DISTRICT NEWS | வெள்ளாட்டு குட்டிஈன்ற செம்மறி ஆடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளாட்டு குட்டிஈன்ற செம்மறி ஆடு

Added : நவ 18, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேட்டூர்: கொளத்தூர் அருகே செம்மறியாடு ஒன்று, வெள்ளாடு மற்றும் செம்மறியாட்டு குட்டிகளை ஈன்றுள்ளது. இதனை, அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, கொளத்தூர் அடுத்த கருங்கரடு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பழனிச்சாமி. இவர், செம்மாறியாடு, வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். ஒருவாரத்துக்கு முன்பு, இவரது பட்டியில் உள்ள ஒரு செம்மறியாடு, ஒரு வெள்ளாட்டு குட்டி, ஒரு செம்மறியாட்டு குட்டி என, இரு குட்டிகளை ஈன்றது.செம்மறியாடு, வெள்ளாட்டுக் குட்டி ஈன்ற தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், ஆர்வத்துடன் குட்டியை பார்த்துச் சென்றனர்.
இதுகுறித்து, கால்நடை டாக்டர் ஒருவர் கூறியதாவது:பொதுவாக, செம்மாறியாடுகள், 95 சதவீதம் ஒரு குட்டி மட்டுமே போடும். அரிதாக ஐந்து சதவீத செம்மறியாடுகள் மட்டுமே இரு குட்டிகள் போடும். ஆனால், விவசாயி பழனிச்சாமி வளர்த்த செம்மறியாடு, இரு குட்டிகள் போட்டுள்ளது. அதிலும் ஒன்று வெள்ளாட்டு குட்டி என்பது ஆச்சரியமான விஷயம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை