ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கர்ப்பப்பை வெடித்து குழந்தை இறந்தது. ரத்தப்போக்கால் உயிருக்கு போராடிய பெண், ஆசிரியர் வழங்கிய ரத்ததானத்தால் உயிர் பிழைத்தார்.ராமநாதபுரம் அருகே சுப்புத்தேவன்வலசை சுரேஷ் மனைவி களஞ்சியராணி, 23. பிரசவத்திற்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். சிறிது நேரத்தில் கர்ப்பப்பை வெடித்து ரத்தப்போக்கு அதிகமானது. ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. உயிருக்கு போராடிய இவருக்கு, உடனடியாக "பி பாசிடிவ்' ரத்தம் தேவைப்பட்டது. மருத்துவமனையில் இந்த வகை ரத்தம் இருப்பு இல்லை என ஊழியர்கள் கைவிரித்தனர். ராமநாதபுரம் மெல்வின் கேட்டரிங் கல்லூரி மாணவர்கள், ரத்தம் கொடுக்க திரண்டனர். இவர்களுக்கு ரத்தவகை கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டது.தகவலறிந்த குடும்பநல துணை இயக்குனர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் கூறியபின், ரத்தவங்கியில் அவசர தேவைக்காக வைத்திருந்த ஒரு பாட்டில் "பி பாசிடிவ்' ரத்தம் வழங்கினர்.மேலும் ஒரு பாட்டில் ரத்தம் தேவைப்பட்டது. மெல்வின் கல்லூரி ஆசிரியர் முரளி, உடனடியாக மருத்துவமனை வந்து அதேவகை ரத்தம் வழங்கினார். இதை செலுத்திய பின் களஞ்சிய ராணி, உயிர் பிழைத்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.