சென்னை : ""சில்லரை வணிகத்தில், அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மசோதாவுக்கு எதிராக, பார்லிமென்டில் அ.தி.மு.க., ஓட்டளிக்கும்,'' என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
அ.தி.மு.க., எம்.பி.,க்கள் கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின், முதல்வர் ஜெயலலிதா அளித்த பேட்டி: சில்லரை வணிகத்தில், அன்னிய நேரடி முதலீட்டை, தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்; இதுகுறித்து, தெளிவான அறிக்கையையும் வெளியிட்டுள்ளேன். தமிழகத்தில், சில்லரை வணிகத்தில், அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மாட்டோம்; இதில், எவ்வித மாற்றமும் இல்லை. ல்லரை வணிகத்தில், அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிராக, பார்லிமென்டில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அதை, அ.தி.மு.க., உறுதியாக ஆதரிக்கும். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக, இதுவரை, அ.தி.மு.க.,வின் ஆதரவை யாரும் கேட்கவில்லை; யாரேனும் வேண்டுகோள் வைத்தால், அது குறித்து பரிசீலிப்போம். தீர்மானம் வெற்றியடைய வேண்டும் என்பதே, எங்களது நிலை. தீர்மானத்தை, எத்தனை பேர் ஆதரிக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
லோக்சபா தேர்தலை, எந்த நேரத்திலும் சந்திக்க, அ.தி.மு.க., தயாராக உள்ளது. காங்கிரஸ் கட்சி, யாரை வேண்டுமானாலும், பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன்னிலைப்படுத்தலாம்; அதற்கான சுதந்திரமும், உரிமையும் அந்த கட்சிக்கு உள்ளது. அலைக்கற்றை ஊழலுக்கு பின் நடத்தப்பட்ட, மறு ஏலத்தை தொடர்ந்து, ஊழலே நடக்கவில்லை எனக் கூறுவது, மத்திய அரசே நடத்தும் மிகப்பெரிய நாடகம். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அம்மா அவர்களே, வணக்கம், தமிழ் நாடு, மின்சாரம் இல்லாமல், இறந்து கொண்டு இருக்கிறது. சென்னைக்கு மின்சார தடை இல்லாததால், உங்களுக்கு தமிழ் நாட்டின் மற்ற பாகங்களின் நிலைமை தெரியவில்லை. தயவு செய்து கோயம்புத்தூர் சேலம் erode போன்ற நகரங்களில் இரண்டு நாள் தங்குங்கள். உங்களுக்கு நிலைமை தெரியும். இப்படி சென்றால், இன்னும் இரு மாதங்களில் தமிழ் நாட்டில் 7 கோடி பேர் இறந்து விடுவார்கள் மின்சாரம் இல்லாமல். குறைந்த பட்சம் பகலில் ஆவது 8 மணி நேரம் தடை இல்லாமல் மின்சாரம் கொடுக்க சொல்லுங்கள். இல்லாவிட்டால், சேலம், ஈரோடு சேலம் கோயம்புத்தூர் இல் உள்ள எல்லா தொழில் நிறுவனங்களும் மூடிவிட்டு 100 நாள் வேலைக்கு தான் செல்ல வேண்டும். தயவு செய்து கவனிபீர்களா.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.