Pokkisham | ஈடில்லா இயற்கை உணவு: - எல்.முருகராஜ்| Dinamalar

ஈடில்லா இயற்கை உணவு: - எல்.முருகராஜ்

Added : நவ 17, 2012 | கருத்துகள் (7)
Advertisement

விடிந்தும், விடியாத அந்த அதிகாலை வேளையிலே ஒரு சின்னஞ்சிறிய கடைமுன் கூட்டம் நிரம்பிவழிகிறது. கூட்டத்திற்கு காரணம் அங்கு வழங்கப்படும் இயற்கை உணவுகள்தான்.
சிவகாசி தபால்நிலையம் பக்கத்தில் உள்ள தாய்வழி இயற்கை உணவகத்தில் நிலவேம்பு கஷாயம், ஆடாதொடை ரசம், கத்தாழை சூப், அடுப்பில் வைக்காமல் உருவாக்கப்பட்ட பேரீச்சை அவல், பலவித பயறுவகைகள், நெல்லிக்காய் சாலட், வெந்தயக்களி, சின்ன வெங்காயம் போட்ட கம்மங்கூழ் என்று எப்போதோ, எங்கோயோ கேட்ட பழமையான பராம்பரியமான உணவு வகைகளை வழங்கிக் கொண்டு இருக்கிறார் கடையின் உரிமையாளரும் இயற்கை ஆர்வலருமான சிவகாசி மாறன்ஜி.

நமது பழமையான உணவு என்பதை மறந்ததால்தான் இன்றைக்கு இவ்வளவு நோய் நொடிகள், எப்போதும் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் எந்நாளும் தொல்லை இல்லை என்று சொல்லும் மாறன்ஜி கடையில் வழங்கப்படும் பொருட்களின் விலையோ இரண்டு ரூபாயில் இருந்து ஏழு ரூபாய்க்குள் அடங்கிவிடும். ஒரு வரியில் சொல்வதானால் விலை குறைவு ஆரோக்கியம் அதிகம்.

நிலவேம்பு கஷாயம் குடித்தால் போதும் டெங்கு காய்ச்சல் பக்கத்திலேயே வராது, வந்தாலும் பயந்து ஒடிவிடும், இப்படி இங்குள்ள ஒவ்வொரு உணவு பொருளுக்கும் பின்னணியில் நிறைய ஆரோக்கியமும், மருத்துவ குணங்களும் நிறைந்து உள்ளன.

அடுப்பில் வைக்காமல் நூற்றுக்கணக்கான அறுசுவை உணவுகளை தயார் செய்யமுடியும், அதற்கு பெண்கள் முன்வர வேண்டும், வாரத்தில் ஒரு நாள் அடுப்பு பற்ற வைக்காமல் சமைத்தாலே நாட்டிற்கும் வீட்டிற்கும் எவ்வளவோ பலன்கள் உண்டு என்று சொல்லும் மாறன் இயற்கை உணவை எல்லாரிடமும் கொண்டு சேர்ப்பதற்காக நிறையவே உழைத்து வருகிறார்.
இதை இளைஞர்கள் கையில் சேர்த்துவிட்டால் அது அற்புதமான ஆரோக்கியமான இந்தியாவிற்கு வழிவகுத்துவிடும் என்பதில் உறுதியாக இருக்கும் இவர் இது தொடர்பாக பள்ளி, கல்லூரியில் பொருட்காட்சி நடத்துவது, கருத்தரங்குகள் நடத்துவது என்று எப்போதும் பிசியாக இருக்கிறார். இயற்கை உணவு பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்காக அவரது போன் எண்:9367421787.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rameeparithi - Bangalore,இந்தியா
24-நவ-201214:59:03 IST Report Abuse
Rameeparithi மாறன்ஜி அவருக்கும் தினமலருக்கும் ஒரு நல்ல செய்தியை வெளியிட்டதருக்கு நன்றி தயவு செய்து இதை மக்களிடம் கொண்டு செர்பதர்க்கான முயற்சி செய்யவும். துரித உணவுகளை சாப்பிட்டு வீணா ஆரோக்கியத்தை கெடுப்பதை விட இந்த மாதிரி இயற்க்கை உணவை சாப்பிட முயற்சி செய்யலாம்
Rate this:
Share this comment
Cancel
nagamani - pondicherry,இந்தியா
24-நவ-201208:27:41 IST Report Abuse
nagamani ப்ளீஸ் இந்தமாதிரி உணவையெல்லாம் புத்தகவடிவில் போடலாமே?
Rate this:
Share this comment
Cancel
Ragu - Johannesburg,இந்தியா
22-நவ-201221:43:37 IST Report Abuse
Ragu மிகவும் பயனுள்ள செய்தி! மேலும் திரு. மாறன் அவர்கள் ஒவ்வொரு நகரிலும் கிளைகள் ஆரம்பிக்கலாம்! சிறந்த முறையில் இயங்கும் என்பதில் ஐயமில்லை! வேலை தேடும் இளைஞ்சர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு!! ஆரோகியதிற்கும் சிறந்த வழி! நன்றியுடன் இரகு
Rate this:
Share this comment
Cancel
பூபதிராஜா ப - சேலம்,இந்தியா
22-நவ-201218:28:59 IST Report Abuse
பூபதிராஜா ப சார் இதல்லாம் கொஞ்சம் வெளியே கொண்டுவாங்கோ !! அப்புறம் பாருங்க அதன் !!!!!!
Rate this:
Share this comment
Cancel
syedaynullah - salmiya,குவைத்
18-நவ-201216:45:04 IST Report Abuse
syedaynullah முருகராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி அவர் ஒரு புத்தகம் போட்டால் நன்றாக இருக்கும் சை . சையத் அய்நுல்லாஹ் குவைத்
Rate this:
Share this comment
Cancel
Vadivel Gvl - johur ,மலேஷியா
18-நவ-201207:54:47 IST Report Abuse
Vadivel Gvl இன்றைய தலை முறைக்கு இயற்க்கை வைத்திய முறை கிடைப்பது மிக அரிதாக உள்ளது, இதை மக்களுக்கு மறுபடியும் தெரிவிக்கிற மாறன்ஜி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் ..... நன்றி க.வடிவேல்.
Rate this:
Share this comment
Cancel
Boovarahan S - Chennai,இந்தியா
18-நவ-201206:49:04 IST Report Abuse
Boovarahan S இயற்கை உணவு தயாரிக்கும் முறைகளை தினமலர் வாரா வாரம் வெளியிடலாமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை