Advertisement
ராஜிவ் கொலையாளிகளை தூக்கிலிட இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2012,23:51 IST

சென்னை:முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகள் மூவருக்கு விதிக்கப்பட்ட, தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்ற, கோரிக்கையை வலியுறுத்தி, சத்தியமூர்த்தி பவனில், மத்திய சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரசார், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மும்பை தாக்குதலில் ஈடுப்பட்ட, பாகிஸ்தான் பயங்கரவாதி கசாப்பை, நேற்று காலையில் தூக்கிலிட்டதற்கு, மகிழ்ச்சி தெரிவித்து, இளைஞர் காங்கிரசார், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், தமிழக காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
மத்திய சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜீவன் பிரசாத்குமார் தலைமையில், ராம்குமார், ஜெயக்குமார் உட்பட, 50 பேர் திரண்டு வந்து, முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகள், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும், தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ராஜிவ் கொலையாளிகளுக்கு, விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்ற கோஷத்தையும், இளைஞர் காங்கிரசார் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தினால் சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு ஏற்பட்டது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.