம் பேசலாம், வளம் கொழிக்கும் துறைகளைப் பெறலாம். அப்புறம் 2g ,3g ,4g , நிலக்கரி ,சேது என்று மீண்டும் ஆரம்பிக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
manickam kannan - coimbatore,இந்தியா
15-நவ-201222:13:24 IST Report Abuse
manickam kannan இவர் ஆட்சிகாலத்தில் எல்லா அலுவலகங்களுக்கு சென்று கடை நிலை ஊழியர்களுக்கு வேலை உத்தரவை வழங்கி மகிழ்ந்தார். ஒரு அரசு அலுவலகத்தில் மேலாளர் செய்யவேண்டிய வேலையை இவர் ஓடி ஓடி செய்தார். இதுதான் இவர் செய்த சாதனை. இவர் ஆருடம் கூறுகிறார்.
Rate this:
Share this comment
Cancel
15-நவ-201220:26:33 IST Report Abuse
சொல்லுங்கண்ணே சொல்லுங்க இப்போதெல்லாம் பகலிலே கனவு காண ஆரம்பிச்சுட்டீங்களா? ஏன் ஒன்னும் ஆணி புடுங்கற வேலை இல்லையா? உங்க கனவு நனவாகனும்னா ஒரு ஆயிரம் வருஷம் பொறுத்திருங்க. அப்பவாவது நீங்க ஆட்சிக்கு வர பார்கறீங்களா பாப்போம். ஆனா அதை பார்கறதுக்கு நாம உசிரோட இருக்க முடியுமா?
Rate this:
Share this comment
Cancel
chandru - chennai,இந்தியா
15-நவ-201218:48:55 IST Report Abuse
chandru ஒருவேளை, பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தால்,அதுவும் இப்போதிலிருந்தாவது பன்னாட்டு கம்பெனிகளிடம் நாட்டை அடிமையாக்கும் காங்கிரஸின் கொள்கைகளை வெளிப்படையாக, ஆக்ரோஷமாக எதிர்த்தால் ஸ்டாலின் சொல்வது ஓரளவு சாத்தியமாகலாம். ஆனால் காங்கிரஸை எதிர்த்து போராட திமுக முனையாது. அப்படியிருக்க கடைசி நேரத்தில் பாஜக-வுடன் கூட்டணி சேர்ந்தபின் காங்கிரஸை விமர்சனம் செய்தால் மக்கள் திமுக-வை நம்பமாட்டார்கள். அதிமுக அரசு ஓடாத நதியாக ( குட்டையாக ) இருப்பதால் பழைய மன உளைச்சல்களை மக்கள் மன்னிப்பார்கள் என்று நினைப்பது சரியல்ல, திரு.ஸ்டாலின்.
Rate this:
Share this comment
Cancel
Gowthaman Velauytham - chennai,இந்தியா
15-நவ-201218:39:44 IST Report Abuse
Gowthaman Velauytham இழங்கை தமிழ் மக்களின் இன்னல்களை போக்க ஐநா வரை தற்போது சென்று வந்து உல்லிர்கலே 300000 தமிழர் கொடூரமாக கொல்லபட்ட போது சென்னையை விட்டு டெல்லி வரை செல்லவில்லை. அப்போது துணை முதல்வர் ,முதல்வர் , மத்திய மந்திரிகல் (18 mp ) இ௫ந்தும் சாதனை செய்யாத நீங்கள் இப்போது ஜிரொ ( 0 ) அதனால் ஓட்டமா ஓடூகிரிகள் அடத்த mp தேர்தலில் இன்னூம் ஜிரொ ( 0 ) ஆக்கினால் வெள்ளை மாளிகை தான் ஓடுவீர்கள்
Rate this:
Share this comment
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
15-நவ-201218:33:39 IST Report Abuse
m.viswanathan தேர்தலில் வெற்றி பெற , இவர்கள் எதிர் கட்சி மின்சாரம் உயர்வு ,ஜாதி கலவரம் போன்ற அதிமுகவின் மைனஸ் பாயிண்ட் களால் மக்கள் தங்களை தேர்ந்துவிடுவார்கள் என கனவு காணுகிறார். கடந்த 45 ஆண்டுகள் ஆக தமிழகம் கண்ட சாதனை தான் என்ன ? நினைவு வளைவுகள் ,நல்ல சாலைகள் இருந்தால் கட்சி கோடி ஏற்ற குழி தோண்டி உள்ளதையும் கெடுத்தல்,தேவையற்ற பாராட்டு விழாக்கள்,சினிமா விழாக்கள் , ஏதோ தமிழக மக்களின் வாழ்கையை உய்விக்க வந்த மகாத்மாக்கள் போன்ற டம்ப பேச்சு. யாருக்கும் விழிப்பு உணர்வு வந்து விடாமல் இருக்க ஏழைகள் இருக்கும் வரை இலவசம் தொடரும் போன்ற கேன தனமான , பகுத்தறிவற்ற அறிவுப்புக்கள். ருசி கண்ட பூனைகள் இவர்களை புறக்கணியுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Bala - Chennai,இந்தியா
15-நவ-201218:15:57 IST Report Abuse
Bala என்ன தான் நீங்கள் எல்லாம் DMK ஆட்சிய குறை சொன்னாலும், அந்த ஆட்சி AIADMK ஆட்சிய விட better a தான் இருந்துச்சு... கரண்ட் இல்லை, ரோடு சரி இல்லை, மெட்ரோ வாட்டர் சரியாய் வரது இல்லை, EB பில் increased , Land tax increased , பால் விலை increased , இன்னும் சொல்ல நிறைய இருக்கு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை