Advertisement
தாக்கரேக்கு பிடித்தமான இடத்தில் நடந்த இறுதிச் சடங்கு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

19 நவ
2012
06:14
பதிவு செய்த நாள்
நவ 18,2012 23:27

மும்பை:""நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பின், மும்பையில், பொது இடத்தில், தலைவர் ஒருவரின் உடல் தகனம் செய்யப்படுவது இதுவே முதல் முறை,'' என, பால் தாக்கரேயின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி, ஜூலியோ ரிபேரியோ கூறினார். அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோரின் இறுதிச் சடங்குகள், வழக்கமாக பொது இடங்களில் நடப்பது இல்லை.

ஆனால், சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் இறுதிச் சடங்குகள், மும்பையின் பொது இடமாக கருதப்படும், பிரபலமான சிவாஜி பார்க்கில் நடந்தது. இதற்காக, சிவாஜி பார்க் நிர்வாகத்திடம், சிவசேனா கட்சியினர், அனுமதி பெற்றிருந்தனர்.
தாக்கரேயின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற, மும்பையின், முன்னாள் போலீஸ் கமிஷனர், ஜூலியோ ரிபேரியோ கூறியதாவது:நாடு சுதந்திரம் அடைந்தபின், மும்பையில், பொது இடத்தில், தலைவர் ஒருவரின் உடல், தகனம் செய்யப்படுவது, இதுவே முதல் முறை. சுதந்திர போராட்ட வீரர், பாலகங்காதர திலகர், 1920ல் இறந்தபோது, தெற்கு மும்பையில் உள்ள, பிரபலமான கிர்காம் சவுபாட்டி என்ற பொது இடத்தில் தகனம் செய்யப்பட்டது. இதற்கு பின், தாக்கரேயின் உடல், தற்போது பொது இடத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, ஜூலியோ ரிபேரியோ கூறினார்.தாக்கரேயின் இறுதிச் சடங்கு நடந்த, சிவாஜி பார்க், அவருக்கு மிகவும் பிடித்தமான இடம். ஒவ்வொரு ஆண்டும், தசரா பண்டிகையின் போது, இந்த மைதானத்தில் தான், தாக்கரே உரை நிகழ்த்துவார்.

சிவசேனா கட்சியின் பல பொதுக் கூட்டங்கள், இங்கு நடந்துள்ளன.
உடல் நலக் குறைவு காரணமாக, கடந்த மாதம் நடந்த, தசரா கொண்டாட்டத்தில், பால் தாக்கரேயால் பங்கேற்க முடியவில்லை. இதனால், "வீடியோ கான்பரன்சிங்' முறை மூலம், அவர் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:உடல் ரீதியாக முற்றிலும் தளர்ந்து விட்டேன். என்னால், நடக்க முடியவில்லை. ஓரிரு வார்த்தைகள் பேசுவதற்கே மூச்சு வாங்குகிறது. சிவசேனா தொண்டர்கள் எனக்கு ஆதரவு அளித்தது போல், என் மகன், உத்தவ், பேரன் ஆதித்யா ஆகியோருக்கு, தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்.இவ்வாறு தாக்கரே, அப்போது பேசினார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.