சிவகாசி:அரசின் பசுமை வீடுகளுக்கு, ஓராண்டு ஆகியும் சூரிய சக்திவிளக்குகள் பொருத்தாததால், எதிர்பார்பில்
பயனாளிகள்
உள்ளனர்.அரசின் சார்பில், கடந்த ஆண்டு பசுமை வீடுகள் கட்டும் திட்டம்
அமல்படுத்தினர். ஒரு வீட்டிற்கு 1.80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்டட்டது. 1.50 லட்சத்திற்கு சிமென்ட், கம்பி, கதவு, ஜன்னல்
போன்றவைகள், மானிய விலையில் வழங்கப்பட்டது. மீதியுள்ள 30 ஆயிரத்திற்கு,
பசுமை வீட்டில் சூரிய சக்தி மின்சாரம் அமைக்கப்படும் என, பணம் பிடித்தம்
செய்தனர். இத் தொகையில் அரசின் மரபுசார் எரிசக்தி துறை மூலம், சூரியசக்தி
விளக்குகள் அமைத்து தரப்படும் என ,கூறினர். சிவகாசி ஒன்றியத்தில், கடந்த
ஆண்டு அனுமதிக்கப்பட்ட, 200 பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தை நிறைவு செய்து
விட்டனர். ஒவ்வொரு பயனாளியும் ,அரசு வழங்கிய நிதி பற்றாக்குறையை போக்க
,கூடுதலாக ஒரு லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர். ஆனால்
பிடித்தம் செய்யப்பட்ட தொகையில் சூரிய சக்தி விளக்குகள் எப்போது
அமைக்கப்படும் என ,அதிகாரிகளிடம் கேட்டால் ,"அதுபற்றிய விபரம் இன்னும்
வரவில்லை. எந்த ஒன்றியத்திலும் இப் பணி துவங்கவில்லை. விரைவில் பணி
துவங்கும்,' என, பதில் கூறுகின்றனர்.இந்த ஆண்டும் ஒன்றியத்திற்கு கூடுதலாக
பசுமை வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கிராமங்களில் நிலவும் கடும் மின்தடையால்,
மாணவர்கள் படிக்க முடியாத நிலையில் உள்ளனர்.
அரசு திட்டத்தில் வழங்கிய
சூரியசக்தி மின்விளக்கு வசதியை விரைவில் செய்தால், பயனுள்ளதாக இருக்கும்
என, பயனாளிகள் கோரிக்கை வைக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் சூரிய சக்தி
மின்விளக்கும் அமைக்கும் பணியை துவக்க ,நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.