will win inparli on vote | மம்தா ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளை.முறியடிப்போம்: 305 எம்.பி., ஆதரவு என காங்., கொக்கரிப்பு | Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (18)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

கோல்கட்டா: ""நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம், மத்திய அரசை கவிழ்க்க நினைக்கும், மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜியின் முயற்சிகளை, காங்கிரஸ் முறியடிக்கும். மன்மோகன் சிங் அரசுக்கு, 305 எம்.பி.,க்களின் ஆதரவு உள்ளது,'' என, காங்., செய்தித் தொடர்பாளர், ஷகீல் அகமது கூறியுள்ளார்.பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர், வரும், 22ம் தேதி துவங்குகிறது. "இந்தக் கூட்டத்தொடரின் முதல் நாளில், மத்தியில் ஆளும், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும்' என, திரிணமுல் காங்கிரஸ் தலைவர், மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் அறிவித்தார்.

ஆதரவு கேட்டார்
இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற, ஐ.மு.கூட்டணி கட்சிகளும், இடதுசாரி கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அத்துடன், பா.ஜ., தலைவர்களிடமும் ஆதரவு கேட்கப்படும் என்றார்.
இந்நிலையில், கோல்கட்டாவில் நேற்று நிருபர்களிடம் பேசிய, பா.ஜ., மூத்த தலைவர், முரளி மனோகர் ஜோஷி கூறியதாவது:
பா.ஜ., மூத்த தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான, சுஷ்மா சுவராஜை, மேற்கு வங்க முதல்வர்,

மம்தா பானர்ஜி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, பார்லிமென்டில், திரிணமுல் காங்., கொண்டு வர உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு, ஆதரவு தர வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளார்.சுஷ்மா சுவராஜ், தற்போது பால் தாக்கரேயின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, மும்பை சென்றுள்ளார். அவர் டில்லி திரும்பியதும், நாங்கள் எல்லாரும் கூடிப் பேசி, மம்தாவின் கோரிக்கை குறித்து முடிவு செய்வோம். இன்றோ அல்லது நாளையோ, பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி, இது தொடர்பாக முடிவெடுக்கும்.ஆபத்து இருக்காதுமம்தா கட்சியினர்கொண்டு வரும், நம்பிக்கை இல்லா தீர்மானம், பார்லிமென்டில் தோல்வி அடைந்து விட்டால், அடுத்த ஆறு மாதத்திற்கு, அரசுக்கு எந்த ஆபத்தும் இருக்காது. மற்றொரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை, ஆறு மாதத்திற்குள் கொண்டு வர முடியாது.அதே நேரத்தில், நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றால், அரசு பதவி விலக நேரிடும். அந்த நேரத்தில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி நாம் ஆலோசிக்க வேண்டும்.நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டுமெனில், எம்.பி.,க்கள், 50 பேர் ஆதரவு அளிக்க வேண்டும். அந்த அளவுக்கு, திரிணமுல் காங்.,கிற்கு எம்.பி.,க்கள் இல்லை. அதனால், இதர கட்சிகளை சார்ந்திருக்க வேண்டியது அவசியம்.

Advertisement

இவ்வாறு முரளி மனோகர் ஜோஷி கூறினார்.


தோற்கடிப்போம்
இதற்கிடையில், ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில், காங்கிரஸ் தகவல் தொடர்பாளர், ஷகீல் அகமது நேற்று கூறியதாவது:மத்திய அரசுக்கு எதிராக, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதன் மூலம், மம்தா கட்சி, பா.ஜ., பக்கம் சாய்கிறது தெளிவாகிறது. அத்துடன், மார்க்சிஸ்ட் கட்சியையும்வளைக்கப் பார்க்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு, 305 எம்.பி.,க்களின் ஆதரவு உள்ளதால், நம்பிக்கை இல்லா தீர்மானம் தோற்கடிக்கப்படும்.திரிணமுல் காங்கிரஸ் கொண்டு வரும், தீர்மானத்தை தோற்கடிக்க, 272 எம்.பி.,க்கள் ஆதரவு போதுமானது; ஆனால், எங்களுக்கு, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்களையும் சேர்த்து, 305 எம்.பி.,க்களின் ஆதரவு உள்ளது.அதனால், மம்தாவின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளை முறியடிப்போம். மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு, ஐந்தாண்டு கால பதவி காலத்தை, முழுமையாக முடிக்கும்.இவ்வாறு ஷகீல் அகமது கூறினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (18)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
19-நவ-201207:48:52 IST Report Abuse
s.maria alphonse pandian அந்நிய முதலீட்டுக்கு எதிராகவே திமுக வாக்களிக்கும்...ஆனால் அரசு கவிழாது....ஆமாம்...அண்ணா திமுக என கூட ஒரு கட்சி உண்டே?அதை யாருமே சீந்தாதன் காரணம் என்ன?
Rate this:
Share this comment
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
19-நவ-201207:09:32 IST Report Abuse
K.Balasubramanian 305 M.P கள் எப்படியும் ஒட்டு அளிப்பார்கள் என்ற ஆணவம் எத்தனை நாட்கள் வரை வரும் ? பணம் பத்தும் செய்யும் என்றாலும் அடுத்து வரும் தேர்தலை யார் வெல்லுவார்?
Rate this:
Share this comment
Cancel
Vaishnavi.Ne - Chennai,இந்தியா
19-நவ-201206:56:06 IST Report Abuse
Vaishnavi.Ne என்ன ஒரு ஆணவமான பதில். ஏற்கனவே 305 எம் பி க்களை விலைக்கு வாங்கி விட்டோம். அதனால் ஆட்சியை கவிழ்க்க முடியாது. இன்னும் மீதமிருக்கும் ஒண்ணரை ஆண்டுகளில் சுருட்ட வேண்டியதை சுருட்டி விட்டு, 2014 இல் தான் தேர்தல் வருமென்கிறார் மிகுந்த நம்பிக்கையுடன்.
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
19-நவ-201206:27:45 IST Report Abuse
Thangairaja கூட்டணி கட்சிகளோ எதிர்க்கட்சிகளோ யாருமே பதவிக்காலம் முடியும் முன்பு தேர்தல் வருவதை விரும்பவில்லை. அப்பறம் முறியடிப்பதில் என்ன சிக்கல். எல்லாம் அரசியல் நாடகம். அப்பாவியை பலிகடாவாக்குவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
S.Govindarajan. - chennai ,இந்தியா
19-நவ-201206:24:44 IST Report Abuse
S.Govindarajan. அமைச்சரின் பதில் அரசின் ஆணவத்தைக்காட்டுகிறது. கேடு வரும் பின்னே. மதிகெட்டு வருமுன்னே. மக்களுக்கும , சிறு வியாபாரிகளுக்கும் எதிராக உள்ள மத்திய அரசு கவிழ வேண்டும். இதுவரை இருந்த மத்திய அரசில் மோசமான செயல்பாடு கொண்ட அரசு இதுதான்.
Rate this:
Share this comment
Cancel
T.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
19-நவ-201206:12:34 IST Report Abuse
T.R.Radhakrishnan காங்கிரஸ் அரசு கவிழும் வாய்ப்பே இல்லை. ஏதோ ஒரு கட்சி அவர்களுக்கு "கை" கொடுக்கும். அடுத்த தேர்தலில் மக்கள்தான் அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இதுதான் ஒவ்வொரு இந்தியனின் கடமையாக இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
saseendran - chennai,இந்தியா
19-நவ-201206:01:56 IST Report Abuse
saseendran மம்தா வெற்றிபெற வாழ்த்துக்கள். இந்த துணிச்சல் மு கவுக்கு இல்லாமல் போனதோடு மட்டுமல்லாமல் , இன்னும் தான் தமிழ் மக்களின் ஒரே தலைவன் என்பது வெட்கக்கேடு.
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
19-நவ-201205:22:06 IST Report Abuse
Pannadai Pandian இவர்களை தற்போது தூக்கி ஏறிய கூடாது அது தமிழகத்து தீயசக்தி வளருவதற்கு காரணமாகி விடும். அதைவிட மோசம் என்னவென்றால் எந்த காரணத்துக்காக காங்கிரசை தூக்கி ஏறிய வேண்டும் என்று சொல்லுகிறீர்களோ அந்த காரணங்கள் அனைத்தும் திமுகாவுக்கும் பொருந்தும். காங்கிரஸ் தண்டிக்கப்படும் போது, திமுகவை சும்மா விட்டுவிட கூடாது.. முக்கியமாக தமிழர் நலம் என்று பாசாங்கு செய்யும் கொலைகாரர்கள் தண்டிக்கப்பட வேண்டும். 2014 இல் தமிழகத்து மின்வெட்டு சரியாகி விடும் அதுவரை பொருத்திருங்கள். தீய சக்திகள் எல்லாம் ஒரே பெருக்களில் குப்பை தொட்டிக்குள் செல்லும்.
Rate this:
Share this comment
Cancel
Ayathuray Rajasingam - Scarborough ,கனடா
19-நவ-201205:06:55 IST Report Abuse
Ayathuray Rajasingam மம்தா பானர்ஜி குடியரசுத் தலைவர் தேர்தலில் சங்மாவை வெளிப்படையாகவே ஆதரித்திருந்தால் இப்படி ஒரு தர்ம சங்கடம் வந்திருக்காது. காங்கிரஸ் ஆட்சியினர் எப்பொழுதும் தந்திரமாகவே செயற்படுகின்றனர். ஆசைவார்த்தைகளுக்கு மயங்காமல் ஜெயலலிதாவைப் போன்று உறுதியாக இருந்தால் மம்தா பானர்ஜியை அசைக்க முடியாது.
Rate this:
Share this comment
Cancel
Meena Sridar - toronto,கனடா
19-நவ-201205:03:32 IST Report Abuse
Meena Sridar மம்தா பானர்ஜி தி மு கா வை நாடலாமே எளிதாக ஐம்பது கிடைக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.