சென்னை:""ஜாதிய உணர்வுகளை தூண்டும் வகையில் பேசி வரும், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், வன்னியர் சங்க தலைவர் குரு ஆகியோரை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், கைது செய்ய வேண்டும்,'' என, இந்தியக் குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் கூறினார்.சென்னையில் அவர் அளித்த பேட்டி:
தர்மபுரி மாவட்டம், நத்தம் காலனியில், இம்மாதம், 7ம் தேதி நிகழ்ந்த கலவரத்தில், எஸ்.சி., பிரிவினரின், 250க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது; பணம், நகைகள், கொள்ளை அடிக்கப்பட்டன; கார், இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.பள்ளி மாணவர்களுக்கு, அரசு வழங்கிய மடிக்கணினி, கல்வி சான்றிதழ் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டன.
இக்கலவரத்தால், நத்தம் காலனியில், 25 கோடி ரூபாய் அளவிற்கு, சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வன்முறை சம்பவத்திற்கு காரணமானவர்களை, சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்பதுடன், அவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்ய வேண்டும்.
உளவுத் துறை விழிப்புடன் இருந்திருந்தால், தர்மபுரி வன்முறை சம்பவத்தை தடுத்திருக்கலாம். இச்சம்பவத்தில், தமிழக அரசு, சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஜாதிய உணர்வுகளை தூண்டும் வகையில் பேசி, அதன் மூலம் வன்முறைக்கு வழி
வகுத்துவரும், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் வன்னியர் சங்க தலைவர் குரு ஆகியோர், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும்.
ராமதாஸ் தொடர்ந்து, ஜாதிய வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டால், தமிழகத்தில் உள்ள தலித் தலைவர்கள் ஒருங்கிணைந்து, பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தை தடை செய்ய, தேர்தல் கமிஷனிடம் வலியுறுத்துவோம்.இவ்வாறு தமிழரசன் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.