ராகுலுக்கு எதிராக சாமி புகார் விசாரிக்க ஆணையம் உத்தரவு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:"கடந்த லோக்சபா தேர்தலின் போது, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், தன் சொத்து விபரங்கள் பற்றி, தவறான தகவல்களைத் தந்துள்ளார்' என, ஜனதா கட்சித் தலைவர், சுப்பிரமணிய சாமி கூறிய புகார் குறித்து விசாரணை நடத்தும்படி, அமேதி தொகுதி தேர்தல் அதிகாரிக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கடந்த, 2009ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், உத்திர பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில், காங்கிரஸ் பொதுச் செயலர், ராகுல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், இம்மாத முற்பகுதியில், தேர்தல் ஆணையத்திடம், ஜனதா கட்சித் தலைவர், சுப்பிரமணிய சாமி புகார் ஒன்றை அளித்தார்.

அந்தப் புகாரில், "2009 லோக்சபா தேர்தலின் போது, ராகுல் சமர்ப்பித்துள்ள சொத்து விபரங்களில், தவறான தகவல்கள் இடம் பெற்றள்ளன. "நேஷனல் ஹெரால்டு' என்ற ஆங்கில பத்திரிகையை வெளியிட்ட, "அசோசியேட்டட் ஜார்னல்' நிறுவனத்தில், தனக்கு உள்ள பங்குகள் பற்றிய விபரங்களை, ராகுல் தெரிவிக்கவில்லை' என, கூறியிருந்தார்.

இந்நிலையில், உ.பி., மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு, தலைமை தேர்தல் ஆணையம், இம்மாதம், 15ம் தேதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:
லோக்சபா தேர்தலில் போட்டியிட, ராகுல் சொத்து விபரங்களை சமர்ப்பித்த போது, அதில், தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக, சாமி புகார் கூறியுள்ளார். அமேதி தொகுதி தேர்தல் அதிகாரியாக பணியாற்றியவரிடம் தான், ராகுல் தன் சொத்து விபரங்களை அளித்துள்ளார்.

எனவே, அந்த தேர்தல் அதிகாரியே விசாரணை நடத்த வேண்டும். சாமியின் புகார்களை, நீங்கள் அந்த அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். அவர் விசாரணை நடத்தி, என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது என்பதை, தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ambaiyaar@raja - Nellai to chennai ,இந்தியா
18-நவ-201212:57:07 IST Report Abuse
Ambaiyaar@raja இந்த சு . சாமிக்கு வேறு வேலை கிடையாது இதற்க்கு பதில் அவர் ஊர் ஊராக சென்று உழல காங் கட்சி பற்றி பிரச்சாரம் செய்தால் கூட நல்ல பலன் கிடைக்கும். அதை விட்டு விட்டு இதை போல் செய்வதால் அவருக்கு அவ பெயர் தான் மிஞ்சும் வேறு ஒரு நடவடிக்கையும் வராது.
Rate this:
Share this comment
Cancel
S.Govindarajan. - chennai ,இந்தியா
18-நவ-201211:40:54 IST Report Abuse
S.Govindarajan. உத்தமர்களின் ஊழல்களை சாமி வெளிசத்திற்க்குக் கொண்டு வருகிறார். தண்டனை கிடைக்கிறதோ இல்லையோ , மக்களுக்கு உண்மை தெரிந்துவிடும் அல்லவா?
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
18-நவ-201210:45:30 IST Report Abuse
g.s,rajan நமது நாட்டில் விசாரணை நடத்தி தீர்ப்பு வந்தால் தண்டனை அளித்தால் அது கொள்ளு பேரனுக்கோ அல்லது அதுக்கு அடுத்த தலை முறைக்கோ தான் கொடுக்க முடியும் போல இருக்கு.வெளி நாடுகளில் விரைவு கோர்ட்டுகள் அதாவது நீதி மன்றங்கள் இருக்கிறது,தடனையும் விசாரணையும் குறிப்பிட்ட காலக்கெடு விற்குள் முடிந்துவிடும் .இங்கு அப்படியா ?ஆனால் மத்திய அரசு ஏதாவது ஒரு காரணத்தை கூறி விரைவு நீதிமன்றங்களையே கலைத்து விட்டது . எதற்கு எடுத்தாலும் வெளிநாட்டோடு ஒப்பிடுபவர்கள் அங்கு நடத்தப்படும் நீதிமன்றங்களின் அணுகுமுறையை நம் நாட்டோடு ஒப்பிடுவார்களா ?நிச்சயம் மாட்டார்கள் . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
Tamil Arasan - Udumalpet,இந்தியா
18-நவ-201209:43:01 IST Report Abuse
Tamil Arasan சூப்பர் ஆனா விசாரணை எப்போ நடக்கும் அடுத்த தேர்தலுக்கு பினடிதன
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
18-நவ-201208:26:02 IST Report Abuse
villupuram jeevithan யாரையும் விடமாட்டார் போல இருக்கு? ஆனா ரிசல்ட் தான் ஜீரோ?
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18-நவ-201212:49:47 IST Report Abuse
Nallavan Nallavanஅரசியல் சட்டத்திலேயே பாராளுமன்ற அமைப்பிற்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அதில் உச்ச நீதிமன்றமும் கூட சில வரையறைகளுக்கு உட்பட்டுதான் குறுக்கிட / தலையிட முடியும் பல வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்ட பொது மத்திய அரசு "அது அரசின் கொள்கை முடிவு" என்று சமாளித்ததைக் கண்டிருப்பீர்கள் உதாரணம் மத்தியக் கிடங்கிலிருந்து தானியங்கள் வீணாவது குறித்த உச்ச நீதிமன்றத்தின் கண்டனம் மற்றும் அது குறித்து மத்திய அரசின் பதில் ராகுல் மீது தேர்தல் ஆணையமோ, அல்லது நீதி மன்றமோ விசாரணையை நடத்தவில்லை என்றால் தவறு சுவாமியிடமோ, அரசியல் சட்டத்திடமோ இல்லை அரசியல் சட்டமே நமது அரசியல்வாதிகளின் இயல்புக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டதுதான் அம்பேத்கருக்கு நன்றி ...
Rate this:
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
18-நவ-201201:38:40 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் விசாரித்து தீர்ப்பு வருவதற்குள் அடுத்த தேர்தலே முடிந்து விடும் ... அவ்வளவு வலிமையான , விரைவில் செயல்பட கூடிய அரசியலமைப்பு சட்டமும் , தேர்தல் ஆணையமும் , நீதிமன்றமும் நாம் கொண்டுள்ளோம் ...
Rate this:
Share this comment
Hari Doss - Pollachi,இந்தியா
18-நவ-201222:59:21 IST Report Abuse
Hari Dossஅப்படித் தானே பசியின் வழக்கும் இழுத்தடிக்கிறது. பசி வென்றது தவறு என்று தீர்பானால் அது வரை பசி பெற்ற சலுகைகளை (சம்பளம், படிகள் தொலை தொடர்பு வசதிகள் என எல்லாவற்றிற்கும்) பணமாக அரசுக்குத் திருப்பி tharuvaaraa?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்