கருமத்தம்பட்டி:தீபாவளி பண்டிகையை ஒட்டி தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றதால், சோமனூரில் விசைத்தறிகள் மீண்டும் இயங்க தாமதாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சோமனூர் சுற்றுவட்டாரத்தில் லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இதில் பல்லாயிரக்கணக்கான வெளி மாநில, மாவட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
திருச்சி, மதுரை, தேனி, உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் இப்பகுதியில் குடும்பத்துடன் வேலை செய்து வருகின்றனர். சில மாதங்களாகவே மின்வெட்டு, இறங்கு முகத்தில் இருக்கும் துணி விலை காரணமாக ஜவுளித்தொழில் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது.இந்தாண்டு பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவித்த இந்த தொழிலில், தீபாவளிக்கு பிறகு நிலைமை ஓரளவுக்கு சீரடையும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் உள்ளது. இந்நிலையில், மின்வெட்டால் வேலையிழப்பு உள்ளிட்ட காரணங்களால் பல தொழிலாளர்கள் தீபாவளிக்கு முன்பாகவே சொந்த ஊருக்கு சென்று விட்டனர். எஞ்சியிருந்த தொழிலாளர்களும் போனஸ் பெற்றுக்கொண்டு, கடந்த சில நாட்களுக்கு முன், தங்கள் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்று விட்டனர். இதனால், சோமனூர், கருமத்தம்பட்டி சுற்றுவட்டாரத்தில் விசைத்தறிகள் இயங்க இன்னும் ஒரு வாரத்துக்கு மேல் ஆகும் என தெரிகிறது.இது குறித்து விசைத்தறியாளர்கள் கூறுகையில்," தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்ற தொழிலாளர்கள் திரும்பி வர பத்து நாட்களுக்கு மேல் ஆகும். உடனே திரும்பி வந்தாலும், மின் வெட்டு இல்லாமல் இருந்தால் தான் வேலை இருக்கும் என, அவர்களுக்கும் தெரியும். அதனால், மெதுவாகத்தான் வருவார்கள். அதுவரை நாங்களே தறிகளை இயக்க வேண்டி இருக்கும்,' என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.