சிவகங்கை: ""மனிதர்களிடம் ஏற்பட்டுள்ள மனஅழுத்தம் தான் மொபைல்களில் எஸ்.எம்.எஸ்.,களாக பரவுகின்றன,'' என, மனோதத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், தீபாவளி, பொங்கலுக்கு உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து கார்டுகளில் தகவல் அனுப்பி, நட்பை பரிமாறினர். "மொபைல்', ஆதிக்கத்திற்கு பின், "எஸ்.எம். எஸ்', களாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மனஅழுத்தம்: விலைவாசி உயர்வு பிரச்னை, மின்வெட்டு போன்றவற்றை அன்றாடம் அனுபவித்து மனபுழுக்கம் அடைந்துள்ளதால், மத்திய , மாநில அரசுகளை விமர்சித்து, குதர்க்கமாக எஸ்.எம்எஸ்., வாழ்த்துக்களை இளைஞர்கள் அனுப்பி வருகின்றனர். இத்தீபாவளிக்கு, "மொபைல்களில்',"" பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வு போல், வாழ்வில் சந்தோஷம் உயரட்டும்,'' தமிழகத்தில் அடிக்கடி நிகழும் மின்வெட்டால், (மின்வெளிச்சம்) வெளிச்சம் நம்மை விட்டு விலகுவதுபோல், துன்பம் விலகி ஓடட்டும்,'' என அதிகளவில் எஸ்.எம்.எஸ்., அனுப்பியுள்ளனர்.
மனோதத்துவ நிபுணர் ஒருவர் கூறுகையில்,""மனிதர்களின் மனதை, எந்தவொரு விஷயம் ஆழமாக பாதிக்கிறதோ, அவற்றை பற்றிய அதிருப்தி தான், இது போன்று "மொபைல்களில்', எஸ்.எம்.எஸ்., களாக வெளிவருகின்றன. மத்திய, மாநில அரசு மீதுள்ள அதிருப்தி தான் இவை, என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.