kasab executed in mumbai | 166 பேர் பலியான மும்பை சம்பவத்தில் உயிருடன் சிக்கிய கசாப்புக்கு தூக்கு : 4 ஆண்டுகளுக்கு பின் புனே சிறையில் தண்டனை நிறைவேற்றம்| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (91)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

புனே: நாட்டின் வர்த்தக தலைநகர், மும்பைக்குள் நுழைந்து, ஈவு இரக்கமின்றி, 166 பேரை கொன்று குவித்த, பாகிஸ்தானின், லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதிகளில், உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப்புக்கு, 25, புனே நகரின், எரவாடா சிறையில் நேற்று முடிவுரை எழுதப்பட்டது. நேற்று காலை, கசாப் தூக்கிலிடப்பட்டான்; அவனின் உடலை, சிறையிலேயே புதைத்து, அடையாளம் தெரியாமல் ஆக்கிவிட்டனர், மகாராஷ்டிரா சிறைத் துறையினர்.
உலகில் எந்த நாட்டிலுமே நடக்காத சம்பவம், 2008, நவம்பர் 26ம் தேதி, மும்பையில் நடந்தது. பாகிஸ்தானின் லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதிகள், 10 பேர், பயங்கர ஆயுதங்களுடன், கடல் வழியாக, மும்பைக்குள் நுழைந்தனர்.
கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுக் கொன்றனர்; மக்கள் நடமாட்டம் மிகுந்த, மருத்துவமனை, ரயில்வே ஸ்டேஷன், முக்கிய சாலைகள், இஸ்ரேலியர் வழிபாட்டு தலம் ஆகிய இடங்களில், கையெறி குண்டுகள் மற்றும் இயந்திர துப்பாக்கிகளால், 10 பயங்கரவாதிகள் நடத்திய வெறியாட்டம், உலகையே பீதிக்கு உள்ளாக்கியது.தாஜ்மகால், டிரைடன்ட் ஓபராய் நட்சத்திர ஓட்டல்களுக்குள் புகுந்து, அந்த ஓட்டல்களையும் சிதைத்து, 60 மணி நேரம் பேயாட்டம் போட்ட, பயங்கரவாதிகள், ஒன்பது பேரை, கமாண்டோ படை வீரர்கள், நீண்ட போராட்டத்திற்கு பிறகு சுட்டுக் கொன்றனர்.
அஜ்மல் கசாப், 21, என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான்.பாதுகாப்பு மிக்க, மும்பை, ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டிருந்த, கசாப்புக்கு, 2010 மே, 6ல், செஷன்ஸ் கோர்ட், தூக்கு தண்டனை விதித்தது. அந்த தண்டனையை, மும்பை உயர் நீதிமன்றம், 2011 பிப்ரவரி, 21ல் உறுதி செய்தது. உச்ச நீதிமன்றம், கசாப்பை தூக்கிலிட, இந்த ஆண்டு, ஆகஸ்ட், 29ல் பச்சைக்கொடி காட்டியது."உலகின் சிறந்த ஜனநாயக நாடு' என்பதை பறைசாற்றும் விதமாக, கொலையாளியாக இருந்த போதிலும், பிடித்த உடனே கொல்லாமல், சிறையில் அடைத்து, கசாப்புக்கு அனைத்து வாய்ப்புகள், வசதிகள் வழங்கப்பட்டன.கைது செய்யப்பட்ட

போது, 21 வயதாக இருந்த போதிலும், கசாப், "நான், 18 வயது சிறுவன்; என்னை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தான் அடைக்க வேண்டும்' என்று முறையிட்டான்.
இந்தி மொழி நன்றாக பேசத் தெரிந்திருந்த போதிலும், "உருது மொழியில், குற்றச்சாட்டு பதிவுகள் வேண்டும்' என்றான்.
அனைத்தையும், முறைப்படி வழங்கிய இந்திய அதிகாரிகள், அவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பிறகு, மேல் முறையீடு செய்யவும், ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்யவும் அனுமதிஅளித்தனர்.
ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, கசாப்பின் கருணை மனுவை, இம்மாதம், 5ம் தேதி நிராகரித்தார். அதையடுத்து, எந்த நேரமும் அவன் தூக்கிலிடப்படலாம் என, எதிர்பார்க்கப்பட்டது.
காதும் காதும் வைத்தாற்போல, கனகச்சிதமாக, கசாப்பின், "கதை'யை மகாராஷ்டிரா அரசு, நேற்று முடித்து விட்டது.
கசாப் அடைக்கப்பட்டிருந்த, மும்பை, ஆர்தர் ரோடு சிறையில் தூக்கிலிட வாய்ப்பு இல்லாததால், இம்மாதம், 19ம் தேதி, அருகில் உள்ள, புனே நகரின், வரலாற்று புகழ் மிக்க, எரவாடா சிறைக்கு, கசாப் மாற்றப்பட்டான்.
துப்பாக்கி குண்டுகள் துளைக்க முடியாத, "புல்லட் புரூப்' ஜீப்பில் ஏற்றி, கண்கள் கட்டப்பட்ட நிலையில், எரவாடா சிறைக்கு கசாப் கொண்டு வரப்பட்டதுமே அவனுக்கு, தன் இறுதி காலம் தெரிந்து விட்டது.நேற்று முன்தினம், ஐக்கிய நாடுகள் சபையில், மரண தண்டனைக்கு எதிராக, கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில், இந்தியா கையெழுத்திட்ட நிலையில், நேற்று காலை, 7:30 மணிக்கு கசாப்புக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.அவன் இறந்ததை, சிறைத் துறை டாக்டர்கள் உறுதி செய்ததும், தூக்கு மேடையிலிருந்து அப்புறப்படுத்திய சிறை காவலர்கள், சிறையின் உள்ளேயே குழி தோண்டி, புதைத்தனர்.இதன் மூலம், மும்பையில் பேயாட்டம் ஆடிய, பாகிஸ்தான் பயங்கரவாதிகளில், மிச்சமிருந்த கசாப்பின் கதையும் முடிக்கப்பட்டது.கசாப்பிற்கு

Advertisement

தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள தகவலை, பாகிஸ்தான் தலைநகர், இஸ்லாமாபாத்திலிருந்த, இந்திய ஐ-கமிஷனர் அலுவலகஅதிகாரிகள் கடிதமாக தயாரித்து, பாகிஸ்தான் அதிகாரிகளிடம் கொடுத்தனர். அவர்கள் வாங்க மறுத்ததால், "பேக்ஸ்' மூலம் கடிதம் அனுப்பப்பட்டது.கசாப்பிற்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட விவரம், நேற்று காலை, 8:00 மணிக்கு தான், வெளி உலகிற்கு தெரிய வந்தது. மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர், ஆர்.ஆர்.பாட்டீல், மும்பையில் இந்த தகவலை வெளியிட்ட அதே நேரம், தலைநகர் டில்லியில், மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டேயும், கசாப் தூக்கிலிடப்பட்ட தகவலை வெளியிட்டார்.பயங்கரவாதி கசாப் தூக்கிலிடப்பட்டதை அறிந்த பல தரப்பினரும், வரவேற்பு தெரிவித்தனர். மகாராஷ்டிரா, டில்லியில் பல இடங்களில், சிவசேனா மற்றும் பாரதிய ஜனதாவினர், பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

தாக்குதல் நடந்த நாட்கள் 3 ,இடங்கள் 8,பலியானவர்கள் 166, காயமடைந்தவர்கள் சு 308,சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் 9,பிடிபட்ட பயங்கரவாதி 1,விசாரணை காலம் 1,457 நாட்கள்,தாக்குதல் நடந்தது; தண்டனை கொடுக்கப்பட்டது: புதன் கிழமை.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (91)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-நவ-201223:24:13 IST Report Abuse
தமிழ்வேல் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்... ஆனால் நமது உயிரை மதிக்காத அவர்களைப்போல நாமும் அவர்களது உயிரை அவர்களைப்போலவே பலியாக்கி தண்டிக்க வேண்டுமா என்பது கேள்விக்குரியது .... என்னைப்பொறுத்தவரையில் தூக்கில் இறப்பதைவிட சாகும் வரை ஜெயிலில் கஷ்டப்படுவது பெரிய தண்டனை.. அதுவரையில் செலவு ஆகுமே என்பது தேவையற்ற கேள்வி. எத்தனையோ லட்சம் பேர் ஜெயிலில் உள்ளார்கள். அவர்களை சீனா போல வேலைவாங்கி சிலவுகளை குறைக்கலாம். சீனாவில் பொருள் உற்பத்திகள் ஜெயில் வளாகத்திலேயே உள்ளன. சீனாவில் அவர்களை மருத்துகளை பரிசோதிக்க, உருப்புதானம் செய்ய வைக்ககூட உபயோகிக்கின்றார்கள். ஆனால் நாம் அந்த அளவிற்கு சென்று விடவும் கூடாது. நாம் உதாரணமாக ஊரை சுத்தமாக வைத்துக்கொள்ள அவர்களை பயன்படுத்தலாம்.. இந்த இடத்தில் "அவர் நான நன்னயம் செய்துவிடல்" நல்லது. ஆனால் இந்த தீவிரவாதியால் உயிரிழந்த மக்களின் குடும்பங்கள் நினைப்பது வேறோன்றாகவே இருக்கச்செய்யும்.
Rate this:
Share this comment
Cancel
sarathy - chennai,இந்தியா
22-நவ-201223:11:04 IST Report Abuse
sarathy என்ன உலகம் இது. இந்திய நாட்டின் மதிப்பை சீர்குலைக்கிறார்கள் இந்த அரசியில் மக்கள். இறந்தது நூற்று அறுபத்தாறு பேர். அவர்களின் குடும்பங்களுக்கு எவ்வளவு நஷ்ட ஈடு கொடுத்தது இந்த அரசு? முன்று லட்சம் ? ஆனால் தவறு செய்த கசாபிற்கு எவ்வளவு செய்தது இந்த நாடு.. ஐம்பது கோடி. பாருங்கள் அப்பாவி மக்களின் உயிருக்கு விலை முன்று லட்சம், நூற்று கணக்கானோரை கொல்பவர்களுக்கு ஐம்பது கோடி செலவு. புதிதாக கட்டப்பட்ட சிறை, துணி, பாதுகாப்பு, கேட்கிற சாப்பாடு, நாட்டின் பயம். இது தவிர வேறு ஒரு ஆதரவு இந்த உலகில் எந்த நாட்டிலும் கொடுத்திருக்க மாட்டார்கள். அரசியல் சட்டம் அனைத்துமே மாற்றப்பட வேண்டிய ஒன்று. அப்படி நடந்தால்தான் அமைதி மக்கள் ஒட்ற்றுமை, நாட்டின் வளர்ச்சி இருக்கும். அப்பாவி மக்களும் இவர்கள் போன்று நன்கு வருடம் உயிரோடு வாழ்ந்தால் போதும் என்று நினைத்தாள் நாடு தங்கது இதை இந்த முட்டாள் வழிநடதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
suresh - tirupur,இந்தியா
22-நவ-201222:45:30 IST Report Abuse
suresh Like It Thanks Alert, I LOVE INDIA
Rate this:
Share this comment
Cancel
sarath - india,இந்தியா
22-நவ-201222:39:26 IST Report Abuse
sarath அப்போது உயிரின் மதிப்பு அவனுக்கு தெரியவில்லை. இப்போது அரசுக்கும் தெரியவில்லை. விலங்குகளையே மதிக்கும் நம் நாட்டில் மனிதனை மதிக்க ஒருவரும் இல்லையா? அகிம்சையால் அனைத்து மக்களின் மனதை வென்ற காந்தி பிறந்த நம் நாட்டில் தூக்கு கொடுமையானதே! நிரந்தர ஆயுள் தண்டனையே போதுமானது.
Rate this:
Share this comment
Cancel
முபாரக் - ஜெத்தாகே.ஸ்.எ,இந்தியா
22-நவ-201220:57:09 IST Report Abuse
முபாரக் மெகா GOOD
Rate this:
Share this comment
Cancel
BALACHANDAR - earkolpatti,இந்தியா
22-நவ-201220:29:09 IST Report Abuse
BALACHANDAR Enjoy indians
Rate this:
Share this comment
Cancel
vijay - Bahrain,இந்தியா
22-நவ-201220:20:09 IST Report Abuse
vijay கசாப் ஒரு அப்பாவி. அம்ப தண்டிச்சு புண்ணியம் இல்லை. எய்தவன் எவன்?
Rate this:
Share this comment
Cancel
ibrahim - malaysia,இந்தியா
22-நவ-201219:42:41 IST Report Abuse
ibrahim that is okkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk.............................
Rate this:
Share this comment
Cancel
pms - chennai,இந்தியா
22-நவ-201219:41:49 IST Report Abuse
pms பாவம்...... எல்லோரும் சேர்ந்து............கேசாப் பலிகடா..... இதிலிருந்து குஜராத் தேர்தல் வருகிறது. என்பதை உணர முடிகிறது..............முதலவர் மோடி மூலமாக குஜராத் மக்களுக்கு கூட நன்மை கூடாது. என்று காங்கிரஸ் எப்படி எல்லாம் யோசிக்குது'........... மக்களே உஷார்......................................... காங்கிரஸ் இந்து முஸ்லிம் மக்களை மோத வைத்து வேடிக்கை பார்கிறது.
Rate this:
Share this comment
Cancel
vijaya raghavan - tuticorin,இந்தியா
22-நவ-201219:09:03 IST Report Abuse
vijaya raghavan death sentence for merciless criminals
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.