district news | சேவை பெறும் உரிமை சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தகோரி கையெழுத்து இயக்கம் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேவை பெறும் உரிமை சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தகோரி கையெழுத்து இயக்கம் துவக்கம்

Added : நவ 16, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சேலம்: தமிழகத்தில், சேவை பெறும் உரிமைச் சட்டத்தை கொண்டு வரக்கோரி, சேலத்தில் கையெழுத்து இயக்கம் துவங்கியது.
சேலம் மாவட்ட லஞ்ச, ஊழலற்ற கூட்டு நடவடிக்கை குழு சார்பில், தமிழகத்தில், சேவை பெறும் உரிமை சட்டம் கொண்டு வரக்கோரி, சேலம், டி.எம்.எஸ். கண் மருத்துவமனை வளாகத்தில் கையெழுத்து இயக்க துவக்க விழா நடந்தது.
சங்ககிரி மக்கள் மன்ற குழந்தைவேலு தலைமை வகித்தார். இந்திய மக்கள் நல மன்ற செயலாளர் மூர்த்தி வரவேற்றார். ஐந்தாவது தூண் ஒருங்கிணைப்பாளர் ராஜமாணிக்கம் பேசியதாவது:
பிறப்பு, இறப்பு சான்றிதழ், ரேஷன் அட்டை பெறுவது, நிலப்பட்டா, முதியோர் பென்ஷன், பாஸ்போர்ட் போன்ற, 150 சேவைகள், சேவை பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு மத்திய பிரதேசம், பீஹார் மாநிலங்களில் சிறப்பான சேவை மக்களுக்கு கிடைக்கிறது.
இச்சட்டத்தின்படி, குறிப்பிட்ட காலவரையறைக்குள் சேவையை முடித்து தருவது சட்டமாக்கப்பட்டுள்ளது. தகுந்த காரணமின்றி சேவையை மறுத்த அல்லது தாமதித்த அரசு அதிகாரியின் ஊதியத்திலிருந்து, 500 முதல், 5,000 ரூபாய் வரை, அபராதமாக பிடித்தம் செய்து, மனுதாரருக்கு நஷ்டயீடாக வழங்கப்படுகிறது.
இதுபோன்ற சட்டத்தை, தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும். இதை வலியுறுத்தி, பத்து லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று, தமிழக முதல்வரிடம் அளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.தமிழக அரசு சேவை பெறும் உரிமை சட்டத்தை கொண்டு வரக்கோரி, கையெழுத்து இயக்கத்தை ஐந்தாவது தூண் செயலாளர் டாக்டர் சித்தார்த் துவக்கி வைத்தார். சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ் தலைவர் பூபதி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X