நம்பிக்கையில்லா தீர்மானம் : கம்யூ.,க்களிடம் மம்தா கெஞ்சல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: மத்திய அரசுக்கு எதிராக, தங்கள் கட்சி கொண்டு வர உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என, கம்யூனிஸ்ட் கட்சிகளிடம், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான, மம்தா பானர்ஜி கெஞ்சியுள்ளார். இது தொடர்பாக, கோல்கட்டாவில், மாநில மார்க்சிஸ்ட் தலைவரை சந்தித்துப் பேசவும் தயார் என, அறிவித்து உள்ளார்.பிரதமர், மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இரண்டாம் அரசில், மூன்று மாதங்களுக்கு முன் வரை இடம்பெற்றிருந்த, மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ், இப்போது, "நேர் எதிரி கட்சி'யாக விளங்குகிறது.சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு போன்ற பல பிரச்னைகளை முன்வைத்து, மத்திய அரசை பதவியிலிருந்து இறக்க, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முனைப்புடன் உள்ளது.
ஆசை இருந்தால் மட்டும் போதுமா, பார்லிமென்டில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, குறைந்தபட்சம், 50 எம்.பி.,க்களின் ஆதரவாவது வேண்டும்.மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜியின் கட்சிக்கு, 19 எம்.பி.,க்கள் மட்டுமே உள்ளனர்.இவ்வளவு குறைந்த எம்.பி.,க்களை வைத்துக் கொண்டு, மத்திய அரசை அசைத்துப் பார்க்க நினைக்கும் மம்தா, அதற்காக, பிற கட்சிகளின் ஆதரவை வேண்டுகிறார்.சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்த விவகாரத்தை எழுப்பி, மத்திய அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்த நினைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, திரிணமுல் காங்கிரசுடன் இணைந்துசெயல்பட தயக்கம்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்த தங்களை அப்புறப்படுத்திய, மம்தாவுடன் இணைந்து, அவர் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க, மார்க்சிஸ்டுகள் முன்வரவில்லை.
வெளிப்படையாக ஒருமித்த கருத்து தெரிவித்தாலும், கம்யூனிஸ்டுகளின் உள் மனதில், "மம்தா கொண்டு வர உள்ள, நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைய வேண்டும்' என்ற விருப்பமே மேலோங்கி உள்ளது. இதன் மூலம், தங்களின் மேற்கு வங்க பகைமையை முடித்துக் கொள்ள அந்த கட்சி விரும்புகிறது.இதை நன்கு அறிந்துள்ள பிற கட்சிகளும், மம்தாவுக்கு ஆதரவளிக்க தயக்கம் காட்டுகின்றன.இதில், இன்னொரு சிக்கலும் உள்ளது.
மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, அந்த தீர்மானம் தோல்வி அடைந்து விட்டால், அடுத்த ஆறு மாதங்களுக்கு, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியாது.அடுத்த லோக்சபா தேர்தலுக்கு இன்னும், 18 மாதங்களே உள்ள நிலையில், மம்தாவின் பலப்பரீட்சையில் பங்கேற்க, பிற எதிர்க்கட்சிகளுக்கு தயக்கம் உள்ளது.
இந்நிலையில், மம்தா நேற்று கூறியதாவது:
ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கைகள் வேறு வேறு. பாரதிய ஜனதாவுக்கும், எங்களுக்கும், கொள்கை அளவில் நிறைய வித்தியாசம் உள்ளது. சாதாரண மக்களுக்கு எதிரான இந்த அரசை, பதவியிலிருந்து இறக்க, இதை ஒரு வாய்ப்பாக, எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம், இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும்.
எங்கள் இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள பகைமையை மறந்து, நட்பு பாலம் ஏற்படுத்த நான் விரும்புகிறேன். பாரதிய ஜனதாவுடன் கைகோர்க்க, காங்கிரஸ் தயாராக இருக்கும் போது, கம்யூனிஸ்டுகளுடன் நான் ஏன் இணைந்து செயல்படக் கூடாது?
எனக்கு எந்த, "ஈகோ'வும் இல்லை; இப்போதைக்கு, எங்களின் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு அளித்தால், அடுத்து, அந்த கட்சி கொண்டு வரும், நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க நாங்கள் தயார்.
எதிரெதிர் கருத்துகளையும் செயல்பாட்டையும் கொண்ட, பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டுகள், பார்லிமென்டில், பல விவகாரங்களில் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.
இந்த நாட்டை, ஊழலும், சுரண்டலும் தின்று கொண்டிருக்கும் போது, கொள்கை நியாயங்கள் பேசக் கூடாது. கம்யூனிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், நாங்கள் தயாராக உள்ளோம். தேவைப்பட்டால், நானே, அலிமுத்தீன் தெருவில் உள்ள, மார்க்சிஸ்ட் தலைமையகம் சென்று, செயலாளர், பிமன் போசுடன் பேச தயாராக உள்ளேன். நான் கம்யூனிஸ்டுகளிடம் கேட்டுக் கொள்வதெல்லாம், எந்த காரணத்தைக் கொண்டும், இந்த மைனாரிட்டி அரசை, நம்பிக்கையில்லா தீர்மானத்திலிருந்து காப்பாற்றி விடாதீர்கள்.இவ்வாறு, தன் நிலைப்பாட்டை, மம்தா வெளிப்படுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், "மம்தாவின், நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கப் போவதில்லை' என்ற, தங்கள் நிலையில் உறுதியாகவே இருக்கின்றனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்