சென்னை: "நாடார் சமுதாயத்தினரை இழிவுபடுத்தும், சி.பி.எஸ்.சி., பாடப் பகுதியை நீக்க வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது கடித விபரம்: நாடார் சமுதாயத்தினரை இழிவுப்படுத்தும் விதமாக, சி.பி.எஸ்.சி., 9ம் வகுப்பு, சமூக அறிவியல் பாடப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நான் கண்டிக்கிறேன். பாடப் பகுதியில் இடம் பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய பகுதிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். இந்தியாவின் விடுதலை போராட்டத்தில், நாடார் சமுதாயத்தினர் பெரிய அளவில் தியாகம் புரிந்துள்ளனர். அந்த சமுதாயத்தை சேர்ந்த காமராஜர் அரசியல் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் திகழ்ந்தவர். தென் மாவட்டங்களில் உள்ள நாடார் சமுதாயத்தினரை, வந்தேறிகள் என்று தவறான செய்தி இடம் பெற்றுள்ளது. இதில், பிரதமர் தலையிட்டு, ஆட்சேபனைக்குரிய பகுதியை, பாடப் புத்தகத்தில் இருந்து உடனே நீக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவளவு நாள் சும்மா இருந்தார். இந்த விசயத்தில் வைகோ அங்கு சென்று போராட்டம் நடத்தியவுடன் கடிதம் எழுதி விட்டார் கருணா. வைகோ என்றாலே கருணாவுக்கு அவ்வளவு பாசம். இந்த விசயத்தில் மலையாளி வாத்தியார் ஒருவர் எழுதிய செய்தி அது என்று தெரிய வந்துள்ளது. எல்லா விசயத்திலும் தமிழ் நாட்டுக்கு இழிவு அல்லது தொல்லை கொடுக்க அவனுக தயாராக உள்ளார்கள்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.