புதுடில்லி: ""மானிய விலை சமையல் காஸ் சிலிண்டர் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து, பெட்ரோலிய அமைச்சகம் தான் முடிவு செய்ய வேண்டும்,'' என, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
"குடும்பம் ஒன்றுக்கு, ஆண்டுக்கு ஆறு சமையல் காஸ் சிலிண்டர்கள் மட்டுமே, மானிய விலையில் வழங்கப்படும்' என, சமீபத்தில், மத்திய அரசு கட்டுப்பாடு கொண்டு வந்தது. இந்த எண்ணிக்கையை, 12 ஆக உயர்த்த வேண்டும் என, பல தரப்பிலும் வலியுறுத்தப்படுகிறது.
பரிசீலனை
சமீபத்தில், அரியானா மாநிலம், சூரஜ்குண்டில் நடந்த, காங்கிரஸ் தலைவர் கூட்டத்திலும், மானிய விலை காஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையை உயர்த்தும்படி, கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, இதுகுறித்து, பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என, கூறியிருந்தார்.
இந்நிலையில், டில்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த, மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் கூறியதாவது:
மானிய விலையில் வழங்கப்படும், காஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என, பெட்ரோலிய அமைச்சகம் கோரிக்கை வைத்தது. அதன்படி, குடும்பம் ஒன்றுக்கு, ஆண்டுக்கு ஆறு காஸ் சிலிண்டர் என, நிர்ணயிக்கப்பட்டு, அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்த எண்ணிக்கையை, உயர்த்துவது பற்றி, பெட்ரோலிய அமைச்சகம் தான் முடிவு செய்ய வேண்டும். முடிவு செய்வதற்கு முன், அரசின் நிதி நிலை குறித்தும் ஆலோசனை செய்ய வேண்டும். அரசின் நிதி நிலை சிக்கலில் உள்ளதை, கவனத்தில் கொள்ள வேண்டும்.
பணவீக்கம்
வருமான வரி சீர்திருத்தம் தொடர்பாக, என் அமைச்சரவை அதிகாரத்திற்கு உட்பட்ட வரையிலான, முடிவுகளை எடுத்துள்ளேன். அடுத்து, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரவை முடிவு செய்ய வேண்டும்.
பெரிய திட்டங்களை, துரிதமாகச் செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதங்களை தவிர்க்க, தேசிய முதலீட்டு வாரியம் அமைக்கப்படும், இதற்கான குறிப்பு, அமைச்சக செயலரால் தயாரிக்கப்பட்டு பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படும். பிரதமர் முடிவு செய்ததும், அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.நிதி அமைச்சகமும், மத்திய ரிசர்வ் வங்கியும் ஒன்றுக்கு ஒன்று எதிரானது அல்ல. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், நிதி அமைச்சகம் கவனம் செலுத்துகிறது.
அதே போல், நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது ஆகியவற்றில் தேவையான நடவடிக்கைகளை, ரிசர்வ் வங்கி எடுக்கிறது.புதிய வங்கிகள் துவங்குவதற்கான உரிமம் வழங்கும் விஷயத்தில், வங்கிகள் சட்ட திருத்த மசோதா பார்லிமென்டில் நிறைவேறினால் மட்டுமே முடியும். புதிய வங்கிகள் துவங்குவதற்கான நிபந்தனைகள் ஏற்கனவே உள்ளன. இதற்கான அதிகாரம் ரிசர்வ் வங்கி சட்டத்தில் உள்ளது.பொதுத் துறை நிறுவனங்களின் செயல்பாடு குறித்து, ஜனவரி மாதம் தான் ஆய்வு செய்யப்படும்.பொதுத் துறை நிறுவனங்கள் தங்களிடம் உள்ள உபரி நிதியை முதலீடு செய்ய வேண்டும்; முதலீடு செய்யாத பட்சத்தில், அரசின் முதலீட்டுக்கு சிறப்பு, "டிவிடென்ட்' தர வேண்டும் என, அறிவுறுத்தி உள்ளோம்.
ஸ்பெக்ட்ரம்
தற்போதைய நிலையில், 25 பொதுத் துறை நிறுவனங்களில் உபரி நிதியாக, 2.5 லட்சம் கோடி ரூபாய் உள்ளது.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு ஏற்பட்டதாக தணிக்கை துறை அறிக்கை கற்பனையானது போல, நிலக்கரி ஒதுக்கீட்டில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் அறிக்கையும், கற்பனையானதாக மாறக்கூடும்.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஒரு சிலிண்டர் 25 நாட்களுக்கு மட்டுமே வரும். பெரிய குடும்பங்களுக்கு இன்னும் சிரமம். சீமான்களுக்கு
ஏழைகளின் கஷ்டங்கள் தெரியாது. வீணான செலவுகளையும். தினம் ஒரு பார்ட்டி கொடுப்பதையும்,
அமைச்சர்கள் அடிக்கடி வெளிநாடு செல்வதையும் தவிர்த்தாலே செலவுகள் குறையும். இவர் நிதி
அமைச்சராக இருப்பதில் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
ஏழை எளிய , நடுத்தர மக்களின் கஷ்டத்தை புரிந்து கொள்ளாதவர் எல்லாம் ஒரு அமைச்சர் ??? ஒருவன் மிக அதிகமாக அடிபட்டுள்ளான் (ஏழை எளிய , நடுத்தர மக்கள் )... இன்னொருவனுக்கு (பணக்காரன்) மிக சிறிய காயமே ...இப்போது மருத்துவர் யாரை முதலில் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் ??? பெட்ரோலிய துறை அமைச்சர் நிதி துறையினை கை காட்டுவதும் , நிதி துறை அமைச்சர் பெட்ரோலிய துறையை கை காட்டுவதும் என்ன நடக்கிறது நாட்டில் ??? 120 கோடி மக்கள் என்ன கேனையர்களா ??? || டேய் செந்தமிழ் கார்த்தி நீ இனிமேல் காங்கிரேசுக்கு உன் வாழ்கையில எப்போதாவது ஒட்டு போடுவ ?? நோ நோ.... எந்த சூழ்நிலையிலும் அந்த மாபெரும் தவறை செய்ய மாட்டேன் ப்பா.... ||

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.