Advertisement
அதிருப்தியாளர்களை சமாளிப்பது எப்படி?: விஜயகாந்த் ஆலோசனை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2012,22:47 IST
மாற்றம் செய்த நாள் : நவம்பர் 20,2012,23:09 IST

அ.தி.மு.க.,விற்கு தாவ தயாராகவுள்ள, அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை தக்க வைப்பது குறித்து, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று ரகசிய ஆலோசனை நடத்தினார். தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் நான்கு பேர், கடந்த மாதம், முதல்வர் ஜெயலலிதாவை, தலைமை செயலகத்தில் சந்தித்து பேசி, பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த சந்திப்பிற்கு பிறகு, தே.மு.தி.க., நடவடிக்கைகளில் பங்கேற்காமல், அவர்கள் நால்வரும் ஒதுங்கியுள்ளனர்.முதல்வரை சந்தித்த எம்.எல்.ஏ.,க்களை, தே.மு.தி.க., நிர்வாகிகள், கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு போட்டியாக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை, நான்கு எம்.எல்.ஏ.,க்களும் விமர்சித்து வருகின்றனர்.இம்மாத இறுதியில் நடக்க உள்ள, சட்டசபை வைர விழாவிற்குள், தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் சிலர், முதல்வரை சந்திக்ககூடும் என்று தகவல் கசிந்து வருகிறது. அதேபோல, கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் சிலரும், கட்சி தாவலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை, 11:30 மணியளவில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.அதற்கு முன்பாகவே, சுதீஷ், சந்திரக்குமார், பார்த்தசாரதி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் அங்கு வந்திருந்தனர். அவர்களுடன் விஜயகாந்த் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். அதேநேரத்தில், கட்சியில் அதிருப்தியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து, விஜயகாந்துடன், மாநில நிர்வாகிகள் விவாதித்துள்ளனர்.
அதிருப்தியில் உள்ளவர்களிடம் பேசி, சமரசம் செய்யுமாறு, மாநில நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது.அ.தி.மு.க.,வில் லோக்சபா தேர்தல் தொடர்பான, ஆலோசனை கூட்டம், மாவட்ட வாரியாக நடந்து முடிந்துள்ளது. காங்கிரஸ், கட்சியில், ஆலோசனை நடந்து வருகிறது. தி.மு.க.,வும் டெசோ, இளைஞர் அணி மாநாடு என்று பரபரப்பாக இயங்கி வருகிறது.இதனால், அக்கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பரபரப்பாக உள்ளனர். ஆனால், தே.மு.தி.க., நிர்வாகிகள், தொண்டர்கள் எந்தவித அரசியல் செயல்பாடும் இன்றி, சோர்வடைந்து வருவதாக, மாநில நிர்வாகிகள் விஜயகாந்திடம் கூறியுள்ளனர்.இதையடுத்து கட்சியினரை உற்சாகப்படுத்தும் வகையில், லோக்சபா தேர்தல் குழுவை நியமிப்பது, மகளிர் அல்லது இளைஞர் அணி மாநாடு நடத்தலாமா என்பது குறித்து விஜயகாந்த், அவர்களுடன் விவாதித்துள்ளார்.

- நமது நிருபர் -




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
சுந்தரவடிவேலு - Tiruppur,இந்தியா
22-நவ-201203:29:41 IST Report Abuse
சுந்தரவடிவேலு சும்மா நம்ம வுட்டா ஆளில்லேன்னு தாம் தூம்னு ஆடவேண்டியது... அப்புறம் கடையாணி கழண்டு போனமாதிரி பேதலிச்சு நிக்கவேண்டியது.. என்னைக்கும் ஸ்டெடியா நிக்கணும், தெளிவான எதிர்கட்சியா இருந்து செயல்படனும், நெஜமாலுமே கருப்பு எம்ஜியாரா மாறி தமிழ்நாட்டு முதல்வராக மாறுவதற்கான ஓர் ஆரோக்கிய சூழ்நிலையை உருவாக்கணும் என்கிற சிந்தனை வேணும் விஜய்.. இல்லேனா மக்கள் மட்டும் இல்லே.. உங்க கூட இருக்கற ஆளுங்களே உங்களை துண்டைக் காணோம் துணியக் காணோம்னு ஓட வச்சுருவாங்க.. இனியாவது கொஞ்சம் தெளிவா நடந்துக்க முயன்று பாருங்க..
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
¦º¸¾£ÍÌÁ¡÷. - Salem  ( Posted via: Dinamalar Android App )
21-நவ-201212:04:20 IST Report Abuse
¦º¸¾£ÍÌÁ¡÷. மொதல்ல நீ உன் ஆளையே அடிக்கறத நிறுத்து. எல்லாம் சரியாயிடும்.-
Rate this:
0 members
0 members
5 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.