பார்லிமென்டில் பதுங்கி பாய தி.மு.க., முடிவு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீடு தொடர்பாக, மத்திய அரசுக்கு எதிராக, பார்லிமென்டில் ஓட்டெடுப்பு விவாதம் கொண்டு வரப்பட்டால், அதில் பங்@கற்காமல், புறக்கணிக்க தி.மு.க., முடிவு செய்துள்ளது.மத்திய அரசின் ஆயுள் காலம் முடியும் வரை, தி.மு.க., அங்கம் வகிக்கவும், கடைசி நேரத்தில் புது அணியை உருவாக்கிய பின், காங்கிரஸ் கட்சியை கூட்டணியிலிருந்து கழட்டி விடவும், தி.மு.க.,திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இம்மாதம், 22ம் தேதி, பார்லிமென்ட் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது. ஒரு மாத காலம் நடக்கும் கூட்டத் தொடரில், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு அனுமதி குறித்த புயல் வீசும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பார்லிமென்டில் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நோட்டீஸ் வழங்கியுள்ளது.

இந்த நோட்டீசை ஏற்றுக் கொண்டு, ஓட்டெடுப்பு நடத்தப்படுமா அல்லது ஓட்டெடுப்பு நடத்தாமல், அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்த விவகாரத்தில், தி.மு.க., என்ன முடிவு எடுக்கப் போகிறது என, தேசிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இடதுசாரி கட்சிகள் கொண்டு வரும் தீர்மானம், பார்லிமென்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டால், ஓட்டெடுப்பில் பங்@கற்காமல், தி.மு.க., புறக்கணிக்கும் முடிவை எடுக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:"2 ஜி' வழக்கு தொடர்பான விசாரணையை முன் வைத்து, தி.மு.க.,வை மிரட்டியே, சட்டசபை தேர்தலில், 63 தொகுதிகளை காங்கிரஸ் பெற்றது. அதில், ஐந்து இடங்கள் மட்டுமே வெற்றி பெற்றது.

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., தனித்து போட்டியிட்டது. காங்கிரசும் தனித்து போட்டியிட்டு, 5 சதவீதம் ஓட்டுகளே பெற்றது. எனவே, தமிழகத்தில் செல்வாக்கை இழந்த காங்கிரஸ் கட்சிக்கு, இனி முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என, தி.மு.க., கருதுகிறது.

சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதில்லை என்பது தான் தி.மு.க.,வின் நிலைப்பாடு. அதனால் தான் அகில இந்திய அளவில் நடந்த, "பந்த்' போராட்டத்திற்கு தி.மு.க., ஆதரவு வழங்கியது. தற்போது பார்லிமென்டில் ஓட்டெடுப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டால், தி.மு.க.,-எம்.பி.,க்கள் அதில் பங்@கற்காமல் புறக்கணிப்பர்.வர்த்தகர்கள் பாதிக்காமல் இருப்பதற்கு, மசோதாவில் சில திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என, தி.மு.க., குரல் கொடுக்கும் வாய்ப்புள்ளது. எந்த கட்டத்திலும், மத்திய அரசுக்கு எதிரான நிலையை எடுக்க தி.மு.க., விரும்பவில்லை.

இமாச்சல பிரதேசம், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவையும் தி.மு.க., எதிர்பார்க்கிறது. மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் விவகாரத்தில், மாநில அரசால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க, அழகிரி, மத்திய அமைச்சராக நீடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.எனவே, மத்திய அரசில், கடைசி வரை இருந்து விட்டு, தேர்தல் அறிவிப்புக்கு முன், புது அணியை உருவாக்கி விட்டு, காங்கிரஸ் கூட்டணியிலிருந்து கழன்று விட தி.மு.க., திட்டமிட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (54)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manoharan - chennai,இந்தியா
23-நவ-201210:02:44 IST Report Abuse
manoharan கலைஞருக்கு காங்கிரஸ்சை விட்டால் வேறே கதி இல்லை. சோனியா திஹாறை காட்டியே பணிய வைப்பார்.
Rate this:
Share this comment
Cancel
kanna1 - chennai,இந்தியா
18-நவ-201223:44:18 IST Report Abuse
kanna1 கதை, திரைக்கதை - தினமலர்
Rate this:
Share this comment
Cancel
adithyan - chennai,இந்தியா
18-நவ-201223:20:51 IST Report Abuse
adithyan வாலை காலுக்கிடையில் சுருட்டிக்கொண்டு பாய்வதற்கு பதிலாக பாயை சுருட்டிக்கொண்டு ஓடும். புலிக்கு பயந்த பசங்களெல்லாம் என் மேலே வந்து விழுங்கடா. அடுத்தாற்போல கேஜரிவல் தீ மூ கா வின் ஊழலை திறந்து விட்டால், ஹசாரேயிடம் உறவு வைப்பார்கள். நாடா முக்கியம்? நம் "மக்களின்"நல்வாழ்வு தான் முக்கியம். தமிழர்களுக்கு இதுகூட தெரியவில்லையே, தலை விதி.
Rate this:
Share this comment
Cancel
Cheenu Meenu - cheenai,இந்தியா
18-நவ-201223:01:42 IST Report Abuse
Cheenu Meenu காங்கிரஸ் பதவியில் உள்ளளவும் தி மு க சாய்ந்து கொடுக்கும். எப்படி பி.ஜே பி அரசில், முரசொலி மாறன் படுத்த படுக்கையாக இருந்த போது மருத்துவ செலவுகளை அரசு செலவில் இலாக்கா இல்லாத மந்திரியாய் இருந்து இறக்கும் வரை அனுபவித்தார்களோ அதைப்போலவே தொடர்வார்கள். ஒட்டு எடுப்பு வந்தால் பல வருடங்களுக்கு முன் S S R செய்தது போல் டாயிலெட் சென்று விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
18-நவ-201220:26:07 IST Report Abuse
GUNAVENDHAN கருணாநிதிக்கு காங்கிரஸ் மீது பாய மிகவும் ஆசை தான். தன் அருமை மகளை, ஏழெட்டு மாதம் திகார் ஜெயிலில் வைத்துவிட்டார்களே, நாம் எவ்வளவு மன்றாடி கேட்டும் சாக்கு போக்கு சொல்லி, கண்டுக்காமலேயே விட்டுவிட்டார்களே என்று உள்ளம் கொதிக்கிறது. உள்ளம் கொதிக்கிறதே என்று ஆத்திரத்தில் எதாவது செய்ய போய் , கலைஞர் டி.வியில் பெரும் பங்கு வைத்துள்ள தன் மனைவி தயாளு அம்மாளையும் உள்ளே தள்ளிவிட்டால் என்ன செய்வது என்கிற பயமும் கருணாநிதிக்கு நிச்சயம் உள்ளது. ஆகவே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளவரை , அவர்களுக்கு ஜால்ரா அடித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் கருணாநிதி உள்ளார். காங்கிரஸ் ஆட்சி என்று கவிழும் நிலைமை ஏற்படுகின்றதோ அன்று இவரும் அவர்கள் மீது கல் எறிந்துவிட்டு வெளியே வந்துவிடுவார்.
Rate this:
Share this comment
Cancel
Ajay ganesh - kumbakonam ,இந்தியா
18-நவ-201220:01:36 IST Report Abuse
Ajay ganesh பதுங்குவாங்க ஆனா பாய மாட்டாங்க... பாய நினைச்சா எத எடுத்தா மஞ்ச துண்டு ஆப் ஆகும்னு அவிங்களுக்கு தெரியாத?
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
18-நவ-201219:58:56 IST Report Abuse
Pugazh V தி மு க புலி ஒரு பக்கம் இருக்கட்டும். ௮ தி மு க வின் நிலைப்பாடு என்ன என்று இன்னும் ௮ தி மு கவினருக்கே தெரியவில்லையே. அது பற்றி இங்கே எந்தப் புலியும் வாயே திறக்கவில்லையே. ௮ தி மு க எம் பிக்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை மாநிலத்தில் ஆளும் கட்சி என்ற வகையில் இதற்குள் தெரிவித்திருக்க வேண்டாமா? தி மு க வை சாடும் நண்பர்களாவது முதல்வரிடம் அல்லது ௮ தி மு க பாராளுமன்ற தலைவர் தம்பிதுரையிடம் கேட்டு சொல்வார்களா?
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - salem,இந்தியா
18-நவ-201219:08:22 IST Report Abuse
K.Sugavanam கேக்க நல்லா இருக்கு..ஆனா....
Rate this:
Share this comment
Cancel
ungalil oruvan - Chennai,இந்தியா
18-நவ-201217:40:22 IST Report Abuse
ungalil oruvan பதுங்கும், ஆனா பாயாது.
Rate this:
Share this comment
Cancel
வைகை செல்வன் - சென்னை,இந்தியா
18-நவ-201217:34:42 IST Report Abuse
வைகை செல்வன் குழம்புக்கு கரைக்கக்கூட லாயக்கில்லாத புளி ஆகிப்போச்சே.. இதுல எங்க பாயுறது..??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்