பொறுப்பை பதவியாக நினைக்காதீர் : ஸ்டாலின் "அட்வைஸ்'
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: ""தி.மு.க., இளைஞர் அணியில், புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகள், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை பதவியாக நினைத்து, செயல்படக் கூடாது,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.

தி.மு.க., இளைஞர் அணிக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கான கூட்டம் மற்றும் கருத்தரங்கம், சென்னை அருகே மறைமலைநகரில் நேற்று நடந்தது. தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தலைமையில், பல்வேறு தலைப்புகளில் சிறப்புரை மற்றும் பட்டிமன்றம் ஆகியவை நடைபெற்றது. மாலையில், இளைஞர் அணி விளக்க கூட்டத்தை, தி.மு.க., தலைவர் கருணாநிதி, துவக்கி வைத்தார்.கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த, 1968ம் ஆண்டு, நான் மாணவனாக இருந்த போது, கோபாலபுரத்தில் வசித்த சக நண்பர்களுடன் இணைந்து, சிறிய அளவில் இளைஞர் தி.மு.க., என்ற அமைப்பு துவங்கப்பட்டது.
இளைஞர் அணியில், கடந்த சில ஆண்டுகளாக, இளைஞர்களை காட்டிலும் முதியவர்கள் அதிகளவில் காணப்பட்டதால், அமைப்பில் மாற்றம் கொண்டு வர கட்சி முடிவு செய்தது. அதன்படி, முதியவர்களை நீக்கிவிட்டு, படித்த இளைஞர்களை புதிதாக சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் துவங்கி, கடந்த ஒன்பது மாதங்களாக நடைபெற்றது. இதில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து, ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.இறுதியாக, அனைத்து மாவட்டங்களிலும், ஒன்றிய நகர, தொகுதி, பகுதி மற்றும் பேரூர் ஆகிய பொறுப்புகளுக்கு, 5,096 பேர், இளைஞர் அணி அமைப்பில், தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கட்சி சார்பில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை பதவியாக நினைத்து அதிகாரத்துடன் செயல்படக்கூடாது. கட்சிக்கு உண்மையாக உழைத்து, படிப்படியாக முன்னேற வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது: புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகள் கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும். கட்சி வெற்றி பெற உழைக்க வேண்டும். வெற்றி என்பது, சட்டசபை உறுப்பினர் அல்லது முதல்வர் ஆக வேண்டும் என்பது அல்ல. கட்சியின் லட்சியங்களை, கொள்கைகளை வெற்றி பெற செய்வதே ஆகும்.திராவிடம் என்ற பெயரை பயன்படுத்தி, வெற்றி பெற்று ஆட்சி நடத்துகிறவர்கள்; இன்று திராவிடத்தை அழித்துவிட நினைக்கின்றனர். திராவிடம் என்பது ஒரு இனம், அதை அழிக்க முடியாது. இளைஞர்களாகிய உங்களை, நான் நம்புகிறேன்; நீங்கள் தான் கட்சியை வெற்றி பெற செய்ய வேண்டும்.இவ்வாறு கருணாநிதி பேசினார்.
**

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (20)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சாமிநாதன் - மும்பை,இந்தியா
23-நவ-201210:59:32 IST Report Abuse
சாமிநாதன் தமிழக அரசியல் அனைத்து கட்சிகளிலும் பல மாற்றங்கள் வேண்டுமானால் கண்டிப்பா இன்றைய இளைஞர்கள் திறைமையுளும் கடுமையான உழைப்பிளும்தான் இருக்கு. இளைஞர்கள் முன் வர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
க. வடிவேல் - விழுப்புரம்,இந்தியா
22-நவ-201220:37:03 IST Report Abuse
க. வடிவேல் தளபதி அவர்களின் அறிவுரையை ஏற்று கொண்டு அவர்கள் தேர்ந்தெடுத்த தொகுதியில் நல்ல சேவையை செய்தால் அடுத்த முறை நல்ல மாற்றம் கிடைக்கும் . ..கடந்த முறை உள்ளாட்சி துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டது .ஸ்டாலின் தளபதிக்கு நன்றி ...... இவன் க.வடிவேல்
Rate this:
Share this comment
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
19-நவ-201207:16:49 IST Report Abuse
K.Balasubramanian பணித்திரு , தனித்திரு , விழித்திரு என்ற மூன்று வார்த்தைகளின் முதல் எழுத்துக்கள் எல்லோருக்கும் எப்போதும் (எந்த வயதிலும் ) பதவி தரும் .
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
19-நவ-201207:06:47 IST Report Abuse
Thangairaja பதவி இருந்தா பணம் வரும், பவிசு வரும் என நினைக்கும் காலத்தில் அட்லீஸ்ட் இந்த அறிவுரையாவது சொல்லப்படுகிறதே என்பது ஆறுதலான விஷயமல்லவா. அது திமுகவை தவிர எந்த கட்சியில் சாத்தியம்....?
Rate this:
Share this comment
Cancel
Giri Srinivasan - chennai ,இந்தியா
19-நவ-201206:47:02 IST Report Abuse
Giri Srinivasan பாஸ்கரா கலைஞரிடம் அரசியல் பாடம் கற்க வேண்டியவர்கள் ஏராளம் பேர் உள்ளனர். இன்று வரை அவருடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை கூட யாராலும் தட்டிப்பறிக்க முடியவில்லை. தலைவர் பதவியையா ??? இந்த தலைவனுக்கு பாடம் சொல்ல எந்த சுப்பனும் கிடையாது ஸ்டாலின் உட்பட ...,
Rate this:
Share this comment
Cancel
Giri Srinivasan - chennai ,இந்தியா
19-நவ-201206:36:34 IST Report Abuse
Giri Srinivasan செந் தமிழரே அந்த 300 பேரும் தி க தொண்டர்களைப்போல இருந்துவிடலாம். அரசியல் கட்சியை துவங்கி தினமும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை கருப்பு துண்டு போராட்டம் என்றால், அதன் பிறகு அடுத்த கட்டம் என்ன??? ஒரு கவுன்சிலர் கூட இல்லாமல் கட்சி எதற்கு ??? ஜெ அவருடைய உணர்ச்சி வசப்படுவதை பாடமாக தெரிந்துகொண்டார்,மானசீக தங்கையாக மட்டும் உள்ளார்.ஆனால், கலைஞர் அவரை உச்சாணி கொம்பில் வைத்திருந்தார். ஆனால் இன்று, பிரபாகரன் இல்லை. இனி அடுத்த நடவடிக்கை என்ன ??? தி மு க வின் நிலைப்பாடாக, ஆட்சியை இழந்த பின்னும் டெசோ ,ஐ நா என அரசியலில் வேகமாக உள்ளார். இது தான் அரசியல் . விடுதலைப்புலிகளை மட்டும் ஆதரித்ததன் விளைவாக வைக்கோ ,நெடுமாறன் , சீமான் போன்ற தலைவர்களின் வரலாறில் ஒரு முற்றுப்புள்ளிக்கு அவர்களே முடிவு எடுத்துவிட்டனரோ என எண்ணத்தோன்றுகிறது. ஆகவே, வைகோ அரசியலில் ,கலைஞரிடம் கற்க வேண்டிய பாடம் நிறைய உள்ளது மன்னிக்கணும் எல்லோரும் ???? ஜெ உட்பட .
Rate this:
Share this comment
Cancel
T.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
19-நவ-201206:00:40 IST Report Abuse
T.R.Radhakrishnan கழக நிர்வாகிகளே, இளைஞர் அணி செயலாளர் ஸ்டாலின் சொல்லியுள்ளதை ரொம்ப சீரியசாய் எடுத்துக்காதீங்க. அதெல்லாம் சும்மா காமெடிக்கு. நீங்க அரசியலுக்கு வந்துள்ளது நாலு காசு சம்பாதிக்க. கலைஞர் குடும்பம் இந்த பூமி உள்ள வரையில் தேவைக்கு அதிகமாகவே அவங்க சந்ததிக்கு சேர்த்து வைத்துள்ளனர். ஸ்டாலின் சொல்லும் வேதாந்த பேச்சை எல்லாம் கேட்டு உங்கள் கருத்தில் கவனத்தை இழந்து விட வேண்டாம். தி.மு.க. வினரின் அடையாளமே அராஜகமும், கொள்ளையும்தான். அவைதான் உங்களுக்கு இரண்டு கண்கள். ஆகவே, தொடரட்டும் உங்கள் பணி.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
19-நவ-201206:00:09 IST Report Abuse
villupuram jeevithan நீங்களும் தான் பதவியை பொறுப்பாக நினைத்து அப்பாவிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்? ஆனால் அவர் செவி மடுக்க மறுக்கிறாரே? என்ன செய்வது?
Rate this:
Share this comment
Cancel
Arul - Chennai,இந்தியா
19-நவ-201205:47:31 IST Report Abuse
Arul திராவிடம் என்றல் என்ன ?என்று வினவிய சட்டசபை பெண் உறுப்பினரின் கேள்விக்கு திமுகவின் தலைவர் விளக்கம் ......நாடவை அவிர்த்துபார்த்தல் அங்கு திராவிடம் இறக்கும் ....... சட்டசபைல் பேசியது .
Rate this:
Share this comment
Cancel
Ram Psa - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
19-நவ-201205:47:27 IST Report Abuse
Ram Psa வெற்றி என்பது, சட்டசபை உறுப்பினர் அல்லது முதல்வர் ஆக வேண்டும் என்பது அல்ல.இந்த வார்த்தையில் ஆயிரம் அர்த்தம் இருக்கு.அதாவது திமுக வை பொறுத்த வரைக்கும் பதவி சுகத்தை எங்க குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அனுபவிப்போம்.உடன் பிறப்புகளாகிய நீங்க எப்பவும் கைல ஒரு பித்தல சொம்ப வச்சி கிட்டு டிங் ..டிங்..டிங்..ன்னு அடிச்சிட்டு இருந்தா போதும் வேற எந்த நெனப்பும் மனசில வர படாதின்னு சொல்றீங்க அப்டித்தான...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்