மண வாழ்க்கையில் இணைந்த கணவன் மனைவியை சட்டப்படி பிரிப்பதும், மீண்டும் சேர்த்து வைப்பதும் குடும்ப கோர்ட்களில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளாக உள்ளன. ஆயிரக்காலத்து பயிர்களை, ஆர்வக் கோளாறு காரணமாக ஆறு மாதத்தில் அறுத்து எரியத் தயாராகி விட்டனர் இளம் வயது ஜோடிகள்.
தாலியுடன் இளம் பெண்களும், ஏக்கப் பார்வையில் ஆண்களும் அதிகமாக காத்துக்கிடக்கும் இடமாக குடும்ப கோர்ட் வளாகம் மாறி விட்டது. காலை முதல் மாலை வரை தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடிகளை இங்கு பார்க்கலாம். தொடர்ந்து "வாய்தா'வில் ஓடும் வழக்குகளின் விசாரணை எப்போது முடியும், விவாகரத்து எப்போது கிடைக்கும், புது வாழ்க்கையை எப்போது துவக்கலாம் என திக்குத் தெரியாமல் ஆண்டுக்கணக்கில் இவர்கள் காத்திருக்கின்றனர்.விவாகரத்து வழக்குகள் நிலுவையில் இருக்கும் போதே, ஊராருக்கும், கோர்ட்டுக்கும் தெரியாமல், தாலி கட்டி சிலர் குடித்தனம் துவங்கி விட்டனர். இன்னும் சிலர், தாலி கட்டாமல் தனியாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு சிலர் முடிவு தெரியாமல் 10 ஆண்டுகளாகக் கூட கோர்ட்டுக்கு நடையாய் நடக்கின்றனர்.கோர்ட்களில் வழக்குகள் தேங்குவதற்கு, ஒரே ஆண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகளும், ஜீனாம்சம் கேட்பு வழக்குகளும் பதிவு செய்வதே இதற்கு காரணமாக உள்ளன.
வழக்குகள் அதிகமாவதால், வாய்தாவுக்கே கோர்ட்டில் நேரம் சரியாக உள்ளது. இதனால் வழக்குகளின் விசாரணை தேதிகள், ஆண்டுக்கு ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தளவுக்கு வழக்குகள் வரிசையாக வந்து கொண்டே இருக்கின்றன. கோவை குடும்ப நீதிமன்றத்தைப் பொறுத்த அளவில், ஒவ்வொரு ஆண்டும் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி விட்டன.கடந்த நான்கு ஆண்டுகளாக இது தொடர்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 1300க்கும் அதிகமான விவாகரத்து வழக்குகளும், 200க்கும் மேற்பட்ட ஜீவனாம்சம் கேட்பு வழக்குகளும் பதிவாகின.நடப்பு ஆண்டில், கடந்த 10 மாதங்களில் 1,225க்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகளும், 200க்கும் மேற்பட்ட ஜீவனாம்சம் கேட்பு வழக்குகளும் பதிவாகியுள்ளன.இப்படி ஒவ்வொரு ஆண்டும் விவாகரத்து வழக்குகள் அதிகரித்திருப்பது சமூகத்தில் ஒரு இக்கட்டான சூழலை உருவாக்கி உள்ளது.குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற மன உளைச்சலில்,குடும்ப பெரியவர்கள் சங்கடத்தில் ஆழ்ந்துள்ளனர்.விவாகரத்து மற்றும் சேர்ந்து வாழக் கோரும் வழக்குகள் குடும்ப கோர்ட் மட்டுமல்லாது, கோவை சட்ட மையத்திலும் நடக்கிறது. இங்கு ஒரு நாளைக்கு 5 முதல் 7 வழக்குகள் இருதரப்பு சம்மதத்துடன் விசாரிக்கப்படுகின்றன. இவ்வழக்குகள் அனைத்தும் குடும்ப கோர்ட்டில் இருந்து பெறப்பட்டவையாகும்.தொடர்ந்து அதிகரித்து வரும் வழக்குகளால், விரைந்து வழக்குகளை விசாரிக்கமுடியாமல் கோவை குடும்ப நீதிமன்றம் திணறுகிறது. இதனால் வழக்குகள் முடிய தாமதமாகின்றன. இதை தவிர்க்க, கூடுதலாக ஒரு கோர்ட் துவக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. சமீபத்தில் ஐகோர்ட் இதற்கான அனுமதி வழங்கியும், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், கோர்ட் கட்டடம் கட்ட இடம் இல்லாததால் நின்று போனது. ஏற்கனவே 2001க்கு முன், கோர்ட்கள் செயல்பட்ட குதிரை வண்டி கோர்ட் வளாகம் தற்போது உபயோகத்தில் இல்லாமல் இருக்கிறது.இந்த வளாகத்தில் நீதிபதிகளுக்கான குடியிருப்பு கட்ட பல ஆண்டுகளாக திட்டம் இருந்த போதிலும், ஒரு பகுதியில் புதிய நீதிமன்றங்கள் அமைக்கலாம் என்ற முடிவும் ஏற்பட்டுள்ளதால், குதிரை வண்டி கோர்ட் வளாகத்தில் புதிய நீதிமன்றம் அமைக்க வேண்டும் என,கோவை வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் சென்னை ஐகோர்ட்டுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இன்று சமுதாயத்தை ஆட்டிபடைக்கும் முக்கிய பிரச்னை இது. விவாகரத்து கோரும் மொத்த எண்ணிக்கையில் பாதிக்கு மேல் காதல் திருமணங்கள்.பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணங்களும் தோல்வி அடைய காரணம் என்ன ? 1 .தம்பதியர் தங்களுக்குள் விட்டுகொடுத்து போகாமல் யார் பெரியவர் என்று போர் தொடுப்பது.
2 .படித்த பெண்கள் அதிலும் குறிப்பாக I .T துறையில் இருக்கும் பெண்கள் கணவனை அவனது வீட்டில் இருந்து தனித்து கொண்டுபோவதுடன் தங்களது குடும்ப ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர விரும்புவது. 3 . குறிப்பிட்ட இனங்களில் வரதட்சணை சட்டத்தினை தவறாக பயன்படுத்தி கணவனையும் அவனது குடும்பத்தையும் அவமானபடுத்துவது. இது போன்ற விஷயங்களில் காவல் துறையாவது நன்கு விசாரித்து அடிப்படை உண்மையாவது இருக்கிறதா ? என்று ஆராயாமல் எடுத்தவுடன் ஆண்களை சிறையில் வைப்பது 4 .பெண்ணை குறைந்தது இரண்டு வருடம் தாயாக வேண்டாம் என்று ஆலோசனை சொல்லும் பெண் வீட்டார்கள் உள்ளனர் என்பது தான் கொடுமை. நமது பண்பாட்டை மறந்து ,கண்டதும் காதல் கொண்டதே கோலம் என்பதும் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பதும் தான் நடந்து கொண்டிருக்கின்றன. திருமணத்திற்கு முன் இரு வீட்டாரும் நன்கு பேசி ஒரு குடும்பத்தை மற்றவர்கள் அறிந்து கொள்ளவேண்டும். அதைப்போல பெண் மற்றும் மாப்பிள்ளை குறித்து நன்கு விசாரித்து பிடிக்கும் பட்சத்தில் திருமணம் செய்ய வேண்டும். முடிந்தால் திருமண ஒப்பந்தத்தை ஒளிவு மறைவு இன்றி உறவினர் நண்பர்கள் முன்னிலையில் வாசித்து அறிவிக்கவே செய்யலாம். பின்பு அதை யார் மீறினாலும் பொதுவில் வைத்து பேச வாய்ப்பு இருக்கும். இறுதியாக திருமணத்தில் சீர் வரிசை செய்முறையை விட அன்பும் ஒழுக்கமும் அடிப்படையாக அமைந்தால் அந்த திருமணம் தோற்காது
பெருசா கருத்த சொல்ல வந்துட்டாங்க. இதுல எத்தன பேர் குடும்ப கோர்டுக்கு போனேங்க?. மனைவி வாழவும் வராம,விவகாரத்துக்கும் ஒத்துவராம, கோர்ட்டுக்கும் வராம,என்ன மாதிரி மண்டகாஞ்சு, குடும்ப நீதிமன்றத்துல அலஞ்சு பாருங்க, அப்பா தெரியும் இந்து திருமண சட்டம் எவ்வளவு கேவலமா இருக்குனு.10 வருஷம் கழிச்சி எனக்கு விவாகரத்து கிடைச்சா, 46 வயசுல நா என்ன பண்ண முடியும்?
சுயநலப்போக்கும் விட்டுக்கொடுத்து போகாத குணமும் கொண்டதே கோலம் என்ற மனப்பான்மையும் குடும்ப குத்து விளக்குகளிடம் அதிகரித்து விட்டது. கல்வி அறிவை கொடுக்கும் என்பது உண்மை, அதைவிட உண்மை ஈகோவை வளர்க்கும். தானென்ற அகங்காரத்தை கொடுக்கும். பெண் கல்வி விழிப்புணர்வை தந்து சகிப்புத்தன்மையை கொன்று வருகிறது. நீதிமன்றங்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றில்லாமல் சமரசத்துக்கான வாய்ப்பாக வழக்குகளை தள்ளிப் போடுவது சரி தான். அப்பாவி தரப்பு பாமாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நீதித்துறைக்கு தெரியாதது ஒன்றும் இல்லை,, புரியவில்லை என்றால், தெரியவில்லை என்றால் கற்று கொள்ளுங்கள். மட்டற்ற நாடுகளை பாருங்கள். அவர்கள் மனைவிக்கு ஒன்றும் பெரியதாக கொடுபதில்லை, குழந்தைக்கு படிப்பு மற்றும் உணவுக்கு தந்தை பொறுப்பு இல்லை இருவரும் பொறுப்பு, ஆகும் செலவை இருவரும் ஏற்பர். மேலும் வழக்கை நீதிபதி மட்டுமே முடிப்பர் 6 முதல் 12 மாதத்துக்குள் முடிக்கவேண்டும். இது சட்டம் இந்திய அரசு இதுபோல் முடிந்தால் செய்யலாம். Election முன்னிட்டு நாடகமாடும் காங்கிரஸ் போட்ட தவறான சட்டம் இந்திய நாட்டின் மேல் இந்திய ஆடவர்களுக்கு வெறுப்பு வளரும். அரசு அதிக உள்நாட்டு பகைவர்களை கொண்டுஇருக்க வேண்டி வரல்லாம். உடனே கவனிகுமா அரசு.
இத்தனை விவாகரத்து வழக்குகளுக்கு காரணங்களை சமுதாயத்தின் உள்ளே தான் தேடவேண்டும். எங்கோ சமுகத்தில் இதற்கான விடை இருக்கும். இங்கு கனடாவிலும் ஐம்பது டாலர் கொடுத்தாலே விவாகரத்து வாங்கி விடலாம், அந்த சட்டத்தை கடுமையாக்க பல பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு கலாசார சீர்கேடுகள் என்று எதையும் சொல்ல முடியாது. ஒருவனுக்கு "ஒரு நேரத்தில்" ஒருத்தி என்ற கோட்பாடு உண்டு. இதை கடைபிடித்தாலே பாதி பிரச்சனைகள் இருக்காது. விவாகரத்து ஆனால் உடனே மறுமணமும் நடக்கிறது. எல்லா குடும்பத்திற்கும் ஒரு பாரம்பரியம், பழக்கவழக்கம், சடங்குகள் சம்ப்ரதாயங்கள், அன்றாட நடைமுறைகள் என்று இருக்கும். இதிலிருந்து தான் ஒழுக்கமும் வரும். இதை நிலை நிறுத்த எப்பொழுதும், பெரியவர்கள், உறவினர்கள் வேண்டும். இன்றாக காலத்தின் கட்டாயமாக, தனி குடுத்தினங்கள் அதிகம். குடும்பங்களில் ஒரு குழந்தை அதிகம் இருப்பதால், பல உறவுகள், மாமன், அத்தை, பெரியப்பா, சித்தப்பா என்று பந்தங்களை இணைக்கும் பாலமான உறவுகளும் இல்லாதிருப்பதால், நல்ல அறிவுரைகளை சொல்ல யாரும் இல்லாமல் போவதும் அதிக விவாகரத்துகளுக்கு ஒரு காரணமாகிறது. குடும்பதில் சண்டை எப்பொழுதும் வரலாம், சமதானம் செய்துகொள்ளும் மனம் வேண்டும், அதே நேரத்தில் நேர்மையற்ற சமாதனம் நன்மையையும் பயக்காது. இந்த சில காரணங்களினாலேயே, ஒன்று சேர மாட்டார்களா என்ற நம்பிக்கையில், நீதிமன்றகளில் தீர்ப்புகள் தள்ளி போடப்படுகிறது என்றே தோன்றுகிறது. (எப்புடி இனிக்கி NO அரசியல் கருத்து)
தேவையான செய்தி... விவாகரத்து எண்ணிக்கை நாட்டில் அதிகமாக காரணம் என்ன ?? ஆணின் அடக்கு முறையா ?? பெண்ணின் வரம்பில்லாத சுதந்திரமா ?? பெற்றோர்களின் பிள்ளை வளர்ப்பு முறை மோசமா ?? தாம்பத்திய குறைபாடா ??? சகிப்புத்தன்மை இன்மையா ?? ஒற்றுமை , விட்டு கொடுத்தல் இன்மையா ?? living together பரவ காரணம் என்ன ? அதன் விளைவுகள் என்ன ? பண்டைய வரலாறு என்ன சொல்கிறது - கலாச்சாரம் மற்றும் கணவன் - மனைவி, பற்றி ??? தயவு செய்து இதையெல்லாம் தெரிந்து கொண்டு கல்யாணம் செய்யுங்கள் ... காதல் என்பது நான்கு கண்களில் தோன்றும் ஒற்றை கனவு ... அது கல்யாணம் முன்போ பின்போ இருவரிடமும் மனம் ஓன்று பட்டு ஏற்பட வேண்டிய ஓன்று .. தமிழர் பண்பாட்டில் தாலி என்ற ஒன்றே கிடையாது ... வேண்டுமானால் வரலாற்று இதிகாசங்களை புரட்டி பார்த்து கொள்ளுங்கள்.. தீர்வாக சொல்கிறேன் உங்களிடம் உள்ள தலைகணத்தால் பிள்ளைகளின் எதிர்காலம் இருளாகும் ... ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது சால சிறந்தது ..பிறப்பதோ ஒரு முறை , வாழ்வதோ சில காலம் ... . / விவாகரத்து முடிவெடுப்பவர்களுக்கு முதலில் கவுன்சிலிங் முக்கியம் ...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.