ராஜபாளையம்
மண் எப்படியோ அதே போல மக்களின் மனதும் அப்படியே
காவல் காப்பதற்கு ஏற்ற நாய்கள் வாங்கவேண்டுமானால் அனைவரது நினைவிற்கும் வருவது ராஜபாளையமே
மதுரையில் இருந்து குற்றாலம் போகிறவர்களுக்கு சீசனுக்கான தூரலைத் தந்து ரம்மியமாக வரவேற்பது ராஜபாளையமே.
ஆனால் மாறிவிட்ட இயற்கை சூழ்நிலையில் மழையை தற்போது முழுமையாக நம்ப முடியவில்லை.
தண்ணீருக்காக இவர்கள் விடும் கண்ணீரை துடைப்பதற்காக, அணைக்கட்டை ஒட்டியுள்ள பகுதியில் பண்ணை வைத்துள்ளவர்கள், தாங்களே முன்வந்து தங்களது கிணற்று நீரை வழங்க முன்வந்தனர். அவர்களில் முதன்மையானவர்தான் ராமசுப்பிரமணிய ராஜா.
அந்த தோப்பில் மோசமான நிலையில் இருந்த கிணற்றை பெரும் செலவு செய்து சீரமைத்தார், கிணற்றுக்கு எதுக்கு இவ்வளவு சிரமம், சீரமைப்பு என்று பலரும் கேட்டபோது கிடைக்காத பதில் சீரமைத்து முடிந்த பிறகு கிடைத்தது. ஆம் சுற்றுபக்கம் எதிலும் இல்லாத அளவிற்கு தண்ணீர் நன்றாக ஊற்றெடுத்தது.
கொஞ்சமும் யோசிக்காமல் தனது கிணற்று நீரை எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று இலவசமாக வழங்கினார். ஒரு லாரியில் 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் என்ற கணக்கில் ஒரு நாளைக்கு முப்பது லாரி தண்ணீர் வரை எடுத்துச் செல்கிறார்கள். இப்படி ஒரு நாள், இரண்டு நாள் அல்ல அறுபது நாள் வரை எடுத்துச் சென்றார்கள். இதனால் ராஜபாளையத்தில் குடிநீர் பிரச்னை ஒரளவு குறைந்தது.
ஒரு வருடம் மோசமான குடிநீர் பிரச்னை, கொஞ்சம் கூடுதலாகவே தண்ணீர் எடுத்துச் சென்றார்கள், இப்படியே தண்ணீர் எடுத்தால் தோட்டத்தில் உள்ள பயிர்கள் தண்ணீர் இல்லாமல் வாடிவிடும் ஆகவே எடுத்த வரை போதும் என்று சொல்லுங்கள் என்று பண்ணையாட்கள் ராமசுப்பிரமணிய ராஜாவிடம் கூறியபோது, குடிநீர் இல்லாமல் மனித உயிர்களே வாடும் போது பயிர்களா முக்கியம் என்று சொல்லி தடையின்றி தண்ணீர் கொடுத்தவர்.
தண்ணீர் கொடுப்பதோடு நின்றுவிடாமல் தண்ணீரை எடுத்துச் சென்று சுத்திகரிப்பு செய்யும் நிலையத்தின் செயல்பாடுகளையும் பார்வையிட்டு, அங்கு இருக்கும் பணியாளர்களை உற்சாகப்படுத்துவார்.
- எல்.முருகராஜ்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அய்யா நல்ல பணி நன்றிகள் கூற கடமைப்பட்டுள்ளேன், அதே நேரம். மழை வரவர குறைந்துகொண்டே வருகிறது. மலையில் விழுகிற மழை சேர்ந்து கிணற்றுக்கு வந்து சேருகிறது. மழை நிறைய பெய்வதற்கு என்ன வாய்புகள் இருக்குமோ அவற்றை யோசியுங்கள். நீங்கள் ராஜா. நமெக்கெல்லாம் ராஜா மழைதான். மழை நிறைய பெய்வதற்கு மரங்களே ராஜா. மரங்களை வளர்ப்பதற்கு மனிதர்களே ராஜா. மனிதர்களே வாழ்நாளில் ஒரு மரத்தை வளர்த்துவிடுங்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மரம் என்று வளர்க்கவேண்டும். வளர்க்க ஏற்பாடு செய்யுங்கள் வளருங்கள். நிம்மதியாக வாழுங்கள். நன்றியுடன் மனிதன்....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.