Patient thrown in Road | நோயாளியை நடுரோட்டில் தள்ளிய அரசு மருத்துவமனை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நோயாளியை நடுரோட்டில் தள்ளிய அரசு மருத்துவமனை

Updated : நவ 17, 2012 | Added : நவ 17, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரை, தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறி அவரை நடுரோட்டில் தள்ளிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கட்டாவைச் சேர்ந்தவர் தீரர் சிங். இவர் காங்கேயம் அருகே ஒரு குவாரியில் பணிபுரிந்து வந்தார். இவர் சிறுநீரக சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 25 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க இயலாது என்ற கூறிய மருத்துவமனை நிர்வாகம், அவர‌ை ஒரு ஆம்புலன்சில் ஏற்றி, ரத்தினகிரி அருகே நடுரோட்டில் தள்ளி விட்டுச் சென்றுள்ளனர். இந்த மனிதாபிமானமற்ற செயல் இப்பகதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை