புதிய யுக்திகளால் எதிர்க்கட்சிகளை கலங்கடிக்கிறார் மோடி
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஆமதாபாத்:குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், புதிய யுக்திகளை கையாண்டு, எதிர்க்கட்சியினரை கலங்கடித்து வருகிறார். "3டி' தொழில்நுட்பத்தின் மூலம், ஒரே நேரத்தில், நான்கு நகரங்களில், அவரது பிரசாரம் ஒளிபரப்பானது, குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குஜராத்தில், நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல், அடுத்த மாதம், இரண்டு கட்டங்களாக நடக்கிறது. அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்துள்ளன.ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ., பிரசாரத்தில் முன்னிலை வகிக்கிறது. முதல்வர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரங்களில், புதிய யுக்திகளை கையாண்டு, எதிர்க்கட்சியினரை திணறடித்து வருகிறார். நேற்று முன்தினம், ஆமதாபாத், வதோதரா, ராஜ்கோட், சூரத் ஆகிய நகரங்களில், புதுமையான முறையில், ஒரே நேரத்தில் அவர் பிரசாரம் செய்தார்.

இந்த நான்கு நகரங்களிலும், மிகப் பெரிய மைதானங்களில், அகன்ற திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆமதாபாத்தில் உள்ள ஸ்டூடியோவில் இருந்தபடி, நரேந்திர மோடி, பிரசார உரை நிகழ்த்தினார். அவரின் இந்த உரை, நான்கு நகரங்களிலும் அமைக்கப்பட்டிருந்த திரைகளில், "3டி' தொழில்நுட்பத்தில் நேரடியாக ஒளிபரப்பானது.நரேந்திர மோடி, கண் முன் தோன்றி, தத்ரூபமாக உரை நிகழ்த்துவது போல் இருந்தது. நான்கு நகரங்களிலும், ஒரே நேரத்தில், அவரது உரை ஒளிபரப்பானதை, ஆயிரக்கணக்கான மக்கள், பார்த்து வியந்தனர். வழக்கமாக, "3டி' தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பாகும் காட்சிகளை, அதற்குரிய கண்ணாடி அணிந்து தான், பார்க்க வேண்டும்.ஆனால், நரேந்திர மோடியின் உரை ஒளிபரப்பானபோது, கண்ணாடி அணியாமலேயே, பார்க்கும் அளவுக்கு தொழில்நுட்ப வசதி செய்யப்பட்டிருந்தது. நரேந்திர மோடியின் இந்த புதுமையான பிரசாரம், குஜராத் வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரசாரத்தில், நரேந்திர மோடி பேசியதாவது:குரங்கு, எலி என, என்னை, காங்கிரசார் கிண்டலடித்துள்ளனர். இதற்காக, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவர்கள் ராமாயணம் படித்தது இல்லை போலும்; ராமாயணத்தில், ராமபிரானுக்கு பெரும் உதவி செய்தது, வானரசேனை தான். அந்த வகையிலும், என்னையும், வானரமாக சித்தரித்ததற்கு நன்றி.அதேபோல், கடவுள் விநாயகரின் வாகனமாக இருப்பது, எலி. எனவே, என்னை எலி என கூறியதற்கும் நன்றி.இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்