பாலியல் குற்றங்கள் சட்டத்தை அமல்படுத்துங்க: அமைச்சர் கிருஷ்ணா திராத்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:""குழந்தைகளுக்கு எதிரான, பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக, புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள, சட்ட விதிகளை, மாநில அரசுகள் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்,'' என, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர், கிருஷ்ணா திராத் கேட்டுக் கொண்டு உள்ளார்.

பாலியல் குற்றம்:பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு தொடர்பான, பார்லிமென்ட் ஆலோசனை குழுவின் கூட்டம், மத்திய அமைச்சர்(தனிப்பொறுப்பு) கிருஷ்ணா திராத் தலைமையில் நடந்தது. அப்போது அவர் கூறியதாவது:இந்திய தண்டனை சட்டம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கையாள, போதுமான தாக இல்லை. அதனால்,குழந்தைகளுக்கு எதிரான, பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன.

இதைத் தடுப்பதற்காக, "குழந்தைகளுக்கு எதிரான பாலியல்குற்றங்கள் தடுப்பு சட்டம்-2012' உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த சட்ட விதிகள், குழந்தைகள் தினமான, இம்மாதம், 14ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த புதிய சட்ட விதிகளை மாநில அரசுகள், உடனடியாக, கண்டிப்பாக அமல்படுத்தவேண்டும்.

புதிய சட்ட விதிகளை அமல்படுத்தும் போது, அனைத்துமட்டத்திலும் போலீஸ் அதிகாரிகளுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும். அத்துடன், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு சிறப்பு கோர்ட்டுகளையும், மாநில அரசுகள் அமைக்க வேண்டும்.அந்த கோர்ட்டுகளுக்கான, அரசு சிறப்பு வழக்கறிஞர், குழந்தைகள் நல கமிட்டி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவுகளையும் ஏற்படுத்த வேண்டும்.மேலும், பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, இழப்பீடு வழங்குவது தொடர்பான திட்டங்களையும், மாநில அரசுகள் உருவாக்க வேண்டும்.

புதிய சட்டம்:புதிய சட்டத்தை, முறையாக அமல்படுத்துவதன் மூலமே, அது நல்ல பலன் தரும். அதற்காக,சட்டத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதும் அவசியம். எனவே, சட்டத்தை அமல்படுத்துவதில், மாநில அரசுகள் முக்கிய பங்காற்ற வேண்டும்.சட்டம் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் பணியில், சமூக நல அமைப்புகளையும், அரசு சார்பற்றஅமைப்புகளையும் ஈடுபடுத்த வேண்டும்.இது தொடர்பாக, உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் நான் கடிதம் எழுதியுள்ளேன்.இவ்வாறு, அமைச்சர் திராத் கூறினார்.

பயிற்சி:அதேநேரத்தில், ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள், "புதிய சட்ட விதிகள், பிடிக்காதவர்களை பழி வாங்குவதற்காக, தவறாகப் பயன்படுத்தப்படக்கூடாது. அதனால், சட்டத்தை அமல்படுத்தும் பணியில் ஈடுபடுவோருக்கு, முறையான பயிற்சி அளிக்க வேண்டும்' என, வலியுறுத்தினர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Logeshk Logu - Savigny-le-Temple,பிரான்ஸ்
18-நவ-201212:54:36 IST Report Abuse
Logeshk Logu குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றகள் பெருக சினிமா ஒரு வித்தல காரணமா இருக்கு. முதலில் சினிமாவில் உள்ள பாலில் வன்முறை காட்சிகலை தடுக்க சட்டம் கொண்டுவாருகள்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18-நவ-201211:53:52 IST Report Abuse
Nallavan Nallavan ஒரு சட்டம் தவறாகப் பயன்படுத்தப் படுகிறது என்ற காரணத்தால் அச்சட்டத்தையே ஒழித்துவிடுவது என்பது மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே தீக்கிரையாக்குவது போன்றதாகும் தவறாகப் பயன்படுத்த முடியாதபடி வழிமுறைகளை உருவாக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
swamynathan - tirunelveli,இந்தியா
18-நவ-201208:17:40 IST Report Abuse
swamynathan நீங்களும்தான் சட்டங்கள் பல கொண்டு வருகிறீர்கள். அதனை அமல் படுத்த போவது என்னவோ அரசு அதிகாரிகள்தான். இவர்கள் லட்சணம் எல்லாருக்கும் தெரிந்ததே. முன்பு பள்ளியில் ஒழுக்கத்திட்க்கு முக்கியம் இருந்தது. ஆகவே ஓரளவு நல்ல குடிமகன்கள் உருவானார்கள். இப்போது மார்க்கிட்குதான் முக்கியம். எப்படியாவது பாஸ் பண்ணியாகணும். அதனால்தான் படித்த பட்டதாரிகள் பொறியாளர்கள், மருத்துவர்கள் கூட குற்றங்கள் புரிகிறார்கள். முன்பெல்லாம், படிதிருக்கிரியே இப்படி பண்ணுகிறாயே என்று கேட்பார்கள். இப்போது குற்றங்கள் புரிபவன் என்றாலே படித்தவன்தான். படிக்காதவன் பண்ணும் குற்றங்கள் ஜுஜுபிதான்.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18-நவ-201211:20:29 IST Report Abuse
Nallavan Nallavanநண்பரே, சிறுமிகளுக்கெதிரான பாலியல் குற்றங்களைச் செய்வது பெரும்பாலும் படிக்காதவர்கள்தான் செய்தியை முழுவதும் படித்துவிட்டுக் கருத்து தெரிவிக்கலாமே?...
Rate this:
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
18-நவ-201202:33:21 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் என்ன தான் புதிய சட்டத்தை உருவாக்கினாலும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே மிக முக்கியமான ஓன்று ... பெண்கள் , குழந்தைகளிடம் தவறாக நடப்பவரை கடுமையாக தண்டித்தல் மிக முக்கியம் ... அதில் மாற்று கருத்து இல்லை .. \\ கொலை செய்தல் குற்றம் , கொலை செய்ய தூண்டுவதும் குற்றம் என்பதுபோல் பாலியல் தொந்தரவுகள் செய்வதும் குற்றம் , அதை செய்ய தூண்டுவதும் குற்றம் என்று அறிவிக்க வேண்டும் .. // இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் முதலில் நாகரிகமான நல்ல உடை மிக மிக மிக அவசியம் , அன்புடன் அறிவான பேச்சு , தெளிவான குணமுள்ள பாசம் போன்றவற்றை குழந்தைகளும் , பெண்களும் கட்டாயம் கடை பிடிக்க வேண்டும் ... பெண்கள் என்றால் பஞ்சு போன்ற மனமும் , எல்லை மீறுவோரிடம் நெருப்பு போன்ற குணமும் கட்டாயம் காட்ட வேண்டும் ... இவற்றை எல்லாம் தங்களுக்கு பாதுகாப்பு வேலியாக வைத்து கொள்ள வேண்டும் .. இப்படி இருக்குமானால் பெருமளவு பாலியல் வன்முறைகள் தானாகவே குறைந்து விடும் ..
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18-நவ-201211:05:48 IST Report Abuse
Nallavan Nallavan\\\\ பெண்கள் என்றால் பஞ்சு போன்ற மனமும் , எல்லை மீறுவோரிடம் நெருப்பு போன்ற குணமும் கட்டாயம் காட்ட வேண்டும் ... //// நீங்கள் சொல்வது சரிதான் அது விபரம் தெரிந்த சிறுமிகளுக்குப் பொருந்தும் நான்கு, ஐந்து வயதுள்ள சிறுமிகளைக் கூட, இல்லை....இல்லை....பால் மணம் மாறாத குழந்தைகளைக் கூட "கற்பழித்து" விடுகிறார்களே, அதற்கு என்ன சொல்கிறீர்கள்???? ...
Rate this:
Share this comment
Cancel
Jai - ,கனடா
18-நவ-201200:48:52 IST Report Abuse
Jai சட்டங்கள் உருவாக்க வேண்டும், அது கடுமையாகவும் இருக்க வேண்டும். பாலியல் குற்றங்களுக்கு, ஜனாதிபதியால் கூட மன்னிப்பு அளிக்க முடியாத மரண தண்டனை கண்டிப்பாக வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு என்கவுன்ட்டர் தான் சிறந்த தீர்ப்பாகும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்