manuplating 2-g autoion: joshi | ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முறைகேடு :புது "குண்டு' போடுகிறார் ஜோஷி| Dinamalar

ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முறைகேடு :புது "குண்டு' போடுகிறார் ஜோஷி

Added : நவ 18, 2012 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முறைகேடு  :புது "குண்டு' போடுகிறார் ஜோஷி

கோல்கட்டா: ""2ஜி' ஸ்பெக்ட்ரம் மறு ஏலம் விட்டதில் முறைகேடு நடந்துள்ளது. மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் மதிப்பீடு தவறானது என, பிரசாரம் செய்வதற்காக, இந்த முறைகேடு அரங்கேற்றப்பட்டு உள்ளது,'' என, பா.ஜ., மூத்த தலைவர், முரளி மனோகர் ஜோஷி கூறினார்.பா.ஜ., மூத்த தலைவரும், பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழு தலைவருமான, முரளி மனோகர் ஜோஷி கூறியதாவது:
சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு, சமீபத்தில் மறு ஏலம் விடப்பட்டது. மறு ஏலத்தின் மூலம், 40 ஆயிரம் கோடி ரூபாய், வருவாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் கிடைக்கவில்லை.இந்த ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளது. முக்கியமான தொலை தொடர்பு நிறுவனங்கள், இந்த ஏலத்தில் பங்கேற்கவில்லை. இதற்கு பின்னணி உள்ளது. ஏற்கனவே நடந்த, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தெரிவித்திருந்தார்.அவரின் மதிப்பீடு தவறானது என, மக்களிடம் பிரசாரம் செய்வதற்காக, மறு ஏலத்தில் முறைகேடு அரங்கேற்றப்பட்டு உள்ளது. இதுகுறித்து, முறையான விசாரணை நடத்த வேண்டும். மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் மதிப்பீடு தவறானது என, காங்கிரஸ் கட்சியினர், தற்போது பிரசாரம் செய்து வருவதை, கவனிக்க வேண்டும்.மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியை விமர்சிக்க, யாருக்கும் உரிமை இல்லை. அவரின் மதிப்பீடு, தவறு என, கருதினால், பார்லிமென்ட்டில் அவருக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டுமே தவிர, அவரை விமர்சிக்க கூடாது.இவ்வாறு, முரளி மனோகர் ஜோஷி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Madurai  ( Posted via: Dinamalar Android App )
19-நவ-201220:43:00 IST Report Abuse
Rajan இன்றைய நாட்டின் சீரழிவுக்கு நாம் தான் காரணம். படித்த நாமே இத்தகைய தரம் கெட்ட ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்து பின் குய்யோ முறையோ என பிலாக்கணம் செய்கிறோம். ஓட்டுரிமையை சரியாக பயன்படுத்துவோமேயானால் இது மாதி்ரியான நிலைமை நாளடைவில் சீர்படும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒவ்வொருவரும் ஒருவரை மாற்றி சரியான வழிக்கு கொண்டு வர எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும். கொஞ்சம் சமுதாய உணர்வு, கொஞ்சம் நேர்மை, கொஞ்சம் மனதி்டம், கொஞ்சம் உத்வேகம் இருந்தாலே போதுமானது. வருங்கால சந்ததி்யினருக்கு இது நல்லதாகவும் மற்றும் வழிகாட்டுதலாகவும் அமையும்
Rate this:
Share this comment
Cancel
Ding Tong - Thiruchy,இந்தியா
19-நவ-201207:12:22 IST Report Abuse
Ding Tong என்ன முறைகேடு யார் பண்ணியது இதெல்லாம் ஒண்ணுமே சொல்லாம முறைகேடு முறைகேடு என்று கூப்பாடு போட்டால் எப்படி. உங்க வண்டவாளம்தான் தண்டவாளத்தில ஏறிடுச்சே இன்னும் ஏன் கத்திகிட்டு இருக்கீங்க. நீங்களெல்லாம் டுபாகூர்ன்னு மக்களுக்கு முன்னாடியே தெரியும் ஆனா இவளவு பெரிய டுபகூரா இருப்பிங்கன்னு எதிர்பர்த்திருக்கமாட்டங்க.
Rate this:
Share this comment
Cancel
Giri Srinivasan - chennai ,இந்தியா
19-நவ-201207:04:28 IST Report Abuse
Giri Srinivasan CAG தலைவர் ஜோஷியோ இது ஒரு புது குண்டு என மலரின் தலைப்பு பழைய குண்டு நமத்துப்போச்சா ???
Rate this:
Share this comment
Cancel
S.Govindarajan. - chennai ,இந்தியா
19-நவ-201206:37:44 IST Report Abuse
S.Govindarajan. ஜோசியின் கருத்து சரிதான். இப்பகுதியில் வாசகர்களும் இதே கருத்தைத் தெரிவித்து உள்ளார்கள். திட்டமிட்ட நாடகம். மத்திய அரசு தரம் தாழ்ந்து போய்க்கொண்டு இருக்கிறது. இந்த ஆடசி எப்போது போகும்.
Rate this:
Share this comment
Cancel
DHASARATHAN - queenstown,சிங்கப்பூர்
19-நவ-201206:24:09 IST Report Abuse
DHASARATHAN இந்த ஏல முறைக் கேடு வரப் போகும் 3G ஏலத்தில் செய்ய இருக்கும் ஊழலை மறைக்க செய்யப்படும் ஒரு நாடகமே.
Rate this:
Share this comment
Cancel
T.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
19-நவ-201205:48:08 IST Report Abuse
T.R.Radhakrishnan ராசாவை சிறையில் அடைக்கும் வரை இந்த வழக்கு நேர் வழியில் சென்று கொண்டிருந்தது. சிறப்பு நீதிபதி திரு.சைனி அவர்கள் என்றைக்கு நமது சீமான் சிதம்பரம் மீது வழக்கு பதிய எந்த முகாந்திரமும் இல்லை என்று தீர்ப்பு வழங்கினாரோ அன்றைக்கே இந்த வழக்கை குழி தோண்டி புதைக்கும் வேலை துவங்கி விட்டது. கணக்காயரின் கணக்கை கேள்வி கேட்கும் அரசு, எந்த அடிப்படையில் தற்போதைய ஏலத்துக்கு முன்னர் 40000 கோடி வருமானம் என்று தீர்மானித்தனர்? இப்போது ""2ஜி&39 அலைகற்றைக்கு மதிப்பு இல்லை. புதிய தொழில்நுட்பம் வந்துவிட்டது. தவிர, ராசா வாரி வழங்கிய 122 அனுமதிகள் மொத்தம் ஈட்டிய வருமானம் சுமார் 9200 கோடி. ஆனால், மதிப்பு இழந்த நிலையிலும், தற்போது பத்து உரிமங்களின் ஏலம் மட்டும் 9400 கோடி ஈட்டியுள்ளது. எந்த வகையில் பார்த்தாலும், கணக்கயரின் கணக்கு தப்பு இல்லை. அவர் போட்ட கணக்கு ""2ஜி&39 அலைகற்றை கொடி கட்ட பறந்த 2008 கணக்கு. அப்போது புதிய தொழில் நுட்பங்கள் இந்தியாவுக்கு வரவில்லை. 2008 சந்தை மதிப்பு கணக்கை, மதிப்பு இழந்த 2012 சந்தை கணக்கோடு ஒப்பீடு செய்வது அபத்தம். இந்த அபத்த வாதத்தைதான் மெத்த படித்த காங்கிரஸ் மேதாவிகள் ஜீரோ லாஸ் சிபல், மைக் முழுங்கி திவாரி ஆகியோர் முன் வைக்கின்றனர். இதில் பெரிய வருத்தம் என்னவென்றால், காங்கிரஸ் கட்சியின் இந்த அபத்த வாதத்தை சில ஊடகங்களும் வழி மொழிவதுதான். (நான் தினமலரை சொல்லவில்லை. ஊடகங்களை பற்றிய எந்த உண்மையை சொன்னாலும், தினமலர் எனது கருத்தை தணிக்கை செய்து விடுகிறது. கருத்து சுதந்திரத்தில் தினமலருக்கு நம்பிக்கை உண்டு என்ற நம்பிக்கையின் அடிப்படியிலேயே சில சமயம் தவிர்க்க முடியாமல் ஊடகங்களை விமர்சனம் செய்ய வேண்டியுள்ளது) பொதுவாக மனிதர்களின் மீது நம்பிக்கை இல்லாத போது, நாம் ஆண்டவனை துணைக்கு அழைப்போம். ஜனநாயகத்தில் மக்கள்தான் ஆண்டவன். நாம்தான் இந்த சதி செயல்களை முறியடிக்க வேண்டிய சக்தி என்று உணருவோம்.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
19-நவ-201205:32:33 IST Report Abuse
villupuram jeevithan இதைப் போய் புது குண்டு என்று தலைப்பு போடுவதில் ஒன்றுமில்லை குறைந்த தொகைக்கு ஏலம் போனவுடன் அதுவும் CAG யை கிண்டலடிக்கும் போதே எல்லோரும் இதை தான் நினைத்தார்கள். இதற்கு ஆதாரம் சிக்கினால் தான் ஒரு சிறந்த செய்தி?
Rate this:
Share this comment
Cancel
Meena Sridar - toronto,கனடா
19-நவ-201205:25:21 IST Report Abuse
Meena Sridar நீங்கள் சொல்லும் கணக்கு எங்களுக்கு புரிகின்றது ஆனால் எங்களுக்கு மற்ற வேலைகள் அதிகம் இதை பற்றி சிந்திக்க நேரம் இல்லை சிந்தித்தும் பயன் இல்லை நாங்கள் நாளைய வயற்றுபாட்டை பார்கின்றோம் நீங்கள் எதற்கும் கோர்ட்டை மறுபடியும் நாடி பாருங்கள். சுப்ரமணிய சுவாமி துணைக்கு வருவார்
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
19-நவ-201204:52:33 IST Report Abuse
s.maria alphonse pandian இந்த 2G பிரச்னையை வைத்து இனியும் அரசியல் செய்ய முடியாது.....முதலில் வருவோருக்கு உத்தரவு என பிஜேபி துவங்கி வைத்ததையே பின்னால் வந்தவர்களும் பின் பற்றி உள்ளனர்...சமீபத்தில் நடை பெற்ற மறு ஏலம் அதையே சரியென உறுதி படுத்தி உள்ளது....
Rate this:
Share this comment
Cancel
ungalil oruvan - Chennai,இந்தியா
19-நவ-201204:35:32 IST Report Abuse
ungalil oruvan கரெக்ட் சார். பொட்டுல அடிச்சாப்புல பட்டுன்னு சொன்னிங்க. இது சாதரணமான பொது மக்கள் எங்களுக்கே புரியும் போது, அனுபவ அரசியல்வாதி உங்களுக்கு தெரியாத. இவனுங்கள இப்படியே உடாதிங்க, இந்தியாவையே கூறுகட்டி வித்துடுவானுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை