அன்னூர்:கஞ்சப்பள்ளியில், 100 ஆண்டு பழமையான செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 23ம் தேதி நடக்கிறது.
பராமரிப்பு இல்லாமலும், சிதிலமாகவும் இருந்த இக்கோவிலில், சிற்ப சாஸ்திர முறைப்படி, திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷே விழா 22ம் தேதி காலை 9.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. மாலையில், யாகசாலை பூஜை, எண் வகை மருந்து சாத்துதல் நடக்கிறது. 23ம் தேதி
அதிகாலையில், இரண்டாம் கால வேள்வி, மண்டல அர்ச்சனை நடக்கிறது. காலை 9.00 மணிக்கு யாகசாலையிலிருந்து புனித கலசங்கள் புறப்பட்டு, கோவிலை வலம் வருகின்றன. மகா கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது.காமாட்சிபுரி ஆதீனம் சாக்தலிங்கேஸ்வர சாமிகள் அருளுரை வழங்குகிறார். யாகசாலை பூஜைகளை, பூண்டி முத்து சுப்பிரமணிய சிவாச்சாரியார் செய்கிறார். ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.