புதுடில்லி: சுவிட்சர்லாந்தின், எச்.எஸ்.பி.சி., வங்கியில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள, இந்தியர்களின் விவரங்களை தெரிந்து கொள்வதற்காக, வருமான வரித் துறை அதிகாரிகள், சுவிஸ் வருவாய் துறை அதிகாரிகளை அணுகியுள்ளனர். கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களில் பலர், போலியான பெயர்களில், வங்கியில் கணக்கு வைத்திருப்பது, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.வரி செலுத்துவதை தவிர்ப்பதற்காகவும், தங்களின் வருமானம் பற்றிய விவரங்கள், வெளியில் தெரியாமல் மறைப்பதற்காகவும், இந்தியாவைச் சேர்ந்த, பல வி.ஐ.பி.,க்கள், பெருமளவு கறுப்பு பணத்தை, சுவிட்சர்லாந்தில் உள்ள, வங்கிகளில் பதுக்கி வைக்கின்றனர்.இந்த வங்கிகள், தங்களின் வாடிக்கையாளர் பற்றிய விவரங்களையும், அவர்களின் கணக்குகளில் உள்ள தொகைகளையும், ரகசியமாக வைத்திருக்கின்றன. இதனால், கறுப்பு பணத்தை பதுக்கி வைப்போரின் சொர்க்கமாக, சுவிட்சர்லாந்து வங்கிகள் விளங்குகின்றன.சுவிட்சர்லாந்தின், எச்.எஸ்.பி.சி., வங்கியில், கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள, 700 இந்தியர்களை பற்றிய பட்டியலை, பிரான்சு அரசு, மத்திய அரசிடம் ஒப்படைத்தது. சமூக ஆர்வலரான, அரவிந்த் கெஜ்ரிவாலும், கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை, சமீபத்தில் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தினார்.இதையடுத்து, வருமான வரித் துறை அதிகாரிகள், இது தொடர்பான விசாரணையை தீவிரப் படுத்தியுள்ளனர்.இதுகுறித்து, வருமான வரித் துறை வட்டாரங்கள் கூறியதாவது:எச்.எஸ்.பி.சி., வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்காக, மத்திய நேரடி வரி வாரியத்தின் அதிகாரிகள், சுவிட்சர்லாந்து நாட்டின், வருவாய் துறை அதிகாரிகளை அணுகியுள்ளனர்.இந்தியா - சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையேயான, இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம், சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. இதையடுத்து, எச்.எஸ்.பி.சி., வங்கியில், கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களை பற்றிய விவரங்களை, சுவிட்சர்லாந்து அரசு, இந்தியாவிடம் தெரிவிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில், எச்.எஸ்.பி.சி., வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களில் பலர், போலியான பெயர்களில், கணக்கு வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது. அடுத்த சில வாரங்களில், இதுகுறித்த விசாரணை, மேலும் தீவிரமடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு, வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இதோ வருது இப்போ வருது அப்படின்னு சொல்லி சொல்லி வானிலை அறிக்கை மாதிரி வரலாம் வராமலும் இருக்கலாம் மாதிரி தான் இதுவும். கள்ள பணம் தெரியும். இந்த கறுப்பு பணம்னா என்ன என்று ஒரு அலசல் ரிப்போர்ட் தினமலர் கொடுத்தால் நன்றாக இருக்கும். கோழியா முட்டையா முதலில் என்பது மாதிரி மக்களிடமிருந்து ஆரம்பித்து ஆள்பவர்களிடம் முடிகிறதா இல்லை எதிர்மாறாகவா? வரிகொடுக்காமல் பொருள் வாங்குவதில் இதை மக்கள் ஆரம்பித்து கொடுத்தாலும் நிஜமாகவே வரி கட்டி பொருள் வாங்கும் மக்களுக்கு அந்த வரி நிச்சயமாக அரசுக்கு செல்கிறதா இல்லை போலி பில் புக்கிலிருந்து வரி எய்ப்பு, வரி பண விரயம் போன்ற காரணங்களால் நம்பிக்கை குறைந்து வரி இல்லா வர்த்தகம் நடக்கிறதா? இதை முற்றிலும் நம்பிக்கைக்கு உரியதாக மாற்ற ஆள்பவர்கள் வருவரா? அது தவிர லஞ்சமும் கறுப்பு தான். அப்புறம் எப்படி மூட்டை மூட்டையாய் கப்பலிலா, ஆள் மூலமாகவா, தொழில்நுட்பமாகவா வெளி நாட்டில் பதுக்குகிறார்கள்? அவ்வாறு நடப்பதில் ஒன்று கூடவா அரசுக்கு தெரியாது?இல்லை தெரிந்தும் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்துகொண்டுள்ளதா? இதற்காகவே ஓட்டையுடன் ஓட்டையான விதிகள் உருவாக்கப்பட்டனவா? சரி நடக்கிற கதைன்னு பார்த்தா இன்னொருவர் பேரில் போட்டிருக்கும் பட்சத்தில் கஜானாவில் சேர்க்க முயலும் போது உரிமையாளர் ஓடோடி வருவார் இல்லையென்றாலும் திருப்பி கொண்டு வந்து கஜானாவில் சேர்த்து விட்டால் நல்லது.
தயவு செய்து எந்த பாரபட்சமுமென்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்... இது நமது நாட்டின் பணம்.. இந்திய மக்கள் கடனாளிகள் என்று சொல்கிறார்களே அந்த பணம். இந்திய அரசியல் சாசனத்தையே மாற்றி எழுத வேண்டும் போலிருக்கிறது. அந்த இறைவன் தான் இந்த திருநாட்டை காப்பாற்ற வேண்டும். லஞ்சம் வாங்குவதே ஒரு வாடிக்கையாகி போய் விட்டது. லஞ்சம் வாங்கும் அரசு ஊழியரின் பெயரையும் மற்றும் அரசியல்வாதியின் தகவல்களை எப்பொழுது பகிரங்க படுத்துகிறோமோ அப்பொழுதுதான் இந்த பிரெச்சனை தீரும். தயவு செய்து யோசியுங்கள் மக்களே.............

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.