புதுடில்லி,:வங்கிகளின் வராக்கடன் அளவு, 1.47 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.வங்கிகளில் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் இருப்பது வராக்கடன் (என்.பி.ஏ.,) எனப்படுகிறது. கடந்த நிதியாண்டை விட, நடப்பு நிதியாண்டில் (2012 - 13), வராக்கடன் பல மடங்கு அதிகரித்து விட்டதாக, 35 வங்கிகள் அறிக்கை தாக்கல் செய்துள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கி, அலகாபாத் வங்கி மற்றும் லட்சுமி விலாஸ் வங்கிகளின் வராக்கடன் அளவு, இதுவரை இல்லாத வகையில், 60 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளன. மிகவும் அதிகபட்சமாக, சவுத் இந்தியன் வங்கியின் வராக்கடன், 86 சதவீதமாக உள்ளது.
பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகளின் வராக்கடன், 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. வராக்கடனால் பாதிக்கப்பட்டுள்ள, 35 வங்கிகளின் மொத்த வராக்கடன், முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 28 சதவீதம் அதிகம்.நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும், 32 ஆயிரம் கோடி ரூபாய் வராக்கடன் ஆகியுள்ளதால், முந்தைய ஆண்டுகளின் வராக்கடனுடன் சேர்க்கும்போது, மொத்தம், 1.47 லட்சம் கோடி ரூபாய் வராக்கடன் உள்ளது.இப்போது தெரிவிக்கப்பட்டுள்ள வராக்கடன், உள்நாட்டு வங்கிகளுக்கானது மட்டும் தான். இதில், வெளிநாட்டு வங்கிகள் மற்றும் பட்டியலிடப்படாத உள்நாட்டு வங்கிகளின் வராக்கடன் அளவு சேர்க்கப்படவில்லை.
நடப்பு நிதியாண்டின் முதல், ஆறு மாதங்களுக்கான வராக்கடன் அளவு, கடந்த நிதியாண்டின் முழுமைக்குமான அளவை விட, அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
குறையும் வராக்கடன்
உயர்ந்து வரும் வராக்கடனால் வங்கிகள் பல தடுமாறிக் கொண்டிருக்கையில், "நடப்பு நிதியாண்டில் எங்களின் வராக்கடன் அளவு குறைந்து வருகிறது' என, மார்தட்டிக் கொள்ளும் வங்கிகளும் உள்ளன. பாங்க் ஆப் மகாராஷ்டிரா, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், சிண்டிகேட் வங்கி மற்றும் டெவலப்மென்ட் கிரெடிட் பாங்க் ஆகிய வங்கிகளின், வராக்கடன் அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது.இந்த வங்கிகளின் மொத்த வராக்கடன், 1.7 சதவீதம் (ரூ.138 கோடி) வீழ்ச்சி அடைந்து, 8,163 கோடி ரூபாயாக உள்ளது.தனியார் வங்கிகளான, ஐ.சி.ஐ.சி.ஐ., மற்றும் ஹெச்.டி.எப்.சி., வங்கிகளின் வராக்கடன் அளவு, 6 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவை (எஸ்.பி.ஐ.,) பொறுத்த மட்டில், மொத்த வராக்கடனில், மூன்றில் ஒரு பங்கு, அதாவது, 49 ஆயிரம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி
தனிநபர் வாங்கிய கடன் போல, தனியார் நிறுவனங்கள் வாங்கிய கடன், திருப்பிச் செலுத்தப்படாத நிலை நிலவுகிறது. அத்தகைய நிறுவனங்களின் கடன்களை மறு கட்டமைப்பு செய்வதற்காக, நடப்பு ஆண்டில், 101 வழக்குகள், நிறுவன கடன் மறு கட்டமைப்பு அமைப்பிற்கு வந்துள்ளன.வங்கிகளின் வராக்கடன் அளவு அதிகரித்து வருவதால் கவலை தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, கடன் வழங்கும்போது கவனமாக வழங்க வேண்டும் எனவும், வழங்கப்படும் கடன் முறையாக செலவிடப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க, வணிக வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், வராக்கடன் என, ஒதுக்கி வைத்து விடாமல், அந்தக் கடனையும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சமீபத்தில் கோவில்களில் பெயர் பலகை வைத்ததை போன்று புதிதாக ஏதாவது செய்யலாம்
தைரியமாக அவர்களது உடமைகளை பரி்த்துகொள்ளலாம்... இதற்கு நீதி மன்றங்கள் உதவலாம்....
சாதாரண மனிதன், கடன் வாங்கி அத திருப்பி தர முடியலைனா என்ன பண்ணுறீங்களோ, அத விட ரெண்டு மடங்கு அதிகமா செய்யலாம்... இல்ல தருவாங்க, அவங்க மானம் போகக்கூடாது, அது இதுன்னு பாத்தா... அமெரிக்காவின் வங்கி நிலைமை தான் உங்களுக்கும் புரிஞ்சிக்கோங்க.... மேலும் மக்களை பணம் சேமிக்க வைக்கிறதுக்கு நல்ல வழி சொல்லிக்கொடுங்க. கடன் வாங்க வழி விடாதீங்க....
அது சரி உங்களுக்கே புரிஞ்சாலும் செய்ய யோசிப்பீங்க, நாங்க சொன்ன கேக்கவா போறீங்க.....
இந்த வாராக் கடன் விவரங்களை இன்னும் பிரித்துப் பார்த்தால், கிட்டத்தட்ட 80 சதம் பெரிய பண முதலைகள், மற்றும் அரசியல் நபர்களுக்கே இந்த கடன் வழங்கப் பட்டிருக்கும். இவற்றை திரும்பப் பெற ஒரே வழிதான். அந்த அந்த வங்கியின் போர்டு மெம்பர்கள், உயர் அதிகாரிகளே பொறுப்பு என்று சட்டம் கொண்டு வர வேண்டும். இவர்கள் துணை இன்றி இந்த கடன்கள் வழங்கப் பட்டிருக்காது.
எப்படியா வரும், பணம் எல்லாம் அரசியல்வாதிகள் கிட்ட அல்லவா கொடுத்தீங்க.. பின்ன எப்படி வரும்..ஏழைகள் கிட்ட கொடுத்து இருந்தா திருப்பி கட்டுவான்.. கொடுத்தது எல்லாம் காங்கிரஸ் தலைவர்கள், அம்பானிகள், திமுக, அதிமுக பிரமுகர்கள், திரும்ப வரும்னு நினைக்கிறீங்க???கலைஞ்சர் டிவிக்கு அந்த இருநூறு கோடி வந்த பாதையையே இன்னும் எங்களால கண்டு பிடிக்க முடியல....ச்பெக்ட்ரமும் இல்லன்னு ஆகி போச்சு....இதுல பேங்குல கடன் வாநிகிட்டு போனவங்க பாதியையா சாதாரண வங்கி அதிகாரிகளாம் கண்டு பிடிக்க முடியும்.....சிபியியே முடியலையாம்....
அப்போ இது கடன் இல்லை நன்கொடை.தனியார் வங்கில யாருமே கடன் வாங்க வந்திருக்க மாட்டாங்க. தனியார் வங்கி வராகடன் குறைவா இருக்கறதால இனி பொது வங்கி ஊழியர்கள் தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு கொடுக்க மாட்டாங்கதானே?கஷ்டபடுபவர்கள் தொழில் தொடங்கி உழைத்து விதியால் நட்டமடைந்து நலிந்தால் தண்டனை குறைக்கலாம். அனால் பண முதலைகளும், அரசியல் வாதிகளும் நடிப்பால் நட்டம் என ஏமாற்றுவது கடும் தண்டனைக்குரியது. திருப்பி பதவில அதிகாரத்துல உக்கார வெச்சு அழகு பார்க்கிற தண்டனை இல்லை நான் சொல்வது.
நான் ஆறு வருடங்களாய் ஜாதி பெயர் கொண்ட ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறேன். . மதுரை, கோயம்பத்தூர் , கரூர் போன்ற கிளைகளில் வேலை செய்து வந்தேன். வங்கிகளில் வராத கடன் யார் வாங்கி இருப்பார்கள் என்று பார்த்ததில் 90 % கடன் வாங்கி கொண்டு ஏமாத்துவது டைரக்டர் களின் சொந்த காரர்கள் தான். மேலும் அவர்களை பற்றி மேலிடத்தில் புகார் கூட அளிக்க முடியாது. மேலும் அரசு , வேலை இல்லாத மக்களுக்காக ஜவஹர் ரோஜ்டர் யோஜன என்ற கடன் தர தனியார் வங்கிகளுக்கு சொல்லி உள்ளது. அதற்காக அரசு மானியம் கூட வழங்கு கின்றது. ஆனால் தனியார் வங்கிகள் அந்த கடனை சரியாக அளிப்பதில்லை. எல்லா தனியார் வங்கிகளிலும் மேனேஜர் ருக்கு யார் அதிக கமிஷன் தருகிறார்களோ அவர்களுக்கே அந்த கடன் வழங்கு கிறார்கள். அந்த பணம் பெரும்பாலும் எமாதுபவர்கள் கைகளுக்கே செல்கிறது. வங்கிகளில் வராத கடன் களுக்கு மேனேஜர் , சீப் மேனேஜர் , ஹெட் ஆபீஸ் மேனேஜர் கள் எல்லாம் உடந்தை. தெரிந்தே எந்த ஏமாற்று வேலை நடக்கிறது. .

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.